தன் படத்திற்கு எழில் வைத்த டைட்டிலால் ஆத்திரத்தில் கோபி, ஆனந்தத்தில் அழும் பாக்யா- பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, எல்லோரையும் தன் பக்கம் இழுத்து பாக்யாவை தனிமரம் ஆக்கி அழிக்காமல் விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச, ராதிகா அறிவுரை சொல்லியும் ஏற்றுக்கொள்ளவில்லை. எழில், தன்னுடைய படத்திற்கு பூஜை போடுவதைப் பற்றி வீட்டில் சொல்ல, எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் கோபி, தயாரிப்பாளரிடம் பூஜைக்கு பாக்கியா வரக்கூடாது என்று சொல்ல, தயாரிப்பாளரும் ஒத்து கொண்டார். இன்னொரு பக்கம் பாக்கியா, ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்தார்.
இதை எப்படியாவது சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று அந்த செப்பும் திட்டம் போட்டார். பின் கோபி- புதுசெப் மீண்டும் பாக்யாவின் புது ஆர்டரை எப்படியாவது ஒழித்து கட்டி இந்த முறை எழ முடியாத அளவிற்கு பண்ண வேண்டும் என்று பேசி கொண்டு இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து செந்தில், கோபியை திட்டி இருந்தார். ஆனால், அவர்கள் இருவரும் கேட்கவில்லை. மறுநாள் தன்னுடைய ஆர்டருக்கு தேவையான வேலையெல்லாம் பாக்யா மும்முரமாக செய்தார். ஆனால், அந்த செப் சொல்வதை பாக்கியா எதுவும் கேட்கவில்லை.
பாக்கியலட்சுமி சீரியல்:
இதெல்லாம் பார்த்து அவர் கடுப்பாகிறார். செல்வியும் அந்த செப்பின் மேலே கண் வைத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே மும்முரமாக ரெடியாகி கிளம்புகிறார்கள். ஈஸ்வரி வரவில்லை. பாக்கியா தவிர எல்லோரும் பூஜை நடக்கும் இடத்திற்கு எல்லோருமே வந்து விட்டார்கள். எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று எபிசோட்டில் தயாரிப்பாளர், படத்திற்கு தேவையான எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்று சொல்ல, எழில் ரொம்பவே பதறுகிறார்.
நேற்று எபிசோட்:
அவர் வந்தால் பூஜை நடக்காது. படம் எடுக்க மாட்டேன் என்று சொல்ல எழிலால் எதுவுமே பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த கோபி, இது நான் சொன்னது தான். உன்னுடைய அம்மா இங்கே வரக்கூடாது என்று மிரட்ட எழிலுக்கு பயங்கர கோபம் வருகிறது. என்னுடைய அம்மா வருவார் என்று எழில் சொல்லியுமே, தயாரிப்பாளர்-கோபி இருவருமே ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின் தனியாக சென்று எழில், தன்னுடைய அம்மாவை பற்றியும், அவர் சொன்ன வார்த்தைகளை பற்றியும் நினைத்து புலம்பி அழுதார்.
இன்றைய எபிசோட்:
அந்த சமயம் வந்த பாக்கியா, எல்லோரிடமும் பேசிவிட்டு எழிலை விசாரித்தார். எழில் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக இருந்தார். உள்ளே போகலாம் என்று பாக்கியா சொல்லும்போது, நீ உள்ளே வர வேண்டாம். நீ இங்கே இருக்க வேணாம். கிளம்பி போ என்று சொல்ல பாக்கியாவுக்கு ஒண்ணுமே புரியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், நீ உள்ளே வந்தால் பூஜை நடக்காது. படம் எடுக்க முடியாது என்று எழில் சொல்ல, சும்மா விளையாடாதே வா போலாம் என்று பாக்கியா சொல்கிறார். உடனே எழில், பாக்கியா கையைப் பிடித்து தயவு செய்து இந்த இடத்தை விட்டுப் போங்கள். நான் வாழ்க்கையில் முன்னேறனும் என்று நினைத்தால் இந்த இடத்தை விட்டு போங்கள் என்று சொல்லி அழ, பாக்கியாவும் மனம் உடைந்து அழுது கொண்டு வெளியே போகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் எழில், தன் படத்திற்கான டைட்டிலை திறக்கிறார். அதில் பாக்கியலட்சுமி என்று பெயர் இருந்தது. அதை பார்த்த உடனே எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், கோபி ஷாக் ஆகிறார். பின் தன்னுடைய அம்மாவை பற்றி ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் எழில் பேசுகிறார். இதையெல்லாம் வெளியில் நின்று கேட்ட பாக்யா ஆனந்தத்தில் அழுகிறார். கோபிக்கு முகமே இல்லை. பயங்கரமாக எழில் மீது கோபப்படுகிறார். சந்தோஷத்தில் பாக்கியா அங்கிருந்து செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.