தாத்தாவின் 80வது பிறந்த நாளுக்கு அழைத்த ஈஸ்வரி, வர மறுத்த எழில், பாக்கியா என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் எழில், மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்றிருந்தார். ஆனால், எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷப்பட்டு தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்தார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி இருந்தார்.
இதை பார்த்த அமிர்தா, பாக்கியா இருவரும் எழிலுக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். மேலும், இந்த வாரம், அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்லி இருந்தார். இதனால் எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
அதற்கு ஈஸ்வரி, உன் பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான், இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று கேட்டு இருந்தார். உடனே பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொன்னார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியானார்கள்.
சீரியல் கதை:
பின் ரூமில் அமிர்தா- எழில் இருவரும் நடந்ததை பற்றி பேசி கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போக தயாராக வந்து இருந்தார்கள். இதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார். அமிர்தா- எழில் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து எல்லோருமே கதறி அழுது, வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்தும் எழில் தன் முடிவில் மாறவில்லை. அப்போது ஈஸ்வரி, நீ வெளியே போகக்கூடாது என்று தடுத்தும் எழில் கிளம்பி விட்டார். எல்லோரும் இதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
வழக்கம் போல் ஈஸ்வரி, நீ ஏன் எழிலை தடுக்கவில்லை? இனிமேல் நான் எதுவுமே பேசவில்லை என்று பாக்கியாவை திட்டிவிட்டு சென்று விடுகிறார். எழில் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். நேற்று எபிசோடில், இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழுகிறார். இதையெல்லாம் கேட்ட கோபி, அதிர்ச்சியாகி பாக்கியாவை திட்டி விட்டு அமிர்தாவுக்கு போன் செய்து இருந்தார். பின் எழில்-அமிர்தா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று விடுகிறார். வழக்கம் போல் பாக்கியா செய்தது தவறு என்பது போல எழிலிடம் பேசுகிறார். இதனால் எழிலுக்கு கோபம் வருகிறது.
https://www.youtube.com/watch?v=7Ko_uMpTBMY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மாமாவுக்கு 80-வது பிறந்தநாள் வருகிறது என்று பாக்கியா சொல்ல, இந்த சமயத்தில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டுமா? என்று தாத்தா சொல்கிறார். உடனே ஈஸ்வரி, எழில் விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறாய்? என்று கேட்டதற்கு, அவன் விருப்பம். அவன் வரும்போது வரட்டும், நான் போன் பண்ணி கூப்பிட மாட்டேன் என்று பாக்யா சொல்கிறார். கடைசியில் ஈஸ்வரி, எழிலுக்கு போன் செய்து உன் தாத்தாவுக்கு 80-வது பிறந்த நாள். கோயிலில் கொண்டாட இருக்கிறோம். நீ வா என்று கேட்டதற்கு, நான் வந்தால் உங்களுக்கு சங்கடமாக இருக்கும். நான் வரவில்லை பாட்டி என்றவுடன், நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விடுகிறார் ஈஸ்வரி.