வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடும் ஈஸ்வரி, பிரச்சனைகளை சமாளிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, தன்னுடைய அம்மாவின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு செல்லாததை பற்றி வருத்தத்துடன் பேசி இருந்தார். உடனே நிதிஸ், அப்பா சொல்வதை தான் கேட்க வேண்டும். அதுதான் எங்கள் வீட்டில் வேதவாக்கு என்பது போல பேசுவதால் இனியா அமைதியாகி விட்டார். பின் தன் அண்ணன் எழில் உடன் தன்னுடைய அம்மாவை பார்க்க வருகிறார் இனியா. அங்கு ஹோட்டல் சின்னதாக இருப்பதை பார்த்து இனியாபயங்கரமாக ஷாக் ஆனார். ஏன்? என்னானது? என்று கேட்டார். உண்மையை சொல்லாமல் பாக்கியா ஏதேதோ சொல்லி சமாளித்தார்.
பின் இனியா, தன் அண்ணனிடம் சத்தியம் வாங்கி உண்மையை கேட்டார். வேறு வழியில்லாமல் எழில், இரண்டு ரெஸ்டாரண்டையும் இழந்த விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டவுடன் இனியா ஷாக் ஆகி தன்னுடைய அம்மாவை பார்க்க மீண்டும் வந்தார். அப்போது இனியா, எனக்காகத்தான் ரெஸ்டாரன்ட்டை இழந்தீர்களா? அவர்கள் உங்களை மிரட்டி வாங்கினார்களா? என்றெல்லாம் கேட்டார். ஆனால், பாக்கியா உண்மையை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் வீட்டிற்கு சென்ற இனியா, சுதாகரிடம் ரெஸ்டாரண்டை பற்றி விசாரித்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் சுதாகர், நான் எதுவும் உங்க அம்மாவிடம் கேட்டு வாங்கவில்லை. அவர்களாக தான் கிப்டாக கொடுத்தார். அவர்கள் தேவையில்லாமல் உன்னிடம் சொல்லியிருப்பார் என்று சொன்னார். உடனே இனியா, அம்மா எதுவுமே சொல்லவில்லை. கிப்டாக தான் கொடுத்தேன் என்று சொன்னார். பின் சுதாகருக்கு பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட நிதிஸ், அப்பாவிடம் மன்னிப்பு கேள். நீ அப்பாவை எதிர்த்து பேசுவாயா? என்று இனியாவை திட்டி இருந்தார். அதற்கு இனியா, எதுவும் பேசாமல் சுதாகரிடம் மன்னிப்பு கேட்டு அமைதியாகி இருந்தார். கடைசி வரை இனியாவிற்கு ரெஸ்டாரன்ட் விஷயத்தில் நடந்த உண்மை தெரியவில்லை.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் வியாபாரத்தை எல்லாம் முடித்துவிட்டு கடையை பாக்கியா மூட போனார். அங்கு வந்த கவுன்சிலர், நான்வெஜ் செய்ய சொல்லி குடித்துவிட்டு தகராறு செய்தார். பாக்கியா- செல்வி இருவருமே எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்கள் கேட்டதை செய்து கொடுத்தார்கள். கடையிலேயே உட்கார்ந்து குடித்தார்கள். அப்போது வந்து செல்வியின் மகன் ஆகாஷ், அவரிடம் கேள்வி கேட்கும் போது அவரையுமே எதிர்த்து பேசி சண்டை போட்டார்கள். என்ன சொல்வது என்றே புரியாமல் பாக்கியா அமைதியாக இருந்தார் பின் வேலை முடித்து வீட்டிற்கு பாக்கியா வந்தார். ஆனால், ஈஸ்வரி கதவை திறக்காமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ரொம்ப நேரமாக கதவைத் தட்டியும் ஈஸ்வரி வேண்டுமென்றே திறக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் எழில், அம்மா வீட்டுக்கு வராதது பற்றி ஈஸ்வரிடம் கேட்கிறார். அவர் எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். பின் ரொம்ப நேரம் கழித்து எழில் வெளியே வந்து பார்த்தால் பாக்கியா இருக்கிறார். பின் ஈஸ்வரி, லேட்டாக வந்ததால் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார். அப்போது ஈஸ்வரி, லேட்டாக வந்தால் கதவை திறக்க மாட்டேன். எந்த பொம்பளையாவது இப்படி செய்வார்களா? என்று ரொம்ப மோசமாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார். மறுநாள் காலையிலும் பாக்கியா நேரத்துடன் இருந்து வேலைக்கு சென்று விடுகிறார். இதனால் வீட்டில் ஈஸ்வரி, பெரிய பஞ்சாயத்தை செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே ஈஸ்வரி கேட்கவில்லை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, கவுன்சிலர் செய்த வேலையை கடையின் ஓனரிடம் சொல்கிறார். ஆனால், அவர் இதெல்லாம் நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவுடன் பாக்கியா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது