நேருக்கு நேர் மோதி கொண்ட பாக்யா- கோபி, அனல் பறக்கும் கதைக்களத்தில் அடுத்து என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைண்ட் கொடுத்ததால் போலீஸ் கோபியை கைது செய்தது. இதை பார்த்து ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். ராதிகா அம்மா மட்டும் தான் போலீஸிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு பின் வீட்டில் எல்லோரும் பாக்கியாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். இதனால் செழியன்- எழிலுக்கு இடையே சண்டை வந்தது. பின் கோபி செய்த வேலையை சொல்ல, செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பின் பாக்கியா, நான் செய்தது சரி தான் என்று சொன்னார்.
இதனால் கோபத்தில் ஈஸ்வரி, பாக்கியாவை திட்ட, செழியனும் தன்னுடைய அப்பாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். ஆனால், பாக்யா தன் முடிவில் இருந்து மாறவில்லை. இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கோபி, பாக்கியா பற்றி நிறைய குறை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது செப் ஆனந்த் உண்மையை சொன்னதால் போலீஸ் கோபி மீது கோபப்பட்டது. அந்த சமயம் வந்த செந்தில், கோபிக்கு ஆறுதல் சொல்லி ஜாமினில் எடுப்பதற்கு வேலையை பார்த்தார். பின்கோபி, ஜெயிலுக்கு போனதை நினைத்து செழியன்- ஈஸ்வரி- இனியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
அப்போது கேசை வாபஸ் வாங்கினால் தான் சாப்பிடுவேன் மூவருமே பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், பாக்கியா கேசை வாபஸ் வாங்க முடியாது. நான் செய்தது சரிதான் என்று உறுதியாக இருந்தார். இதனால் எல்லோருமே பாக்கியாவை திட்டி இருந்தார்கள். ஆனால், அதை பற்றி பாக்கியா கவலைப்படவே இல்லை. இதை அடுத்து பிரஸ்ஸில் நடந்ததை பாக்கியா பேட்டி கொடுக்க, ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார்.
பின் செந்தில் அழைத்து வந்த வக்கீல் ஜாமினில் கோபியை அழைத்து செல்கிறார். நேற்று எபிசோட்டில் கோபி பாக்கியாவின் மீது வன்மத்தை கொட்டிக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் டிவியில் கோபி- பாக்யா விவகாரம் தான் வைரலாகி கொண்டிருந்தது. ஆத்திரத்தில் ஈஸ்வரி பேச, பாக்யா, நான் செய்தது சரி. இடியே விழுந்தாலும் நான் என் முடிவிலிருந்து மாற மாட்டேன் என்று கோபப்பட்டு பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வெளியே வந்த கோபி, ராதிகாவிடம் பேச, அவர் பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார். இதனால் கோபிக்கு இன்னும் கோபம் அதிகமாகி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போனார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபி, பாக்கியா வீட்டில் பயங்கரமாக கத்தி சண்டை போடுகிறார்.
இன்றைய எபிசோட்:
செழியன்- இனியா இருவருமே அவருடைய அப்பாவை சமாதானம் செய்தும் அவர் கேட்கவே இல்லை. பின் பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசுகிறார். கோபி, உன்னைஅழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட, பாக்கியாவும், உங்களை ஜெயிலுக்கு அனுப்பியே தீருவேன் என்றும் சவால் விடுகிறார். இதையெல்லாம் ராதிகா என்று வெளியே பார்க்கிறார். அக்கம் பக்கத்தினர் எல்லோருமே வேடிக்கை பார்த்து அதை மொபைலிலும் வீடியோ எடுக்கிறார்கள். பின் செழியன்- இனியா இருவருமே பாக்கியாவை திட்டி சண்டை போட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் பாக்கியா, என்னை அழிக்க நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்று சொல்கிறார். ஈஸ்வரியுமே, கேஸை வாபஸ் வாங்க சொல்லியும் பாக்யா முடியாது என்றார். பின் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை செழியன் பார்த்து எல்லோரிடம் காண்பிக்க, எல்லோருமே அதை பார்த்து ஷாக் ஆகிறார்கள். பின் வழக்கம்போல பாக்கியாவால் இந்த பிரச்சனை என்று திட்டுகிறார்கள். ஆனால், பாக்கியா அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.