தன் அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் கோபி, ஈஸ்வரி செய்வது - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 20/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்ததால் மொத்த குடும்பமும் வேதனையில் இருக்கிறது. ராமமூர்த்திக்கு இறுதி சடங்கை கோபி செய்ய கூடாது பாக்கியா தான் செய்யணும் என்று ஈஸ்வரி சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை எல்லாம் செய்தார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். மேலும், ராமமூர்த்தி தாத்தா எழுதிய கடிதத்தை படித்து எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி ஆத்மா பார்த்தது. இந்த வாரம் ஈஸ்வரி, தன்னுடைய கணவரின் 80 ஆவது பிறந்தநாள் வீடியோவை பார்த்து அழுது கொண்டிருக்க, செழியன்- ஜெனி இருவருமே சமாதானம் செய்தார்கள். மறுநாள் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை கடையில் திறக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கோபியும் வந்தார். அதற்குப் பின் ராமமூர்த்தி திருவுருவப்படத்தை ஈஸ்வரி திறந்து வைக்க, எல்லோருமே அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தி அவரை பற்றி பெருமையாக பேசிய இருந்தார்கள். கடைசியில் கோபி மைக்கை வாங்கி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டியும் பேச எல்லோருமே கோபப்பட்டார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் பாக்கியா, என்னைக்கு உங்களுடைய பிள்ளைக்கு சரியான தந்தையாக இருந்தீர்கள்? என்று கேட்டவுடன் கோபி ஆத்திரத்தில் கத்த, பாக்கியா பதில் கொடுத்தார். அதன் பின் பாக்கியா-எழில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது எழில், வீடு பார்த்த விஷயத்தை சொல்லி இருந்தார். நேற்று எபிசோடில், எழில் புது வீட்டிற்கு பாக்கியா தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு போய் இருந்தார். அதை பார்த்து எழில்-அமிர்தா சந்தோசப்பட்டு புது வீட்டில் பால் காய்ச்சி சாமி கும்பிட்டு இருந்தார்கள். அதற்கு பின் அமிர்தாவின் அம்மா, எழிலுக்கு வேலை இல்லை என்று ரொம்ப கஷ்டப்பட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்கு பாக்கியா, அவன் சாதித்து வருவான். அங்கிருந்தால் தேவையில்லாத பிரச்சினை. அதனால்தான் நான் வெளியில் போக சொன்னேன். கண்டிப்பாக ஒருநாள் என் மகன் சாதிப்பான் என்று பேசுவதை வெளியில் இருந்து எழில் கேட்டு கண் கலங்குகிறார். இன்னொரு பக்கம் செழியன், ஜெனி இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஜெனி, உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுவும் சொல்லாமல் மறைக்கிறாயா? மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க, ஒன்னும் இல்லை ஆபீஸ் பிரச்சனை தான் என்று செழியன் சொல்லி சமாளித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எழிலை பார்க்க செழியன் புது வீட்டிற்கு சென்றிருந்தார். பின் மூவருமே உட்கார்ந்து சாப்பிடு கொண்டிருந்தார்கள். அப்போது செழியன், புது டிவியை வாங்கி தந்தார். அந்த சமயம் பார்த்து கோபி, வீட்டிற்கு வந்து எழிலை நலம் விசாரித்தார். அதற்குப்பின் நிலாவிடம் கோபி பணத்தை கொடுத்து வைத்துக் கொள் என்று சொல்ல, எழில் வாங்க மறுத்தார். உடனே கோபி, இது நிலாவிற்கு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் பாக்யா வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செல்வி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பற்றி பேசும்போது இனியாகவும் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லோருக்கும் பெருமை சேர்க்க போகிறேன் என்று சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே கிண்டலாக பேசுகிறார்கள். அப்போது இனியா பாடலை கேட்டு எல்லோருமே சிரிக்கிறார்கள். மறுநாள் கல்லூரிக்கு இனியவை ஈஸ்வரி அழைத்துப் போகிறார். அதை பார்த்த கோபி தன்னோட அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full