மீண்டும் பாக்கியாவை அழிக்க கோபி போடும் மாஸ்டர் பிளான், கோபத்தில் ராதிகா சொன்னது - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பிரச்சனைகளுக்கு பின் பாக்கியா மீண்டும் ரெஸ்டாரன்ட்டை திறந்திருந்தார். நடன மாஸ்டரை வைத்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று இனியா கேட்டதற்கு பாக்கியா ஒத்துக்கொள்ளவே இல்லை. உடனே தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி இனியா டான்ஸ் கிளாசில் சேர்ந்தார். இன்னொரு பக்கம் எழில், தன்னுடைய கதையைப் பற்றி தயாரிப்பாளிடம் சொல்ல அவரும் படம் எடுக்க ஒத்துக்கொண்டார். இதை எழில், அமிர்தா-பாக்கியாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டர் எடுப்பதை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருந்தார். அப்போ புது செப் மீண்டும் வேலைக்கு வந்து சேந்தார். டான்ஸ் கிளாஸில் இனியா மும்முரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதை கோபி- ராதிகா இருவருமே பார்த்து பாராட்டி இருந்தார்கள். பின் கோபி, புது செப்பை சந்தித்து பேசி இருந்தார். அப்போது பாக்கியா எடுக்கப் போகும் புது ஆர்டரிலும் பிரச்சனை செய்ய இருப்பதை பற்றி சொல்ல, கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். இனியாவின் டான்ஸ் காம்பிடிஷன் நடைபெற்றது.
பாக்கியலட்சுமி:
அதில் பைனல் ஆடிஷன் போட்டியில் இனியா வெற்றி பெற்றார் என்றவுடன் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இனியா, தன்னுடைய அப்பாவை தான் மேடை அழைத்து சென்று இருந்தார். அதோடு கோபி தான் இதற்கெல்லாம் காரணம் என்று புகழ்ந்து பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா மனம் உடைந்து அங்கிருந்து கிளம்பினார். இதை பார்த்த கோபி சந்தோஷப்பட்டு பாக்கியாவை வெறுப்பேத்தி பேசி இருந்தார். பின் இனியா, வெற்றி பெற்றதை தன்னுடைய பாட்டி இடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அப்போது பாக்கியா, எப்போது நீ டான்ஸ் கிளாசில் சேர்ந்தாய்? என்று கேட்டதற்கு, அப்பா தான் எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார் என்று இனியா பொய் சொன்னார். உடனே பாக்கியா கோபப்பட்டு பேச, செழியன் '
தடுத்து நிறுத்தி இனியாவை கூட்டிக்கொண்டு போனார். மறுநாள் காலையில் ஜெனி- அமிர்தா இருவருமே பாக்யா, ஈஸ்வரியை தயாராக சொல்லி அவர்களை வெளியில் அழைத்து போனார்கள். நேற்று எபிசோட்டில் சில வாரங்களாகவே நிறைய பிரச்சினையால் ஈஸ்வரி- பாக்யா இருவருமே மனம் உடைந்து இருப்பதால் அவர்களை வெளியே கூட்டிட்டு போனார்கள் ஜெனி-அமிர்தா.
இன்றைய எபிசோட்:
ஆரம்பத்தில் ஈஸ்வரி, பாக்கியா மறுத்தாலுமே அமிர்தா- ஜெனி கெஞ்சி கேட்டதால் ஒத்துக் கொண்டார்கள். பின் எல்லோருமே ஜாலியாக பீச்சில் விளையாடி சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது பாக்கியாவின் சமையலை கிண்டல் அடிக்கும் வகையில் ஈஸ்வரி பேசியிருந்தார். அதற்குப் பின் கேரம் போர்டு விளையாட்டில் குழந்தையைப் போல நால்வருமே சேர்ந்து விளையாடியிருந்தார்கள். இந்நிலையில் இன்று எபிசோட்டில் எல்லோருமே சந்தோஷமாக ஆட்டம் பாட்டம் என்று கவலையை மறந்து இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கோபி, தன் பிள்ளைகளை நினைத்து சந்தோஷத்தில் ராதிகாவிடம் பேசுகிறார். அப்போது செழியன், இனியா என் பக்கம் வந்து விட்டார்கள். எழிலையும் எப்படியாவது என் பக்கம் இழுத்து பாக்யாவை தனிமரம் ஆக்குவேன். அவளை அழிக்காமல் விடமாட்டேன் என்று வன்மத்தோடு பேச, ராதிகா அறிவுரை சொல்கிறார். ஆனால், அதை கோபி ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியில் பாக்யா, ஈஸ்வரி, ஜெனி எல்லோருமே வீட்டிற்கு சந்தோசமாக பேசி கொண்டு வருகிறார்கள். இவர்களைப் பார்த்த இனியா கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.