எழிலால் ராதிகா வீட்டில் மீண்டும் எழும் பூகம்பம் , பாக்கியா போடும் புது பிளான்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 20/8/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் எழிலுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி இருந்தார். இதை பார்த்த அமிர்தா, பாக்கியா இருவரும் எழிலுக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். உடனே அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார்.

இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்லி இருந்தார். இதை அறிந்த எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார். அதற்கு ஈஸ்வரி, உன் பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான். இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று கேட்டு இருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

உடனே பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொன்னார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியானார்கள். பின் ரூமில் அமிர்தா- எழில் இருவரும் நடந்ததை பற்றி பேசி கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போக தயாராக வந்து இருந்தார்கள். இதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார். அமிர்தா- எழில் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்து எல்லோருமே கதறி அழுது, வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்தும் எழில் தன் முடிவில் மாறவில்லை. அப்போது ஈஸ்வரி, நீ வெளியே போகக்கூடாது என்று தடுத்தும் எழில் கிளம்பி விட்டார்.

சீரியல் கதை:

எல்லோரும் இதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். எழில் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழ, அவர் அதிர்ச்சியாகி பாக்கியாவை திட்டி விட்டு அமிர்தாவுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். இதனால் எழிலுக்கு கோபம் வருகிறது. நேற்று எபிசோடில் கோபி, அது உன் வீடு. யாரும் உன்னை போக சொல்ல முடியாது. வீட்டிற்கு கிளம்பி போ என்று எழிலுக்கு ஆதரவாகவும், பாக்கியாவை திட்டியும் பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:

கடைசியில் எழில், நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள். எங்களுடைய பிரச்சினைகளை பார்த்துக் கொள்ள தெரியும் என்று சொன்னவுடன் கோபி, பணத்தை கொடுக்க எழில் வாங்க மறுக்கிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, எழில் ரூமிற்கு போய் அங்கிருக்கும் பொருட்களை பார்த்து அழுதார். பின் அமிர்தாவுக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது அமிர்தா, ஏன் எங்களை வீட்டை விட்டு வெளியே போக சொன்னீர்கள்? என்று கேட்டதற்கு பாக்கியா, காரணத்திற்காக தான் உங்களை வெளியே போக சொன்னேன் என்று சொல்ல அமிர்தாவும் அமைதியாகி விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில்கோபி, தன்னுடைய மகன், மருமகள் வீட்டை விட்டு வெளியே போனது குறித்து ராதிகாவிடம் சொல்ல, அவர் எதையுமே கண்டுகொள்ளாமல் எழுந்து சென்று சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறார். உடனே கோபி, சாப்பாடு தட்டை தூக்கி எறிந்து கத்த, உங்களுடைய குடும்பத்தில் என்ன பிரச்சனை நடந்தால் எனக்கு என்ன? என்று ராதிகா சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மறுநாள் எழில்-செழியன் இருவரும் போனில் பேசிக் கொள்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கோபி, எழிலை பற்றி செழியனிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full