ராதிகாவின் பிரிவால் புலம்பி கதறும் கோபி, வேதனையில் பாக்கியா - பாக்கியலட்சுமி

By subhashini · 31/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா-ராதிகா குடும்பம் எல்லோருமே பிக்னிக் போனார்கள். சந்தோசமாக பாக்கியா குடும்பத்தினர் பிக்னிக்கை கொண்டாடி இருந்தார்கள். ஒவ்வொரு விளையாட்டிலுமே கலந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து ராதிகா சந்தோசப்பட்டார். இதை பார்த்து பாக்கியாவுக்கு சந்தேகம் வந்தது. பின் பாக்கியா- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, என்ன பிரச்சனை என்று கேட்க, ஒன்னும் இல்லை என்று ராதிகா சமாளித்தார். நல்லபடியாக பிக்னிக்கை முடித்து எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள்.

பின் ராதிகா, பாக்யா கொடுத்த கெடு இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நாம் கிளம்பலாம் என்று சொல்ல, மொத்த குடும்பமே ஷாக் ஆனது. ஈஸ்வரி- இனியா இருவருமே, எங்கள் அப்பா எங்களுடன் தான் இருப்பாரு என்று சொன்னார். உடனே கோபி, இங்கே நாம் இருக்கலாம். நான் பாக்கியாவிடம் பேசுகிறேன் என்று சொன்னார். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பாக்கியா, எல்லோரும் அவரவர்கள் இடத்தில் இருந்தால் தான் மரியாதை என்று சொன்னார். இதனால் ஈஸ்வரி கோபப்பட்டு பாக்யா- ராதிகாவை திட்டி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

பின் கோபி, ராதிகாவிடம் தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது கோபி, இங்கே இருக்கலாம். என்னுடைய நிலைமையை புரிந்துக்கொள் என்று எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தார். ராதிகா, நீங்கள் வரவில்லை என்றால் நானும் மையூவும் கிளம்புவது உறுதி என்று சொன்னார். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அப்பாவை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அவருக்கு பாக்யா ஆறுதல் சொன்னார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, ராதிகாவிடம் பேசி புரிய வைத்தாயா? என்று கேட்க, கோபி, ராதிகாவிடம் சொன்னேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

ஈஸ்வரி- இனியா எல்லோருமே ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். ஈஸ்வரி சாப்பாடு எல்லாம் போட்டு தன் மகன் இடம் மனம் உருகி பேசினார். பின் ராதிகா, நாங்கள் கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் கோபி, துணியை பேக் செய்ய போனார். உடனே ராதிகா, நீங்கள் வரவில்லை. நானும் மையூ தான் போகிறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருங்கள் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். கோபி, நீயும் எங்கே இருக்கிறாயா? ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னவுடன் ராதிகா, இல்லை என்னால் இங்கு இருக்க முடியாது.

இன்றைய எபிசோட்:

நான், மையூ கிளம்புகிறோம். உங்களுக்கு சந்தோஷம் எங்கேயோ அங்கே இருங்கள். என் முடிவில் நான் மாற மாட்டேன் என்று எல்லோரிடமும் பேசிவிட்டு கிளம்பி இருந்தார். இதை பார்த்து பாக்கியாவிற்கு கஷ்டமாக இருந்தது. இனியாவும் தான் செய்த தவறை உணர்ந்து ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டார். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா,மயூ இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்கள். அதை பார்த்து கோபி ரொம்பவே மனமுடைந்து விடுகிறார். பாக்கியாவுமே ரொம்ப வேதனைப்படுகிறார். ஆனால், ஈஸ்வரி- இனியா மட்டும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

வேதனையில் கோபி யாரிடமும் சரியாக பேசாமல் ராதிகாவை பற்றிய நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரி, கோபியின் மனதை மாற்ற என்னென்னவோ பேசுகிறார். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகாவின் நினைவுகளை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். செல்வி ஆறுதல் சொல்லியும் பாக்கியா வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் நடந்தது எல்லாம் சொன்னவுடன் அவர் கோபப்பட்டு திட்டுகிறார்.கடைசியில் கோபி, ராதிகாவை பார்க்க கிளம்புகிறார். ஆனால், ஈஸ்வரி தடுத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full