கோபி- பாக்கியாவுக்கு திருமணம் செய்ய நினைக்கும் ஈஸ்வரி, எழில் சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா, எல்லோரிடமும் எமோஷனலாக மன்னிப்பு கேட்டு சந்தோஷமாக பேசி இருந்தார். பின் எல்லோரிடமும் சொல்லிவிட்டு மொத்தமாகவே கோபியின் வாழ்க்கை விட்டு ராதிகா சென்று விட்டார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் எமோஷனலாக தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு கோபி சென்றார். பாக்கியா, தன்னுடைய புது ரெஸ்டாரண்டை திறப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
எல்லோருமே ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்காக வந்து விட்டார்கள். ஈஸ்வரி கையால் ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. இது எல்லாம் பார்த்து கோபி, ரொம்ப பெருமையாக பாக்கியாவை பற்றி பேசி இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் பாக்கியாவுக்கு வாழ்த்தும் சொல்லி பொக்கை கொடுத்தார். அதற்குப்பின் இனியா காதலிக்கும் நபர் ஆகாஷ் அங்கு வந்தார். அவர் வேறு யாருமில்லை செல்வியின் மகன் தான். வீட்டில் உள்ள எல்லோரிடமும் செல்வியின் மகன் ரொம்ப அன்பாக பேசி இருந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் ஈஸ்வரி, செழியன்-அமிர்தாவை மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்தார்கள். உடனே கோபி, எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசிக் கொள்ளலாம் என்று அவருடைய அம்மாவை சமாதானம் செய்தார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, செழியன் அவர் மாமியார் வீட்டில் இருப்பது சரி இல்லை. இங்கு வரட்டும் என்று கடுமையாக பேசி இருந்தார். உடனே பாக்கியா, அவர்கள் விருப்பப்படி நடக்கட்டும் என்று சொன்னார். அதற்குப்பின் இனியா செல்வியின் மகன் ஆகாஷை சந்திக்க அவருடைய வீட்டிற்கு போனார். ஆனால், ஆகாஷ் ரொம்ப பயந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்கு ஏற்ப செல்வி வீட்டிற்கு வந்தார். உடனே இனியா ஒளிந்து கொண்டார். ஒரு வழியாக இனியா தப்பித்து விட்டார். பின் எழில், எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன் என்று சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எழில், எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து என்னுடைய படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் புது பிளாட் கொடுத்து இருக்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வருத்தப்படுகிறார். அதன் பின் புது வீட்டுக்கு போக எழில் முடிவு செய்கிறார். ஆனால், ஈஸ்வரி தடுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
உடனே பாக்கியா, என் பிள்ளைகள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களை என் கைக்குள் அடக்கி வைக்க மாட்டேன் என்றெல்லாம் ஈஸ்வரியை எதிர்த்து பேசுகிறார். இன்னொரு பக்கம் இனியா, ஆகாஷ் உடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பாக்கியா- செல்வி இருவரும் பார்த்து விடுகிறார்கள். பாக்கியா, இனியாவிற்கு அறிவுரை செய்கிறார். இன்னொரு பக்கம் செல்வி, ஆகாஷ் இடம் போனில் மனசை அலைப்பாயாதே, படிப்பில் கவனம் செலுத்து என்று தன்னுடைய குடும்ப சூழ்நிலை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். இந்த முறையும் இனியா தப்பித்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
https://www.youtube.com/watch?v=toWvcOZkRu0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ஈஸ்வரி, பாக்கியாவை திருமணம் செய்வது பற்றி கோபியிடம் பேசுகிறார். கோபி முதலில் தயங்கினாலும் பின் தன்னுடைய அம்மாவின் கட்டாயத்தால் ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, செழியன்- எழிலிடம் கோபி, பாக்கியா திருமணம் பற்றி பேசுகிறார். உடனே கோபத்தில் எழில், என் அம்மா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளட்டும். ஆனால், வேறு ஒருவரை பண்ணிக் கொள்ளட்டும். இவரை செய்து கொள்ள நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று பேசுகிறார்.