கோபியின் மனமாற்றத்தை உணரும் பாக்கியா, ராதிகா எடுக்க போகும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோர்ட்டில் பாக்கியா கேஸ் வாபஸ் வாங்கி விட்டதால் கேஸ் தள்ளுபடி ஆகிறது. இதையெல்லாம் கேட்டு ராதிகா- கோபி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் கோபி, கோர்ட்டில் நடந்ததை சொல்ல ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார். அதற்கு கோபி, பாக்கியா என்னுடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருந்தார். அவளை பற்றி எதுவும் பேசாதீர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார்.
அதற்குப்பின் ராதிகா, ஈஸ்வரி பேசியதை பற்றி கேட்க, பாக்கியா பெருமையாக தான் பேசி இருந்தார். இது எல்லாம் கேட்ட ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டைக்கு போனார். அதற்கு ராதிகா, ஈஸ்வரியை எதிர்த்து பேசி மிரட்டி இருந்தார். பாக்கியா, தன்னுடைய புதிய ஆர்டருக்கு ஆட்கள் நிறைய தேவை. என்ன செய்வது? என்று புரியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, இந்த ஆர்டர் வேண்டாம் என்று சொன்னார். அதற்கு ராதிகா, பண பிரச்சினை என்றால் நான் கடனாக கொடுக்கிறேன் என்றார். உடனே கோபி, என்னுடைய ரெஸ்டாரண்டில் இருந்து செஃப்களை அனுப்பி வைக்கிறேன்.
பாக்கியலட்சுமி:
அவர்களை வைத்து சமைத்து கொள் என்று சொன்னார். இருந்துமே பாக்யா ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்குப்பின் ஜெனி- செழியன் இருவரும் சொன்னதால் பாக்யா முழு மனது இல்லாமல் கோபி இடம் உதவி கேட்டார். கோபியும் சரி என்றார். உடனே ஈஸ்வரி, கோபி உனக்காக எல்லாம் செய்வேன். நீ தான் புரிந்து கொள்ளவில்லை என்று அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பது போலவே பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட ராதிகா கோபப்பட்டார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, எப்படியாவது பாக்கியா- கோபியை சேர்த்து வைக்க வேண்டும்.
நேற்று எபிசோட்:
அதற்கான வேலையை நான் செய்யப்போகிறேன் என்று சொன்னார். உடனே செழியன், எப்படி முடியும் என்று சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ஈஸ்வரி. அதற்குப்பின் இனியா தன்னுடைய டான்ஸ் காம்பிடிஷன் பற்றி கோபியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மையூ, தான் போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னவுடன் கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அவருக்காக பரிசு வாங்கி தருவதாக சொல்ல, மையூ ரொம்ப சந்தோஷப்பட்டார்.
சீரியல் ட்ராக்:
பின் கோபி சென்றவுடன் ஈஸ்வரி, உன் அப்பாவிடம் கேளு. கோபி இனியாவுடைய அப்பா. உனக்கு கிடையாது என்று ரொம்ப மோசமாக மையூவை பேசி இருந்தார். இதனால் மையூ ரொம்ப எமோஷனலாக அழுதார். அங்கு வந்த ராதிகா, ஈஸ்வரி பேசியதை கேட்டு மையூவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பாக்யா, ஈஸ்வரிடம் அவர் செய்த தவறை உணர்த்தி இருந்தார். பின் ராதிகா- கோபி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=sHGxR8u6uDo
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் பாக்கியா தான் எடுத்த புதிய ஆடருக்காக மும்முரமாக சமைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக கோபியும் உதவி செய்கிறார். பின் பாக்கியா தான் சமைத்த சாப்பாட்டை ஈஸ்வரிடம் கொடுக்க, அதை கோபி சாப்பிட்டுவிட்டு சூப்பராக இருக்கிறது. நீ ரொம்ப திறமையானவள், புத்திசாலி என்று பாக்கியாவை புகழ்ந்து பாராட்டுகிறார். பாக்கியா, நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையெல்லாம் பார்த்த ராதிகா அமைதியாக இருக்கிறார். பின் வீட்டில் ஈஸ்வரி, கோபி கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறார். நீ அவன் வாழ்க்கையை விட்டு போ. பாக்கியா-கோபி இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொன்னவுடன் ராதிகா கோபப்படுகிறார்.