பாக்கியாவிற்காக கோபி செய்த வேலை, ராதிகா நிலைமை என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, தன்னுடைய புதிய ஆர்டருக்கு ஆட்கள் நிறைய தேவை. என்ன செய்வது? என்று புரியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தார். உடனே ஈஸ்வரி, இந்த ஆர்டர் வேண்டாம் என்று சொன்னார். அதற்கு ராதிகா, பண பிரச்சினை என்றால் நான் கடனாக கொடுக்கிறேன் என்றார். உடனே கோபி, என்னுடைய ரெஸ்டாரண்டில் இருந்து செஃப்களை அனுப்பி வைக்கிறேன். அவர்களை வைத்து சமைத்து கொள் என்று சொன்னார். இருந்துமே பாக்யா ஏற்றுக்கொள்ளவில்லை.
அதற்குப்பின் ஜெனி- செழியன் இருவரும் சொன்னதால் பாக்யா முழு மனது இல்லாமல் கோபி இடம் உதவி கேட்டார். கோபியும் சரி என்றார். ஈஸ்வரி, எப்படியாவது பாக்கியா- கோபியை சேர்த்து வைக்க வேண்டும். அதற்கான வேலையை நான் செய்யப்போகிறேன் என்று சொன்னார். உடனே செழியன், எப்படி முடியும் என்று சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ஈஸ்வரி. அதற்குப்பின் இனியா தன்னுடைய டான்ஸ் காம்பிடிஷன் பற்றி கோபியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மையூ, தான் போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னவுடன் கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
பின் அவருக்காக பரிசு வாங்கி தருவதாக சொல்ல, மையூ ரொம்ப சந்தோஷப்பட்டார். மேலும், கோபி சென்றவுடன் ஈஸ்வரி, உன் அப்பாவிடம் கேளு. கோபி இனியாவுடைய அப்பா. உனக்கு கிடையாது என்று ரொம்ப மோசமாக மையூவை பேசி இருந்தார். இதனால் மையூ ரொம்ப எமோஷனலாக அழுதார். அங்கு வந்த ராதிகா, ஈஸ்வரி பேசியதை கேட்டு மையூவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பாக்யா, ஈஸ்வரிடம் அவர் செய்த தவறை உணர்த்தி இருந்தார். பின் ராதிகா- கோபி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
அப்போது கோபி இனியா டான்ஸ் காம்பிடிசன் பற்றியும், பாக்கியாவின் திறமையும் பற்றி பேசி கொண்டே இருந்தார். இதனால் வெறுப்பான ராதிகா தூங்கி விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மையூ, ஈஸ்வரி சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இதை அறிந்த பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். இருந்தாலுமே மையூவின் மனம் மாறவில்லை. பின் இனியா, போட்டியில் வென்றதற்காக மயூவுக்கு பரிசு கொடுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
பின் மயு, இனியா, பாக்கியா மூவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் பாக்கியா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார். அப்போது கோபி, தன்னுடைய செப்புகளை அழைத்து வந்து பாக்கியாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பின் சமையலுக்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. கோபியும் வேலையை பிரித்துக் கொடுத்து பாக்யாவிற்கு உதவி செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
கோபியின் செயலை பார்த்து எல்லோருமே பாராட்டுகிறார்கள். பாக்கியாவுமே கோபி மனம் மாறிவிட்டாரோ? என்று நினைக்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபிக்கு போன் செய்து விசாரிக்கிறார். அப்போது கோபி,
சமையல் ஆர்டரை பற்றியும், பாக்யா செய்யும் வேலையைப் பற்றியும் ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்டு ராதிகாவிற்கு வெறுப்பு தான் வருகிறது. அதற்குப்பின் வீட்டில் பாக்கியா- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்யா, வேறு வழியில்லாமல் தான் கோபி சொன்ன ஆஃபரை ஏற்றுக்கொண்டேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். ஆனால், ராதிகா எதுவும் பேசவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.