இனியாவின் திருமணத்தை பற்றி பேசும் ஈஸ்வரி, பாக்கியா சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி

By subhashini · 5/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சிசிடி வீடியோவில் சுதாகர் தான் நிதிஷை கொலை செய்கிறார் என்று தெரிய வந்தது. அந்தப் பழியை இனியாவின் மீது போட தான் அந்த இடத்திற்கு இனியாவை போன் செய்து சுதாகர் வர வைத்து இருந்தார். பின் சுதாகரை பற்றி இனியா தெரிந்து கொண்டார். அதில், நிதிஷ் அவருடைய அம்மாவும் வசதியான கோடீஸ்வரர். நிதிஷின் அப்பா இறந்து விட்டார். சொத்திற்கு ஆசைப்பட்டு தான் நல்லவன் போல நடித்து சுதாகர் நிதிஷ் அம்மாவை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். ஆரம்பத்திலிருந்து நிதிஷ்-சுதாகருக்குமே செட்டே ஆகாது.
இதை அறிந்தவுடன் நிதீஷின் அம்மாவிடம் விசாரிக்க வேண்டும் என்று பாக்கியா சொன்னார்.

சுதாகருக்கு போன் செய்த ஆகாஷ் மிரட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தார். பின் சுதாகர் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் சென்ற பாக்கியாவை பார்த்தவுடன் நிதிஷின் அம்மா பயங்கரமாக கத்தி சண்டை போட்டார். பின் பாக்கியா வீடியோ ஆதாரத்தை காண்பித்து நிரூபித்தார். இதையெல்லாம் பார்த்து நிதிஷின் அம்மா பயங்கரமாக கதறி அழுதார். மறுநாள் காலையில் டிவியில் நிதிஷின் கொலை வழக்கில் சுதாகர் சம்மந்தப்பட்டது தெரிய வந்தது. அப்போது பாக்கியா நடந்ததை நினைத்து பார்த்தார். அதில் போலீஸிடம் பாக்கியா, தங்களுக்கு கிடைத்த ஆதாரத்தை காண்பித்தார்கள்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் சிசிடிவி வீடியோவை பார்த்த போலீஸ், இது எல்லாம் வைத்து சுதாகர் தான் கொலை செய்தார் என்று முடிவெடுத்துக் கொள்ள முடியாது. அந்த இடத்தில் நீங்களும் தான் இருந்திருக்கிறீர்கள். நான் சுதாகரை விசாரிக்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து எழில் சுதாகருக்கு உதவியாக இருந்த நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அந்த நபர், சுதாகர் தான் நிதிசை கொலை செய்தார் என்று உண்மையை சொன்னார். அப்போது நிதிஷ், போதை பொருளை வியாபாரம் செய்ய எடுத்து சென்றிருந்தார். அதை தட்டி கேட்க சுதாகர்-நிதிஷ் இருவருக்குமே சண்டை நடந்தது.

நேற்று எபிசோட்:

கோபத்தில் சுதாகர், நிதிஷ் மண்டையில் அடித்து விட்டார். அந்த சமயம் பார்த்து இனியா வந்ததால் அந்த பழி இனியாவின் மீது போட்டு விட்டார். இதனால் போலீஸ், சுதாகரை தேடி தேடுகிறது. பின் நிதிஷின் அம்மாவும் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் சுதாகர் தான் என்று பேட்டியும் கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே கோபி மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியானதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து கோபி விடுதலை ஆகி வெளியே வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா தன்னுடைய தந்தை கோபியை பார்த்து ரொம்ப எமோஷனாக அழுது பேசுகிறார். கோபி, இனியாவிற்கும் மொத்த வீட்டிற்குமே ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்று காண்பிக்கிறார்கள். அதில் பாக்கியா, தன்னுடைய ரெஸ்டாரண்டை மீண்டும் மீட்டு விடுகிறார். வழக்கப்படி தன்னுடைய ரெஸ்டாரண்டில் பெண்களுக்கு எல்லாம் வேலை கொடுத்து தன்னுடைய ஆர்டரை பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து இனியா தன்னுடைய அம்மாவை புகழ்ந்து பேசுகிறார். அதற்கு பின் அமிர்தா, கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அப்போது பாக்கியா, ஆகாஷ் சப் கலெக்டர் ஆகி இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறது.

சீரியல் ட்ராக்:

பின் ஈஸ்வரி, ஆகாஷுக்கு இனியாவை திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்க, அதற்கு பாக்கியா, அதெல்லாம் தேவையில்லை. அவர்கள் இருவருமே நண்பர்களாக தான் பழகினார்கள். அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும் என்று சொல்கிறார். இதனால் ஈஸ்வரி அமைதியாகி விடுகிறார். இதையெல்லாம் வெளியில் நின்ற இனியா கேட்டு விடுகிறார். மறுநாள் காலையில் ஆகாஷ், பாக்கியா வீட்டிற்கு வந்து எல்லோருக்குமே ஸ்வீட் கொடுக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆகாஷ் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். பின் ஆகாஷை தங்களுடன் சேர்ந்தே சாப்பிட வைக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full