கோலாகலமாக நடந்து முடிந்த ஆகாஷ்-இனியா திருமணம், சோகத்தில் ஈஸ்வரி - பாக்கியலட்சுமி

By subhashini · 7/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, தன்னுடைய ரெஸ்டாரண்டை மீண்டும் மீட்டு விட்டார். வழக்கப்படி தன்னுடைய ரெஸ்டாரண்டில் பெண்களுக்கு எல்லாம் வேலை கொடுத்து தன்னுடைய ஆர்டரை பரபரப்பாக செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து இனியா தன்னுடைய அம்மாவை புகழ்ந்து பேசினார். அதற்கு பின் அமிர்தா, கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது பாக்கியா, ஆகாஷ் சப் கலெக்டர் ஆகி இருக்கும் விஷயத்தை சொன்னார்.

பின் ஈஸ்வரி, ஆகாஷுக்கு இனியாவை திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்க, அதற்கு பாக்கியா, அதெல்லாம் தேவையில்லை. அவர்கள் இருவருமே நண்பர்களாக தான் பழகினார்கள். அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும் என்று சொன்னார். இதனால் ஈஸ்வரி அமைதியாகி விட்டார். இதையெல்லாம் வெளியில் நின்ற இனியா கேட்டு விட்டார். மறுநாள் காலையில் ஆகாஷ், பாக்கியா வீட்டிற்கு வந்து எல்லோருக்குமே ஸ்வீட் கொடுத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆகாஷ் வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் ஆகாஷை தங்களுடன் சேர்ந்தே சாப்பிட வைத்தார்கள்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் ஆகாஷ், நான் கீழே உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என்கிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோருமே அதெல்லாம் வேண்டாம் நீ மேலே உட்கார்ந்து சாப்பிட சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து செல்வி, தன்னுடைய பிள்ளைகளையும் தன்னையும் அவமானப்படுத்தியதை நினைத்து பார்த்து உள்ளுக்குள் வருத்தப்படுகிறார் அதற்குப்பின் ஈஸ்வரி, இனியா விஷயமாக செல்வியிடம் பேசட்டுமா? என்று பாக்கியா இடம் கேட்கிறார். அதற்கு பாக்கியா வேண்டாம் என்கிறார். அப்போது செல்வி, என் மகன் கலெக்டர் ஆகாசுக்கு உங்கள் பேத்தி இனியாவை திருமணம் செய்து தருவீர்களா? என்று கேட்கிறார்.

நேற்று எபிசோட்:

இரு வீட்டாருமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதற்குப்பின் இனியா-ஆகாஷ் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. மண்டபத்தில் ஆகாஷ்- இனியா இருவருமே மனக்கோலத்தில் ஜோடியாக நிற்க, அதை பார்த்து பாக்கியா குடும்பமே சந்தோஷப்பட்டது. பின் இனியா திருமணத்திற்கு நிதிஷின் அம்மா வந்திருந்தார். அப்போது நிதிஷ் அம்மா, நான் வந்தால் பிரச்சனை ஆகாதா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை வாருங்கள் என்றார் பாக்கியா. பின் இனியாவை பார்த்து நிதிஷ் அம்மா கிப்ட் கொடுத்துவிட்டு இனியா நல்ல பெண். அவளை நன்றாக பார்த்துக் கொள் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் இனியா, ஆகாஷின் திருமணம் கோலாகலமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கிறது. பின் திருமணத்திற்காக ராதிகா, மையு வந்திருக்கிறார்கள். ராதிகாவை பார்த்து கோபி அன்பாக பேசி வரவேற்கிறார். அதற்குப்பின் இனியாவை பார்த்து ராதிகா வாழ்த்துக்கள் சொல்கிறார். பின் பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோரிடமே ராதிகா அன்பாக பேசுகிறார். அதற்குப்பின் இனியா- ஆகாஷ் திருமணம் சிறப்பாக நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு இனியா- ஆகாஷ் சாப்பாடு போது ஒருவர் ஒருவர் பாசமாக ஊற்றிக் கொள்வதை பார்த்து பாக்கியா, கோபி, ராதிகா எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் எல்லோருமே பாக்கியா வீட்டிற்கு போய் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா -ஆகாஷ் கிளம்புகிறார்கள். உடனே அமிர்தா-எழில், செழியன்-ஜெனி ஆகியோர் தங்கள் வீட்டிற்கு கிளம்புகிறார்கள். இப்படி எல்லாருமே கிளம்புவதால் ஈஸ்வரிக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது எல்லோரையும் அங்கேயே ஈஸ்வரி தங்க சொல்கிறார். அதற்கு கோபி, எல்லோரும் அவர்கள் வேலையை பார்க்கட்டும். லீவ் கிடைத்தால் இங்கே வரட்டும். கவலைப்பட வேண்டாம் என்று தன்னுடைய அம்மாவிற்கு ஆறுதல் சொல்கிறார். பின் சந்தோஷமாக எல்லோரையும் வழி அனுப்பி வைக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full