இனியாவால் செல்வியை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி, வேதனையில் உறைந்த பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' கோபி, எழில் சினிமாத்துறையில் இருக்கிறான். அவன் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் எடுத்துச் சொல்ல புரிய வைக்க பார்த்தார். ஆனால், ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் இனியா, ஆகாசிடம் போன் பேசி கொண்டிருந்தார். அந்த சமயம் பாக்கியா வந்தவுடன் போனை இனியா ஆஃப் பண்ணி விட்டார். பின் பாக்கியா தூங்கிய பிறகு ரகசியமாக இனியா போன் பேசி இருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்ட் செல்வதற்காக மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதற்குப்பின் இனியா கல்லூரிக்கு நேரமாகவே கிளம்புகிறார். பின் ஒவ்வொருவரிடமும் காசு வாங்கிப் போனார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர், இனியாவை தன்னுடைய காரிலேயே அழைத்து சென்றார். ஆனால், இனியா புக் வாங்கனும் என்று இறங்கிக் கொண்டார். இனியாவிற்கு தெரியாமல் கோபி பாலோ செய்தார். அப்போது ரெஸ்டாரண்டில் இனியா, ஆகாசுடன் பேசி இருப்பதை கோபி பார்த்தார். பின் கோபியை பார்த்தவுடன் இனியா-ஆகாஷ் இருவரும் ஷாக் ஆனார்கள்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி, இதற்கு தான் இங்கு வந்தாயா? கிளம்பு என்று இனியாவின் கையைப் பிடித்து அழைத்தார். ஆகாஷ் பேச வந்ததற்கும் அவனை திட்டி விட்டு அங்கிருந்து இனியாவை அழைத்துக் கொண்டு வந்தார். அதற்குப்பின் கோபி, உன்னுடைய போனை கொடு என்று வாங்கி செக் பண்ணி இருந்தார். அதில் ஆகாசுடன் அவர் பேசி இருப்பதை பார்த்து ரொம்பவே கோபி கோபப்பட்டார். இனியா மன்னிப்பு கேட்டும் கெஞ்சி அழுதும் கோபி கேட்கவில்லை.
நேற்று எபிசோட்:
பின் வீட்டிற்கு இனியாவை கோபி அழைத்து வந்ததை பார்த்து எல்லோருமே என்ன ஆனது? ஏன் இனியா வந்துவிட்டாள்? என்று கேட்க, பாக்கியா வரட்டும் என்றார் கோபி. அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்தார். உடனே கோபி, இனியா ஒரு பையனை காதலிக்கிறார் என்று அவருடைய மொபைலை காண்பித்தவுடன் பாக்கியா ஷாக் ஆனார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தார். கோபி, யாரை காதலிக்கிறார் தெரியுமா? நம் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஷை தான் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் இன்னும் எல்லோருக்குமே அதிர்ச்சி ஆனது. என்ன சொல்வது என்று புரியாமல் உறைந்து போனார் பாக்கியா.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் மொத்த வீடுமே ஷாக் ஆகி கோபப்படுகிறார்கள். பாக்கியா என்ன சொல்வது என்றே புரியாமல் உறைந்து விடுகிறார். ஈஸ்வரி, இனியாவை பயங்கரமாக திட்டி அடிக்கிறார். செழியன்- கோபி இருவருமே, ஸ்டேட்டஸ் தேவையில்லை. வேலைக்காரி பையன் ஒரு ஆளா என்றெல்லாம் ரொம்ப மோசமாக செல்வியையும், ஆகாஷை திட்டுகிறார்கள். உடேன ஈஸ்வரி, இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். பிள்ளையை ஒழுங்காக கவனிக்க வேண்டும். எழிலுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் தான் இந்த விளைவு.
சீரியல் ட்ராக்:
எல்லாத்திற்குமே காரணம் பாக்கிய தான் என்று வழக்கம்போல அவள் மீது பழியை போடுகிறார். அந்த சமயம் பார்த்து செல்வி வீட்டுக்கு வருகிறார். உடனே ஈஸ்வரி- செழியன் இருவருமே உங்கள் மகன் செய்த வேலைக்கு என் கண்ணில் பட்டால் அடித்தே கொன்று விடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். பின் இனியா காதலிக்கும் விஷயத்தை சொல்லி செல்வியை பயங்கரமாக திட்டி அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்புகிறார்கள். பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த செல்வி, தன் மகனிடம் உண்மையை கேட்டு அவனை அடிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.