மனம் மாறும் கோபி, கோபத்தில் பாக்கியா சொன்னது, ராதிகா நிலைமை என்ன? பரபரப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபியின் நிலை அறிந்து ஹாஸ்பிடலுக்கு வந்த ராதிகாவை ஈஸ்வரி உள்ளே விடாமல் தடுத்தார். எழில், பாக்கியா இருவருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. கோபத்தில் ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப தகாத வார்த்தையால் திட்டியதால் அவர் மனம் உடைந்து வெளியே வந்து விட்டார். அதன் பின் பாக்கியா-ராதிகா இருவருமே உட்கார்ந்து பேசி இருந்தார்கள். பின் கோபியை பார்த்து கொள்ளும் விஷயத்தில் ஈஸ்வரி- பாக்கியா இடையே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது.
பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலில் இருந்து என்னுடைய மகனை இந்த வீட்டிற்கு தான் அழைத்து வருவேன் என்று சொல்ல, பாக்யா முடியாது என்றார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. அதன் பின் ஈஸ்வரி, ஹாஸ்பிடலுக்கு போனார். அதற்கு முன்பே ராதிகா, கோபியை பார்த்து பேசி இருந்தார். கோபி, இப்போதான் என்னை பார்க்க நேரம் வந்ததா? என்னுடைய குடும்பம் தான் எனக்கு உதவியது என்று ரொம்ப எமோஷனலாக பேச, ராதிகா வருத்தப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
அந்த சமயம் வந்த ஈஸ்வரி, ராதிகாவை திட்டி வெளியே போக சொல்லி, கோபியை என்னுடைய வீட்டிற்கு தான் அழைத்து செல்வேன் என்றார். உடனே பாக்யா, அதெல்லாம் முடியாது. ராதிகா தான் அழைத்து செல்வார். அவருக்கு தான் உரிமை இருக்கிறது என்று சொல்ல, ராதிகாவும் அவர் என்னுடன் தான் வருவார். அதை கோபி சொல்லட்டும் என்றார். பின் ராதிகா-ஈஸ்வரி இருவரும் கோபி இடம் பேச போனார்கள். அப்போது ராதிகா, நம்ம வீட்டுக்கு போகலாம்.
நேற்று எபிசோட்:
நான் சண்டை போட மாட்டேன் என்றார். உடனே ஈஸ்வரி, அழுது கொண்டே நீ என்னுடன் வந்துவிடு என்று சொன்னார். அதற்கு கோபி, தன் அம்மா வீட்டிற்கு போவதாக சொன்னார். நேற்று எபிசோட்டில், கோபி சொன்ன பதிலால் ராதிகா அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் இருந்தார். பாக்கியா தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. பின் ராதிகா, இதெல்லாம் நீங்கள் செய்த வேலை தானே, நடிக்காதீர்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். கோபத்தில் பாக்கியா, உங்களிடம் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் ஈஸ்வரி, கோபிக்கு சாப்பாடு செய்ய சொல்லி ஆர்டர் போட்டார். அதற்கு பாக்யா, என்னால் செய்ய முடியாது. நீங்கள் தானே அழைத்து வந்தீர்கள். உங்கள் மகனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி அவர் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் என்று சொல்லி கதறி அழுதார். இதனால் கோபத்தில் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டிற்கு சண்டைக்கு வந்தார்.
https://www.youtube.com/watch?v=UWxtY0LTbRo
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்கியா, தனது கிடைத்த புது ஆர்டரை பற்றி வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே கோபி, தனக்கு தெரிந்த ஒரு ஐடியா சொல்கிறார். பின் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது கோபி, உனக்குள் இவ்வளவு திறமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது தெரிந்திருந்தால் உன்னை விட்டு பிரிந்து போயிருக்க மாட்டேன் என்று பேசுகிறார். உடனே கோபத்தில் பாக்கியா, உங்களை ஏன் காப்பாற்றினேன் என்று யோசிக்க வைக்காதீர்கள் என்று அங்கிருந்து கிளம்புகிறார். பின் கோபி, நான் பாக்கியாவுக்குதுரோகம் செய்திருக்க கூடாது, அவளை நான் பழிவாங்க நினைத்தது தப்பு என்று ரொம்ப எமோஷனலாக பேசுவதை கேட்டு ராதிகா வருத்தப்படுகிறார்.