மீண்டும் ராதிகாவுடன் வீட்டிற்கு வந்த கோபி, என்ன செய்ய போகிறார் ஈஸ்வரி? பாக்கியலட்சுமி

By subhashini · 1/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, கோபி இடம் தனியாக பேசினார். அப்போது அவர், ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். உங்களை நம்பி வந்தவர்களை இப்படி ஏமாற்றுவதா? என்று ரொம்ப ஆவேசமாக பேச, கோபி ரொம்ப எமோஷனல் ஆகி ராதிகாவை பார்க்க போனார். பின் ராதிகா வீட்டிற்கு போன கோபி, அவரிடம் மன்னிப்பு கேட்டு, எதற்கு வீட்டை காலி செய்கிறாய்? இங்கே இருக்கலாம் என்று சொன்னார். அதற்கு ராதிகா, நான் தெளிவாக யோசித்தான் முடிவு எடுத்தேன் என்றார். கோபி என்னென்னவோ சொல்லி சமாளிக்க, ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை.

கடைசியில் ஹவுஸ் ஓனர் வந்தவுடன் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு ராதிகா கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி வராததால் கோபத்தில் பாக்கியாவிடம் சண்டை போட்டார். மேலும், கோபி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ராதிகா கிளம்பி விட்டார். பின் வேதனையிலேயே கோபி வீட்டிற்கு வந்தார். கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி- இனியா இருவரும் சந்தோஷப்பட்டு விசாரித்தார். அப்போது கோபி, நான் சொல்லியும் கேட்கவில்லை, ராதிகா கிளம்பிவிட்டார் என்று வேதனையோடு பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

உடனே ஈஸ்வரி, அவள் போகட்டும். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. நாங்கள் உன்னை பார்த்துக்கொள்கிறோம் என்று ஆறுதலாக பேசியவுடன் கோபி மனம் மாறியது. உடனே கோபத்தில் பாக்யா, உங்கள் பிள்ளைகளும் அமிர்தா, ஜெனியை விட்டு போனால் என்ன செய்வீர்கள்? இனியா உடைய கணவரும் அவளை விட்டு போனால் நீங்கள் இப்படித்தான் அமைதியாக இருப்பீர்களா? என்று பேசி இருந்தார். பின் புத்தி வந்த கோபி, ராதிகாவை பார்க்க போனார். இதனால் ஈஸ்வரி, பாக்யாவிடம் சண்டை போட்டார்.

நேற்று எபிசோட்:

பின் ராதிகா தங்கி இருக்கும் புது வீட்டிற்கு சென்ற கோபியை பார்த்த மையூ ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அந்த சமயம் ஈஸ்வரி போன் செய்து, நீ கிளம்பி விட்டாயா? வீட்டிற்கு வா? என்று அவரை கட்டாயப்படுத்துகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, ராதிகாவிடம் வீட்டிற்கு வர சொல்லி கெஞ்சிகிறார். ராதிகா முடிவே முடியாது என்று மறுக்கிறார். ஈஸ்வரி விடாமல் கோபிக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார். அப்போது கோபி, ராதிகாவிடம் நான் கொஞ்ச நாள்தான் இருப்பேன். அதுவரை நீங்களும், அவர்களும் என்னுடன் இருங்கள்.

இன்றைய எபிசோட்:

தயவு செய்து புரிந்துகொள் என்று நெஞ்சுவலி வந்தது போல கோபி டிராமா போடுகிறார். அதை நம்பி ராதிகா ஒத்து கொள்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபியை நினைத்து புலம்பி கொண்டு இருக்கிறார். அப்போது பாக்யா, அவர் மனைவியுடன் வாழட்டும் என்று சொன்னவுடன் உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று ஈஸ்வரி மீண்டும் பாக்யாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும், தன் மகன் வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஈஸ்வரி.

சீரியல் ட்ராக்:

பின் ஈஸ்வரி- இனியா இருவருமே வாசலுக்கு சென்று பார்த்துக்கொண்டு வருகிறார்கள். அப்போது வீட்டிற்கு வந்த கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி- இனியா இருவரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி கூடவே ராதிகாவை அழைத்து வந்ததை பார்த்தவுடன் கோபம் வந்தது. கோபி, ராதிகா-மையூ என்னுடன் தான் இருப்பார்கள் என்கிறார். அதற்கு ஈஸ்வரி, நான் உன்னை மட்டும் தான் வர சொன்னேன் என்கிறார். அதற்கு கோபி, நான் இங்கு இருக்கும் வரை என்னுடன் ராதிகா இருப்பார் என்கிறார். ஆனால், ஈஸ்வரியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full