ராதிகா-பாக்கியா ஒற்றுமை, ஆத்திரத்தில் பொங்கும் ஈஸ்வரி, கோபி நிலைமை? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ராதிகா வீட்டை காலி செய்து அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஈஸ்வரி, கோபி வராததால் கோபத்தில் பாக்கியாவிடம் சண்டை போட்டார். அப்போது வேதனையிலேயே வீட்டிற்கு வந்த கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி- இனியா இருவரும் சந்தோஷப்பட்டு விசாரித்தார்கள். அப்போது கோபி, நான் சொல்லியும் கேட்கவில்லை, ராதிகா கிளம்பிவிட்டார் என்று சொல்ல, ஈஸ்வரி ஆறுதலாக பேசி கோபியின் மனதை மாற்ற பார்த்தார். உடனே கோபத்தில் பாக்யா, உங்கள் பிள்ளைகளும் அமிர்தா, ஜெனியை விட்டு போனால் என்ன செய்வீர்கள்? இனியா உடைய கணவரும் அவளை விட்டு போனால் நீங்கள் இப்படித்தான் அமைதியாக இருப்பீர்களா? என்று பேசி இருந்தார்.
பின் புத்தி வந்த கோபி, ராதிகாவை பார்க்க அவர் தங்கி இருக்கும் புது வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கு கோபியை பார்த்த மையூ ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அந்த சமயம் ஈஸ்வரி போன் செய்து, நீ கிளம்பி விட்டாயா? வீட்டிற்கு வா? என்று அவரை கட்டாயப்படுத்தி இருந்தார். நேற்று எபிசோட்டில் கோபி, ராதிகாவிடம் வீட்டிற்கு வர சொல்லி கெஞ்சி இருந்தார் . ஆனால், ராதிகா முடிவே முடியாது என்று மறுத்தார். ஈஸ்வரியும் விடாமல் கோபிக்கு போன் செய்து கொண்டே இருந்தார். அப்போது கோபி, நான் கொஞ்ச நாள்தான் இருப்பேன். அதுவரை நீங்களும், அவர்களும் என்னுடன் இருங்கள்.
பாக்கியலட்சுமி:
தயவு செய்து புரிந்துகொள் என்று நெஞ்சுவலி வந்தது போல கோபி டிராமா போட்டார். அதை நம்பி ராதிகா ஒத்து கொண்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபியை நினைத்து புலம்பி கொண்டு இருந்தார். பாக்யா, அவர் மனைவியுடன் வாழட்டும் என்று சொன்னவுடன் உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று ஈஸ்வரி பாக்யாவை திட்டிக் கொண்டிருந்தார். இருந்தாலும், தன் மகன் வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தார் ஈஸ்வரி. பின் ஈஸ்வரி- இனியா இருவருமே வாசலுக்கு சென்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது வீட்டிற்கு வந்த கோபியை பார்த்தவுடன் ஈஸ்வரி- இனியா இருவரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், கோபி கூடவே ராதிகாவை அழைத்து வந்ததை பார்த்தவுடன் ஈஸ்வரிக்கு கோபம் வந்தது. கோபி, ராதிகா-மையூ என்னுடன் தான் இருப்பார்கள் என்றார். அதற்கு ஈஸ்வரி, நான் உன்னை மட்டும் தான் வர சொன்னேன் என்றார். அதற்கு கோபி, நான் இங்கு இருக்கும் வரை என்னுடன் ராதிகா இருப்பார் என்றார். ஆனால், ஈஸ்வரியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மயூ ரொம்ப கவலையாக இருக்கிறார். உடனே பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறார்.
இன்றைய எபிசோட்:
அந்த சமயம் பார்த்து இனியா, பொறாமையில் பாக்கியாவுடன் வந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா சொன்னதை ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி, பாக்கியாவை பற்றி பயங்கரமாக புகழ்ந்து பேசுகிறார். மறுநாள் காலையில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த ராதிகா, நானும் சமைத்துக் கொள்கிறேன் என்றவுடன் பாக்கியா எதுவுமே சொல்லவில்லை. பின் இருவருமே கலகலப்பாக பேசி சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வருகிறது. ஆனால், கோபி அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதை பற்றி கோபமாக ஈஸ்வரி, கோபி இடம் பேசுகிறார். அதற்கு அவர் பாக்கியா சொன்னது சரி தான். ரொம்ப நல்லவள் என்று எல்லாம் பேசுகிறார். அதற்குப்பின் கோபி, பாக்யாவிடம் வாடகை பணத்தை கொடுக்கிறார். பின் ராதிகா-பாக்கியா இருவருமே தங்களுடைய பழைய
நிகழ்வுகளை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் எல்லோரும் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா வந்தவுடன் ஈஸ்வரி கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.