பெயிலில் வெளியே வந்து கோபி செய்தது, ஈஸ்வரியிடம் கோபப்பட்ட பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்தார். இதனால் போலீஸ் கோபியை கைது செய்தது. இதை பார்த்து ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். ராதிகா அம்மா மட்டும் தான் போலீஸிடம் வாக்குவாதம் செய்தார். இதை எல்லாம் பாக்யா வெளியே நின்று வேடிக்கை பார்த்தார். அதற்கு பின் வீட்டில் எல்லோரும் பாக்கியாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அந்த சமயம் வந்த எழில், அம்மா செய்தது சரிதான் என்று பேச, செழியன்- எழிலுக்கு இடையே சண்டை வந்தது.
அப்போது எழில், அம்மாவை பட பூஜைக்கு வர விடாமல் கோபி தான் தடுத்தார் என்று நடந்த உண்மையை சொல்ல, செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பின் பாக்கியா, நான் செய்தது சரி தான் என்று சொன்னார். மேலும், கோபத்தில் ஈஸ்வரி, பாக்கியாவை திட்ட, செழியனும் தன்னுடைய அப்பாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார். உடனே பாக்யா, நான் செய்ததில் எந்த ஒரு தப்புமே கிடையாது. 100 சதவீதம் சரிதான் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை.
பாக்கியலட்சுமி:
செழியன் தன்னுடைய அம்மாவை திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கோபி, பாக்கியா பற்றி நிறைய குறை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது செப் ஆனந்த் உண்மையை சொன்னதால் போலீஸ் கோபி மீது கோபப்பட்டது. அந்த சமயம் வந்த அவருடைய நண்பர் செந்தில், கோபிக்கு ஆறுதல் சொல்லி ஜாமினில் எடுப்பதற்கு வேலையை பார்க்கிறேன் என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் கோபி, ஜெயிலுக்கு போனதை நினைத்து செழியன்- ஈஸ்வரி- இனியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது பாக்கியா, சமைத்து வைத்து எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டார். ஆனால், அவர்கள் கேசை வாபஸ் வாங்கினால் தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார்கள். பாக்கியா, கேசை வாபஸ் வாங்க முடியாது. நான் செய்தது சரிதான் என்று உறுதியாக இருந்தார். இதனால் எல்லோருமே பாக்கியாவை திட்டி இருந்தார்கள். ஆனால், அதை பற்றி பாக்கியா கவலைப்படவே இல்லை. இதை அடுத்து பிரஸ் வீட்டிற்கு வந்து பாக்கியாவை பேட்டி எடுத்தது . அதில் நடந்த உண்மையை பாக்கியா சொல்ல, ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
பின் செந்தில், ஜாமினுக்கு ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் கோபிக்கு பெயில் கிடைத்து விடுகிறது. இருந்தாலுமே, கோபி பாக்கியாவின் மீது வன்மத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி- இனியா எல்லோருமே கோபியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது டிவியில் கோபி- பாக்யா விவகாரம் தான் வைரலாகி கொண்டிருந்தது. ஆத்திரத்தில் ஈஸ்வரி பேச, பாக்யா கோபப்பட்டார்.
சீரியல் ட்ராக்:
அப்போது நான் செய்தது சரி தான். இடியே விழுந்தாலும் நான் என் முடிவிலிருந்து மாற மாட்டேன் என்று கோபப்பட்டு பேசுகிறார். இதனால் ஈஸ்வரி, இனியாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் பேசுகிறார். உடனே ஆத்திரத்தில் ராதிகா, நான் இவ்வளவு அசிங்கத்தை சந்தித்தது கிடையாது. என்னுடைய பெயரே டேமேஜ் ஆகிவிட்டது என்று கோபப்பட்டு பேசுகிறார். செய்திகளில் வந்ததால் தான் அவர் இன்னும் கோபமாக இருக்கிறார் என்று ராதிகா அம்மா சொன்னவுடன் கோபத்தில் கோபி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.