பாக்கியாவை மீண்டும் வம்பிழுக்கும் கவுன்சிலர், கோபி செய்த வேலை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 2/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா- செல்வி இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போது கவுன்சிலர் வழிமறித்து மிரட்டி இருந்தார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பாக்கியா, செழியனை பார்த்து ரொம்ப எமோஷனலாக கட்டி பிடித்து அழுதார். அதற்குப்பின் அங்கு வந்த கவுன்சிலரின் எதிரி குரூப், ஒரு பிள்ளைக்காக ஒரு தாய் எப்படியெல்லாம் போராடுவார் என்பதை உன் அம்மா நிரூபித்து விட்டார் என்றெல்லாம் பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார். இதெல்லாம் கேட்டு செழியன் தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந்தார்.

அதற்குப்பின் செழியன் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். பாக்கியவை பார்த்தவுடன் ஈஸ்வரி, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, அமைச்சர் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். மறுநாள் காலையில் ஈஸ்வரி, நீ வேலைக்கு போக வேண்டாம். வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள் என்று சொல்ல, பாக்கியா முடியாது என்று கிளம்பி விட்டார். பின் பாக்கியா ஹோட்டலை திறக்க, அந்த ஓட்டலின் ஓனர், இனிமேல் நீங்கள் ஓட்டல் நடத்த வேண்டாம். தயவு செய்து கிளம்புகள் என்று சொன்னார். அதை கேட்டு பாக்கியா ஷாக் ஆனார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியா- செல்வி இருவருமே எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த ஓனர் கேட்கவே இல்லை. கடையை மூடி விட்டார். வேதனையிலேயே வீட்டுக்கு வந்த பாக்கியா, ஈஸ்வரியிடம் மனதை விட்டு எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் சுதாகர், செழியனை பற்றி பேசி இருந்தார். அதற்கு இனியா, என் அண்ணன் நேற்றே வந்து விட்டான். என் அம்மா தான் அமைச்சரின் மூலம் அண்ணாவை வெளிக்கொண்டு வந்தார் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். பின் சுதாகர், அந்த ஓட்டலை நடத்த வேண்டாம். என் ஸ்டேட்டஸ் என்னாவது? என்று சொன்னவுடன் இனியா, கோவப்பட்டு என் அம்மா ஓட்டலை நடத்துவார்.

கடந்த வாரம் எபிசோட்:

உங்களால்தான் எங்க அம்மாவுடைய ரெஸ்டாரன்ட் போய்விட்டது என்று சுதாகரை எதிர்த்து பேசினார். இதனால் கோபப்பட்ட சுதாகரின் மகன் இனியாவை கண்டித்தார். மறுநாள் காலையில் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவின் வீட்டிற்கு வந்து சமையல் செய்ததற்காக பணத்தை கொடுக்க, பாக்கியா வாங்க மறுத்தார். அதற்கு அவர், நீங்கள் செய்த வேலைக்கு தான் பணம். இனிமேல் எந்த விழா என்றாலும் நீங்கள் தான் சமைக்கணும் அமைச்சர் சொல்லிவிட்டார் என்று சொன்னவுடன் பாக்கியா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலில் ஓனர் வீட்டுக்கு சென்று சென்றிருந்தார். அங்கு ஓனரின் மருமகன் 5 லட்சம் பணம் கேட்டு ப்ரச்சனை செய்ததால் பாக்கியா பணம் தந்தார். இதனால் ஓனர் மனம் மாறி பாக்கியாவை ஹோட்டல் திறக்க சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோபி, பாக்கியா ஹோட்டலுக்கு வருகிறார். பாக்கியா, என்ன விஷயம்? என்று கேட்கிறார். கோபி, நான் சும்மா தான் இந்த பக்கம் வந்தேன் என்று என்னென்னவோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால், பாக்கியா விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார். உடனே கோபி, நான் கவுன்சிலர் விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காமல் உன்னுடைய வேலையை பார் என்று சொல்கிறார். அதற்குப்பின் கவுன்சிலர் பாக்யாவின் ஹோட்டலுக்கு வருகிறார். அவர் வழக்கம் போல பாக்கியாவிடம் வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி, அவரிடம் கோபப்படாமல் நாசுக்காக கிண்டல் அடித்தும், அவருடைய கேள்விகளுக்கு பதிலடியும் கொடுக்கிறார். பின் கவுன்சிலர் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் கோபி, பாக்கியா கடை மூடும் வரை அங்கே இருந்து அவருக்கு பாதுகாப்பாக வீடு வரை வருகிறார். பாக்கியா வேண்டாம் என்று சொல்லியுமே கோபி கேட்கவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, வேலைக்கு போக வேண்டாம் என்று வழக்கம்போல சொல்கிறார். பாக்கியா, இந்த வீட்டில் எந்த பிரச்சினையும் வராது. நீங்கள் தைரியமாக தூங்குங்கள் என்று அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் சுதாகரிடம் இனியா, ரெஸ்டாரன்ட் பெயர் மாற்றி விட்டீர்களா? என்று கேட்கிறார். சுதாகர் ஆமாம் என்று சொல்கிறார். பின் இனியா, நான் ரெஸ்டாரண்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் சுதாகருக்கு கோபம் வருகிறது. வழக்கம் போல நித்திஷ் இனியாவை திட்டுகிறார். இனியா அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நான் கொஞ்சம் நேரமாவது ரெஸ்டாரண்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full