மீண்டும் குடித்து விட்டு கோபி செய்த ரகளை, ராதிகா சொன்ன வார்த்தை- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 29/8/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் தெரிந்து எல்லோரும் சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ளாது குறித்து ஈஸ்வரி மோசமாக திட்டி இருந்தார். இதனால் எழில் கோபப்பட்டு ஈஸ்வரியிடம் பேச, இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள். கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். இந்த விஷயத்தை அறிந்த கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார்.

எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. கடந்த வாரம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று எழிலை கூப்பிட்டார். ஆனால், எழில் வர மறுத்தார். இதனால் ஈஸ்வரி வருத்தப்பட்டு இருந்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

செழியன் போன் எடுக்கவே இல்லை. கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் நடந்தது. தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. இன்னொரு பக்கம் கோபி, செழியனுக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டார். இதை கோபி, ராதிகாவிடம் சொல்ல இருவருக்கும் சண்டை வந்தது. கடைசியில் கோபி கோவிலுக்கு சென்றார்.

சீரியல் கதை:

கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார். பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். இது எல்லாம் பார்த்து கோபி சந்தோசப்பட்டு போட்டோ எடுத்தார். கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணாமல் விட்டார். இருந்தாலும், கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு, ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்கு பின் கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார். பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து கோபி சந்தோஷப்பட்டார். அப்போது பாக்கியவை பார்த்து கோபி, என் குடும்பம் என்னை விட்டு பிரிந்து இருக்கிறது. அதற்கு காரணம் நீ தான் என்று வழக்கம் போல் பாக்கியா மீது பழி போட அவர் பதிலுக்கு பேசி இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், எழில்-அமிர்தா இருவருமே கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். அப்போது பாக்கியாவை எழில் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு போகிறார்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் கோவில் நடந்ததை சொல்லி புலம்ப, ராதிகாவிற்கு கோபம் வந்து, உங்களை யார் அங்கே போக சொன்னது? என்று கத்துகிறார். உடனே கோபி, எல்லோரும் என்னை விட்டு போய் விட்டார்கள். நீயும் போகாதே என்று சொல்ல, ராதிகா மனம் மாறி, உங்களை அழைக்காத இடத்திற்கு போகாதீர்கள். உங்களுடைய குடும்பத்தை பாருங்கள். நான் இருக்கிறேன் என்று அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லோருமே கோவில் நடந்ததை பற்றி சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full