கோபி விரித்த வலையில் எழில் சிக்கினாரா? பாக்யா நிலைமை என்ன- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, செழியன், இனியா என் பக்கம் வந்து விட்டார்கள். எழிலையும் எப்படியாவது என் பக்கம் இழுத்து பாக்யாவை தனிமரம் ஆக்குவேன். அவளை அழிக்காமல் விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச, ராதிகா அறிவுரை சொல்லியும் ஏற்றுக்கொள்ளவில்லை. எழில், தன்னுடைய படத்திற்கு பூஜை போடுவதைப் பற்றி சொல்ல, எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் கோபி, தயாரிப்பாளரிடம் பூஜைக்கு வருபவர்களின் பட்டியல் வாங்கி பார்த்து தன்னுடைய அம்மா பெயர் இல்லை என்பதால் வருத்தப்பட்டு அவரை வர வைக்க சொன்னார்.
பின் பாக்கியா பூஜைக்கு வரக்கூடாது என்று கோபி சொல்ல, தயாரிப்பாளரும் ஒத்து கொண்டார்.
இன்னொரு பக்கம் பாக்கியா, ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆஃபர் அறிமுகம் செய்தார். ஆனால், ரொம்ப கம்மி விலைக்கு சாப்பாடு கொடுப்பதால் எல்லோருமே வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதை எப்படியாவது சுதப்பி பாக்கியாவை மாட்டி விட வேண்டும் என்று அந்த செப்பும் திட்டம் போட்டார். நேற்று எபிசோட்டில் கோபி- புதுசெப்- செந்தில் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்:
அப்போது பாக்யாவின் புது ஆர்டரை எப்படியாவது ஒலித்து கட்டி இந்த முறை எழ முடியாத அளவிற்கு பண்ண வேண்டும் என்று கோபி சொல்லி இருந்தார். உடனே அந்த செப்பும் ஒத்துக்கொள்கிறார். இதை எல்லாம் பார்த்து செந்தில், கோபியை திட்டி இருந்தார். ஆனால், அவர்கள் இருவரும் கேட்கவில்லை. மறுநாள் தன்னுடைய ஆர்டருக்கு தேவையான வேலையெல்லாம் பாக்யா மும்முரமாக செய்தார். ஆனால், அந்த செப் சொல்வதை பாக்கியா எதுவும் கேட்கவில்லை.
நேற்று எபிசோட்:
இதெல்லாம் பார்த்து அவர் கடுப்பாகிறார். செல்வியும் அந்த செப்பின் மேலே கண் வைத்து இருக்கிறார். இன்னொரு பக்கம் படத்தின் பூஜைக்காக எல்லோருமே மும்முரமாக ரெடியாகி கிளம்புகிறார்கள். ஈஸ்வரி வரவில்லை. பாக்கியா தவிர எல்லோரும் பூஜை நடக்கும் இடத்திற்கு எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது கோபி, பாக்கியா இங்கு வரக்கூடாது என்ற கண்டிஷனை எழிலிடம் சொல்லிவிடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்ல, அவரும் ஒத்துக்கொண்டார்.
இன்றைய எபிசோட் :
எழில் தன் அம்மாவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தயாரிப்பாளர், படத்திற்கு தேவையான எல்லா டாக்குமென்டில் கையெழுத்து வாங்கி, இந்த பூஜைக்கு உங்களுடைய அம்மா வரக்கூடாது என்று சொல்ல, எழில் ரொம்பவே பதறுகிறார். அவர் வந்தால் பூஜை நடக்காது. படம் எடுக்க மாட்டேன் என்று சொல்ல எழிலால் எதுவுமே பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த கோபி, இவரை நான் தான் உன்னை வைத்து படம் எடுக்க கேட்டேன். நாங்கள் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும். உன்னுடைய அம்மா இங்கே வரக்கூடாது என்று மிரட்ட எழிலுக்கு பயங்கர கோபம் வருகிறது.
சீரியல் ட்ராக்:
என்னுடைய அம்மா வருவார் என்று எழில் சொல்லியுமே, தயாரிப்பாளர்-கோபி இருவருமே ஏற்றுக் கொள்ளவே இல்லை. பின் தனியாக சென்று எழில், தன்னுடைய அம்மாவை பற்றியும், அவர் சொன்ன வார்த்தைகளை பற்றியும் நினைத்து புலம்பி அழுகிறார். அந்த சமயம் வந்த பாக்கியா, எல்லோரிடமும் பேசிவிட்டு எழிலை விசாரிக்கிறார். எழில் எதுவுமே பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். உள்ளே போகலாம் என்று பாக்கியா சொல்லும்போது, நீ உள்ளே வர வேண்டாம். நீ இருக்க வேணாம். கிளம்பி போங்கள் என்று சொல்ல பாக்கியாவுக்கு ஒண்ணுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.