ரெஸ்டாரண்டை விட்டு வெளியே அனுப்பிய சுதாகர், பாக்கிய நிலைமை என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியாவை பார்த்ததால் பாக்கியாவால் எதுவும் பேச முடியாமல் கோபத்தை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே இனியா வந்தது நினைத்து சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எல்லோருக்குமே பாக்கியா சமைத்து பரிமாறினார். அப்போது இனியா, ரெஸ்டாரண்டரைப் பற்றி கேட்டார். ஆனால், பாக்கியா எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டார். பின் இனியா கிளம்பியவுடன் பாக்கியா, நான் பயந்தது போலவே நடந்து விட்டது.
இப்போ உங்கள் சம்மந்தி ரெஸ்டாரண்டிற்கு வந்து, எனக்கும் ரெஸ்டாரண்டிற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார். நான் இனியாவிற்கே மொத்தமாக எழுதிக் கொடுத்தது போல டாக்குமெண்ட்டை மாற்றிவிட்டார். நான்தான் முட்டாள் என்று சொன்னீர்கள். ஆனால், அவர் உங்கள் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டார். நான் பயந்தது போலவே நடந்து விட்டது என்று ஆக்ரோசமாக கத்தி புலம்பி கொண்டிருந்தார். ஆனால், ஈஸ்வரி- செழியன்- கோபி மூவருமே பாக்கியா சொல்வதை நம்பவே இல்லை. பாக்கியா மன வேதனையில் எல்லோரிடமும் புலம்பி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் கோபி, நான் சம்மந்தி இடம் இதைப் பற்றி பேசுகிறேன் என்று ஈஸ்வரிடம் சொன்னார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கோபி-செழியன் இருவருமே சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது அவர், சட்டப்படி ரெஸ்டாரண்டை பாக்கியா பெயரிலேயே வைத்து பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் வேறு வழியில்லாமல் தான் இனியா பேருக்கு மாற்றினோம். இதை நான் சம்மதியிடம் சொல்லி பார்த்தேன். ஆனால், அவர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை. நான் உங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. உங்கள் மகள் மீதுதான் இருக்கிறது என்று ஏதேதோ சொன்னார். இதை கோபி-செழியன் நம்பி விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் இதைப்பற்றி செழியன் சொன்னவுடன் பாக்யாவிற்கு நம்பிக்கையே வரவில்லை. அவர் இன்னும் கோபம் தான் பட்டுக் கொண்டிருந்தார். அதுக்கு பின் ரெஸ்டாரண்டில் செல்வி இடம் பாக்கியா, இனியா திருமணத்தையும் ரெஸ்டாரன்ட் விஷயத்தையும் பற்றி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். செல்வியும் மனதுக்குள் வேதனை வைத்துக்கொண்டு வெளியில் காண்பிக்காமல் அமைதியாக இருந்தார். அப்போது வந்த எழிலிடம் பாக்கியா, ரெஸ்டாரண்ட் பற்றி பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, ஒரு மாதம் டூர் செல்ல இருக்கிறார். இதை அறிந்த ஈஸ்வரி, செழியன் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த பாக்கியா எதைப் பற்றியும் கேட்காமல் வேதனையில் ரூமிற்கு செல்கிறார். இதை பார்த்த ஈஸ்வரி, பாக்கியாவை அழைத்து இனியா டூர் செல்வதை பற்றி சொல்கிறார். இருந்தாலுமே பாக்கியா எதுவும் சொல்லவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. மறுநாள் காலையில் பாக்கியா வீட்டிற்கு இனியா அவருடைய கணவருடன் வந்திருக்கிறார். பின் டூர் செல்வதை பற்றி பேச எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்ட்க்கு சென்ற சுதாகர், இங்கு ரெஸ்டாரண்டை மாற்றும் வேலை நடைபெறுகிறது. எல்லோரும் வெளியே செல்லுங்கள் என்று சொன்னவுடன் ஷாக் ஆகிறார்கள். அப்போது வந்த
பாக்கியா, மேனேஜ்மென்ட் என்னுடைய பொறுப்பு தானே, எதற்கு இப்படி எல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். சுதாகர், நீ மேனேஜ்மென்ட் பொறுப்பு எனக்கு தான். நீங்கள் வெறும் மேனேஜர் தான். இங்கு எல்லா முடிவையும் நான் தான் எடுப்பேன். இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா, எனக்கு ரெஸ்டாரண்டுக்கு நீங்கள் பணத்தை கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் இனியாவிடம் தான் கேட்க வேண்டும் என்று ரொம்ப ஏளனமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது