கோபி செய்த வேலையால் ஆடிப்போன ஈஸ்வரி ரெஸ்டாரண்ட், தவித்து நிற்கும் பாக்கியா- பாக்கியலட்சுமி

By subhashini · 12/10/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி ' சீரியலில் இனியாவின் நடனப் போட்டியை பார்ப்பதற்கு பாக்யா தன் மாமியாரை கூப்பிட அவர் மறுத்தார். இருந்தாலும், பாக்கியா கட்டாயத்தால் ஈஸ்வரி தயாராகி இருந்தார். அந்த சமயம் பார்த்து வந்த அமிர்தாவின் அம்மா, எங்கும் வெளியே போகக்கூடாது என்று ஈஸ்வரிக்கு அட்வைஸ் செய்தார். இதனால் வருத்தமடைந்த ஈஸ்வரி, போட்டிக்கு செல்ல மறுத்தார். இன்னொரு பக்கம் இனியா நடனப் போட்டியில் கலந்து கொண்டு நன்றாக ஆடி இருந்தார்.

அப்போது இனியா ஆடும் போது கோபி கீழே இருந்தே என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த எழில், கோபியை திட்டினார். கடைசியில், சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து போட்டியாளர்களில், இனியாவும் செலக்ட் ஆகி இருந்தார். இதைக் கேட்டவுடன் அனைவரும் சந்தோஷப்பட்டு இனியாவை எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். இன்னொரு பக்கம் கோபி வைத்த நபர், பாக்யாவின் ஆர்டரை கெடுக்க திட்டம் போடுகிறார். பாக்கியா, நானே ஆர்டரை பார்த்துக் கொள்கிறேன் என்று என்று அவரை அனுப்பி விட்டார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பின் பாக்கியா, தான் சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரியை அழைத்தார். ஆனால், அவர் வர மறுத்தார். இருந்தும் பாக்கியா விடாமல் ஈஸ்வரியை கட்டாயப்படுத்தி ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றார். நேற்று ஈஸ்வரி விளக்கேற்றுவதற்கு அவர் மனதை காயம்படும் அளவிற்கு பேசி இருந்தார்கள். இதைக் கேட்ட பாக்யா கோபப்பட்டு, என் அத்தையை யார் பேசினாலும் நான் சும்மா விட மாட்டேன். என் மாமியார் தான் செய்ய வேண்டும் என்று அவர்கள் வாயை அடைத்து விட்டு ஈஸ்வரியை விளக்கேற்றி வைக்க சொன்னார்.

நேற்று எபிசோட்:

இந்த ஆர்டரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று புது செப் சதி வேலைகள் செய்கிறார்.
இன்னொரு பக்கம் பணம் இல்லாததால் வீடு செலவிற்கு ரொம்பவே அமிர்தா- எழில் கஷ்டப்படுகிறார்கள். உடனே அமிர்தாவின் அம்மா, உங்களிடம் பணம் இல்லையா? நான் வாங்கி தரட்டுமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம் என்று அமிர்தா சமாளிக்க. எழில், எப்படியோ பணத்தை ரெடி பண்ணி வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா தன்னுடைய புதிய ஆர்டர் கான வேலைகளை சிறப்பாக முடித்து விடுகிறார். இதை எப்படியாவது சொதப்ப வேண்டும் என்று செப் நினைக்கிறார். பின் வந்த ஆர்டர்கள் எல்லாம் பாக்கியா நல்லபடியாக முடித்து அனுப்பி விடுகிறார். ரெஸ்டாரண்டிலும் பயங்கர கூட்டமாக இருக்கிறது. அப்போது சாப்பாடு எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று ஆர்டர் வாங்கியவர்கள் வந்து கடையில் சாப்பாட்டை கொட்டி ஒரே பிரச்சனை செய்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பாக்யாவிற்கு என்ன நடக்கிறது? என்ன சொல்வது? என்று புரியாமல் இருக்கிறார். அந்த செப் மட்டும் சந்தோஷத்தில் கோபிக்கு நடப்பதை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார். கோபியும் பாக்யா ரெஸ்டாரண்ட்டுக்கு வெளியே நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியா, பிரஸ், உணவுத்துறையிலிருந்து எல்லோருமே பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வந்து விவாதம் செய்கிறார்கள். பின் உணவுத்துறையினர் பாக்யாவின் ரெஸ்டாரண்டை சோதனை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் உண்மையறிந்து ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே பதட்டப்படுகிறார்கள். பாக்கியா என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போய் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full