பாக்கியாவிற்கு எதிராக பிள்ளைகளை கொம்பு சீவும் ஈஸ்வரி, அடுத்து என்ன? பாக்கியலட்சுமி

By subhashini · 17/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் செழியன், இன்னொரு முறை ஆகாஷ் இனியாவிடம் பேசுவது தெரிந்தால் நான் வெட்டி போடுவேன் என்று ஆவேசப்பட்டார். உடனே கோபத்தில் பாக்கியா செழியனை அடித்து விட்டார். இதனால் மொத்த பேருமே சாக்கு ஆகி இருந்தார்கள். அப்போது ஜெனி, எதற்காக செழியினை அடிக்கிறீர்கள்? அவன் என்ன தவறு செய்தான்? என்று கோபமாக பேசி இருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே செழியனுக்கு சப்போர்ட் செய்தார்கள். ஆனால் பாக்கியா சொல்ல வருவதை யாருமே கேட்கவில்லை. இதனால் கோபித்துக் கொண்டு ஜெனி-செழியன் இருவரும் உள்ளே சென்று விட்டார்கள்.

அதற்குப்பின் எழில், ஹாஸ்பிடலில் ஆகாசை பார்க்கப் போனார். அப்போது எழில், நடந்ததற்காக மன்னிப்பு கேட்டு செல்விக்கு ஆறுதல் சொன்னார். சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த எழிலிடம் கோபி- ஈஸ்வரி இருவரும் சண்டை போட்டார்கள். இதனால் வீட்டில் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து அதிகமானது. உடனே இனியா, என்னால் தான் எல்லா பிரச்சனையும் நடக்கிறது. தயவு செய்து யாரும் சண்டை போடாதீர்கள். இனி நான் ஆகாஷ் உடன் பேசமாட்டேன். நான் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்றால் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

மேலும், இனியா, தயவுசெய்து என்னால் இந்த வீட்டில் சண்டை வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள் என்று மண்டி போட்டு அழுதார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செல்வியை பார்த்து ஈஸ்வரி ஆவேசமாக கத்தி இருந்தார். கோபி, செழியன் எல்லோருமே செல்வியை திட்டி இருந்தர்கள். அப்போது செல்வி, இங்கு நான் சண்டை போட வரவில்லை. யாரிடமும் எனக்கு பேச விருப்பமில்லை. என் மகனின் ஹாஸ்பிடல் செலவிற்காக என் நகையை வாங்க வந்திருக்கிறேன் என்றவுடன் பாக்கியா நகையை கொண்டு வந்து செல்வியிடம் கொடுத்தார். பின் செல்வி, எல்லோரும் என்னை போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:

நான் கொடுத்திருந்தால் இனியா நிலைமையை யோசித்துப் பாருங்கள். நான் வளர்த்த பிள்ளை என்று தான் அமைதியாக இருக்கிறேன். பணம் காசு இல்லை என்றாலும் மரியாதையாக நான் வாழ்கிறேன் என்று சொன்னார். அதற்கு பின் கோபி, நீ செல்வியுடன் பேசாதே. உன்னுடைய கேரியரில் கவனம் செலுத்து, பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கோபத்தில் பாக்கியா, பிள்ளைகளை எனக்கு பார்க்க தெரியும். நீங்கள் எப்போது இந்த வீட்டை விட்டு போவீர்கள்? என்று கேட்டதற்கு, என் மகள் வாழ்க்கையை செட்டில் செய்யறவரையும் நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கோபி சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, ஆகாஷை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் சென்றிருக்கிறார். அங்கு செல்வி, என் மகனின் நிலைமையை பார்த்தீர்களா! என்று ரொம்ப எமோஷனலாக அழுது பேசுகிறார். பாக்கியாவும் செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் செலவை பார்த்துக் கொள்கிறாள். செல்வி வேண்டாம் என்றுமே பாக்கியா செய்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனி இடம் அமிர்தா, ஒருவரை அடிப்பது தவறு தானே, நீங்கள் எதற்கு ஆண்டியிடம் கோபப்பட்டீர்கள்? என்று கேட்கிறார். உடனே ஜெனி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் வந்த ஈஸ்வரி, அமிர்தாவை திட்டி விடுகிறார். உடனே பாக்கியா வந்தவுடன் எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம். உன்னால் தான் இந்த வீட்டில் நிம்மதி இல்லை என்று வழக்கம் போல பாக்கியாவை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அதற்குப்பின் எழில், பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த செழியன் இடம் எழில் நடந்ததை பற்றி பேசுகிறார். ஆனால், கோபப்பட்டு செழியன் எழிலிடம் சண்டைக்கு போனார். உடனே கோபி எழிலையும், பாக்கியாவையும் திட்டுகிறார். அடுத்த நாள் காலையில் எல்லோரும் அவரவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, வீட்டிற்கு சொந்தக்காரர்கள் வருகிறார்கள்.யாரும் எங்கும் போக வேண்டாம் என்று சொல்கிறார்கள். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இத்துடன் தொடர் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full