இனியாவிற்கு கோபி செய்யும் திருமண ஏற்பாடு, பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பிஸ்னஸ் மேன் சுதாகர் உதவியாளர்கள், இந்த ரெஸ்டாரன்ட் விலைக்கு வேண்டும் என்று கேட்க, பாக்கியா ஒத்துக் கொள்ளவில்லை. இதை அவர்கள், சுதாகர் இடம் சொன்னார்கள். உடனே அவர், கோபப்பட்டு எப்படியாவது அந்த இடத்தை வாங்குங்கள். எனக்கு அந்த ரெஸ்டாரண்ட் வேண்டும் என்று சொன்னார். மறுபடியும் பாக்கியாவிடம் ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்க பேசி இருந்தார்கள். ஆனால், பாக்கியாவும் எழிலும் திட்டி அனுப்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் செழியன், கோபி, ஈஸ்வரி மூவருமே இனியாவிற்கு திருமணம் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பின் வீட்டில் பாக்கியா சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த சுதாகர், ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்குவதை பற்றி மீண்டும் பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பாக்யா, அது என் உழைப்பில் வந்தது. யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று ஆக்ரோஷமாக பேசி இருந்தார். இருந்தாலுமே விடாமல் சுதாகர் பேசி இருந்தார். ஓரு கட்டத்தில் பாக்கியா, வீட்டை விட்டு வெளியே போங்கள். இல்லை என்றால் போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டி இருந்தார். அவரால் எதுவுமே பேச முடியவில்லை வந்து விட்டார். அதற்குப்பின் சுதாகர், பாக்யாவின் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னார். அப்போது கோபி- பாக்கியா பிரிந்து இருப்பதையும், அவருடைய மகள் ரிப்போர்ட்டாக இருப்பதையும் சுதாகர் தெரிந்து கொண்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் வீட்டுக்கு வந்த தொழில் அதிபர் சுதாகர் பற்றி அமிர்தா, இனியாவிடம் சொன்னார். உடனே பாக்கியா, அதைப் பற்றி நான் பார்க்கிறேன். நீ படித்து நல்ல பெரிய ஆளாக ஆக வேண்டும் என்று சொன்னார். இனியாவும் தன் அம்மாவின் ஆசைக்காக வேலை பார்த்துக் கொண்டே படிக்க சம்மதித்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி, செழியன் மூவருமே இனியாவிற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் செந்தில், கோபிக்கு போன் செய்து சுதாகர் வீட்டிற்கு வர வைத்தார். சுதாகர், தன்னை பற்றி அறிமுகம் செய்து தன்னுடைய தொழில்,குடும்பத்தை பற்றியும் சொன்னவுடன் கோபி ஆச்சரியப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் உங்களுடைய மகளை என் மகனுக்கு கட்டி வைக்க சம்மதமா? நான் என் மகனுக்காக பெண் தேடுகிறேன். உங்களுடைய குடும்பம் நல்ல குடும்பம் என்று எல்லாம் சொல்ல, கோபி ஷாக் ஆனார் .பின் என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தார் கோபி. உடனே சுதாகர், என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு வீட்டில் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கோபி சொன்னார். உடனே சுதாகர், உங்களுடைய முடிவு சொல்லுங்கள் என்று கேட்க, கோபி சம்மதம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகரின் குடும்பம் ரொம்ப பிடித்து விடுவதால் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறார் கோபி. பின் வீட்டில் ஈஸ்வரி, செழியன் இடம் இதைப் பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார் கோபி. ஈஸ்வரிக்கும் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, செழியன், கோபி மூவருமே இனியா திருமணத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாக்கியாவிற்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் கோபி, பெரிய குடும்பம். நல்ல சம்மந்தம், இனியா வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்றெல்லாம் சொல்லி பேசுகிறார். அதற்கு பாக்கியா, இனியா இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். அவளுடைய விருப்பம் தான் என்று சொல்ல, கோபத்தில் ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டிவிட்டு செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே கோபியும், இந்த திருமணம் நடக்கும் என்று சவால் விட்டு செல்கிறார். அதற்குப்பின் கோபி, இனியாவை தனியாக சந்தித்து பேசுகிறார். அப்போது மாப்பிள்ளையின் போட்டோவை காண்பித்து திருமணத்தைப் பற்றி கோபி சொல்கிறார். உடனே இனியா, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. நான் மேற்கொண்டு படிக்கணும். என்னுடைய கேரியரில் சாதிக்கணும் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பின் வீட்டில் தன் தந்தை சொன்னதை பற்றி பாக்கியாவிடம் சொல்கிறார் இனியா. அந்த சமயம் பார்த்து செழியன், உன்னால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.