நேருக்கு நேர் மோதிக்கொண்ட ராதிகா-ஈஸ்வரி, கோபி எடுக்கும் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 6/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் நிலை அறிந்து ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகாவை ஈஸ்வரி உள்ளே விடவில்லை. உடனே எழில், பாக்கியா இருவருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. கோபத்தில் ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப தகாத வார்த்தையால் திட்டியதால் அவர் மனம் உடைந்து வெளியே வந்து விட்டார். பின் ராதிகா, நீங்கள் எல்லாம் ஒன்றாகி விட்டீர்கள் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்பினார். பாக்யாவின் சூழ்நிலையை ராதிகா கூட புரிந்து கொள்ளவில்லை.

அதன் பின் எப்படியோ போராடி ராதிகா உள்ளே சென்று கோபியை பார்த்தார். ஆனால், கோபி கண்ணிற்கு ராதிகா, பாக்யா போல் தெரிந்ததால் ரொம்ப நன்றி என்று சொல்ல, ராதிகா ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் பாக்கியா-ராதிகா இருவருமே உட்கார்ந்து பேசி இருந்தார்கள். அப்போது ராதிகா, நான் கோபியை திருமணமே செய்து இருக்க கூடாது. எங்களுக்குள் நிறைய சண்டை வருகிறது என்று ரொம்ப எமோஷனலாக பாக்கியா தோள் மீது சாய்ந்து அழுது இருந்தார்.

பாக்கியலட்சுமி:

உடனே பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தார். அதன் பின் வீட்டில் பாக்கியா, ஜெனி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஹாஸ்பிடலில் இருந்து வந்து ஈஸ்வரி, நீ ஏன் அங்கு இல்லை? நீதான் கோபியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, அது என்னுடைய வேலை இல்லை. ராதிகா தான் அவருடைய மனைவி என்று பாக்கியா சொன்னார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, உங்கள் மகனை பார்த்துகிற வேலை என்னுடையது கிடையாது.

நேற்று எபிசோட்:

ராதிகா தான் அதை செய்வார். அவர் தான் மனைவி என்று பேசி இருந்தார். இதனால் ஈஸ்வரி- பாக்கியா இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. ஒரு கட்டத்தில் பாக்கியா அங்கிருந்து கிளம்பி விட்டார். மறுநாள் காலையில் வீட்டிற்கு செழியன் வந்து விட்டார். அப்போது ஈஸ்வரி, கோபியை பார்க்க போக சொன்னார். உடனே பாக்கியா, முடியாது. அது என்னுடைய வேலை இல்லை. ராதிகா தான் பார்க்கணும் என்று சொல்ல, ஈஸ்வரி இன்னும் கோபப்பட்டு திட்டி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலில் இருந்து என்னுடைய மகனை இந்த வீட்டிற்கு தான் அழைத்து வருவேன் என்று சொல்ல, பாக்யா முடியாது என்றார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. அதன் பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலுக்கு போனார். அதற்கு முன்பே ராதிகா, கோபியை பார்த்து பேசி இருந்தார். கோபி, இப்போதான் என்னை பார்க்க நேரம் வந்ததா? என்னுடைய குடும்பம் தான் எனக்கு உதவியது என்று ரொம்ப எமோஷனலாக பேச, ராதிகா வருத்தப்பட்டார். அந்த சமயம் வந்த ஈஸ்வரி, ராதிகாவை திட்டி வெளியே போக சொன்னார்.

https://www.youtube.com/watch?v=MRJLfFQMPqA

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி, கோபியை என்னுடைய வீட்டிற்கு தான் அழைத்து செல்வேன் என்று சொல்கிறார். உடனே பாக்யா, அதெல்லாம் முடியாது. ராதிகா தான் அழைத்து செல்வார். அவருக்கு தான் உரிமை இருக்கிறது என்று சொல்ல, ராதிகாவும் அவர் என்னுடன் தான் வருவார். அதை கோபி சொல்லட்டும் என்று சொன்னவுடன், நீயே கோபியிடம் போய் கேள் என்று ஈஸ்வரி சொல்கிறார். பின் ராதிகா, நம்ம வீட்டுக்கு போகலாம். நான் சண்டை போட மாட்டேன், வாருங்கள் என்று சொல்கிறார். அப்போது ஈஸ்வரி, அழுது கொண்டே நீ என்னுடன் வந்துவிடு என்று கேட்கிறார். கோபியால் எந்த முடிவுமே சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். பின் தன் அம்மாவுடன் செல்கிறேன் என்றார் கோபி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full