பாக்கியா வீட்டில் ப்ரச்சனை செய்த செல்வியின் கணவர், ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, கோபி இருவருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருந்தார்கள். பாக்கியா, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. எனக்கு இதில் விருப்பம் கிடையாது. இதை நான் நடக்க விட மாட்டேன் என்று ஆவேசமாக பேசி இருந்தார். கோபமாக ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு போனார். உடனே கோபி, இனியா என்னுடைய மகள். இந்த நிச்சயதார்த்தம் நடக்கும். அதை தடுக்க முடியாது என்று சொன்னார். அதற்குப்பின் ஈஸ்வரி, இனியாவை தயாராகி வர சொன்னார்.
இனியா யாருக்கும் தெரியாமல் போலீசுக்கு போன் செய்து தகவலை சொல்லி விட்டார். அதற்குப்பின் இனியா, எனக்காக நீங்கள் இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டது போதும். நீங்கள் எதுவும் பேசத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய அம்மா, அண்ணன்கள்,அண்ணிகளிடம் சொல்லி இருந்தார். நிச்சயதார்த்தமும் தொடங்கிவிட்டது. தட்டு மாற்றும்போது போலீஸ் வந்து, இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
போலீஸ், இனியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமே கிடையாது. கட்டாயப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, இது பொய்யான புகார். அவளுடைய அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் தான் அவர் இந்த மாதிரி செய்துவிட்டாள் என்றெல்லாம் சொன்னார். உடனே போலீஸ் விசாரனையில் இனியா, நான் தான் போன் செய்தேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நான் காதலித்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் தான் இந்த கட்டாய கல்யாணம்.
கடந்த வாரம் எபிசோட்:
என்னுடைய பாட்டியும், அப்பாவும் தான் எனக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொன்னவுடன் போலீஸ் ஈஸ்வரி, கோபியை மிரட்டி விட்டு சென்றார்கள். மாப்பிள்ளை வீட்டாருமே சென்று விட்டார்கள். அதற்குப்பின் இனியாவையும், பாக்கியாவையும் ஈஸ்வரி திட்டி இருந்தார். உடனே இனியா, இனி மேலும் நீங்கள் எனக்கு திருமண ஏற்பாடு செய்தீர்கள் என்றால் நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன் என்று சென்றார். எதுவும் பேச முடியாமல் ஈஸ்வரி-கோபி அமைதியாகி விட்டார்கள். அதற்கு பின் கோபி எல்லோரையும் வரவைத்து, இனி நான் இங்கு எதற்கு இருக்கணும். நான் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி பதறி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, இனிமேல் நான் யாருக்கும் தொந்தரவாக இருக்க மாட்டேன். என் பிள்ளைகளுடைய வாழ்க்கைக்காக தான் இருக்கிறேன். எங்கிருந்தாலும் என்னுடைய கவனம் உங்கள் மீதுதான் இருக்கும் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். ஈஸ்வரி, எவ்வளவு கேட்டுமே கோபி கேட்கவில்லை. உடனே ஈஸ்வரி, நானும் உன்னுடன் வருகிறேன் என்று தன் மகனிடம் புலம்புகிறார். புது வீட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கோபி செய்கிறார். அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்த செல்வின் கணவர், தன் மகனை அடித்ததற்காக நியாயம் கேட்டு சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
ஈஸ்வரியும் கோபியும் அவரை மோசமாக திட்டுகிறார்கள். இருந்தாலுமே அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் செல்வியின் கணவர் சண்டை போடுகிறார். உடனே எழில், அவரை ஏதோ சொல்லி அங்கிருந்து அழைத்து சென்று விடுகிறார். பிறகு பாக்கியா, செல்வியிடம் இதைப்பற்றி பேசுகிறார். செல்வி, அவர் வந்தது எனக்கு தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இதை நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.