தன் மகனை வைத்து பாக்கியாவை அழிக்க கோபி போடும் திட்டம், பாக்கியா வெல்வாரா? பாக்கியலட்சுமி

By subhashini · 24/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கடந்த வாரம் கெட்டுப்போன சாப்பாட்டை ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் கொடுத்ததாக சொல்லி கலவரம் வெடித்தது. அதனால், உணவுத்துறை அதிகாரிகள் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைத்ததால் எல்லாருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, பாக்கியாவின் ரெஸ்டாரண்டை குறித்து ராதிகாவிடம் சொல்ல, அவர் அதை நம்பவில்லை. பின் பாக்கியாவை பார்த்து கோபி, சந்தோஷத்தில் கிண்டலும் கேலியும் செய்திருந்தார். இன்னொரு பக்கம் செழியனுக்கு வேலை போய் விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அழுது புலம்ப, கோபியும் ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தி இருந்தார். அதேபோல் சினிமா வாய்ப்பை தேடி தயாரிப்பாளரை எழில் சந்தித்தார். ஆனால், அவர் வாய்ப்பு தர மறுத்து விட்டார். இந்த வாரம் பாக்கியா, வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வைத்து பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தார். அப்போது ஹோட்டலில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து தங்கள் வேலையை நினைத்து கஷ்டப்பட்டு பேச, பாக்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி மீண்டும் நாம் ஹோட்டலை திறப்போம் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

எல்லா நகைகளையும் அடமானம் வைக்க இருப்பதாக ஈஸ்வரியிடம் பாக்கியலட்சுமி சொன்னார். உடனே ஈஸ்வரி, தன்னிடம் இருக்கும் நகைகள், தாலியையும் கொடுத்தார். இதனால் பாக்கியா கோபப்பட்டு வாங்க மறுத்தார். பின் தன்னுடைய நகைகள் எல்லாம் வைத்து பணத்துக்கு ஏற்பாடு செய்தார் பாக்கியா. அதற்கு பிறகு தனக்கு தெரிந்தவர் மூலம் வட்டிக்கு பணம் கேட்டு ரெடி பண்ணார். அதோடு பாக்யாவிற்கு மாத்தி மாத்தி போன் செய்து பணத்தை கேட்டு டார்ச்சர் செய்து இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

இந்த வாரம் ரெஸ்டாரண்டில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதை அறிந்த பாக்யா, எல்லோரையும் சமாதானப்படுத்தி இருந்தார். ஆனால், அவர்கள் யாருமே கேட்கவில்லை. கடைசியில் போலீஸ் வந்து பாக்கியாவுக்கு வார்னிங் கொடுத்தது. நேற்று எபிசோட்டில் பாக்கியா சொன்ன இடத்திலிருந்து பணம் வந்தது. ஒரு வழியாக எல்லோருக்குமே பணத்தை செட்டில்மெண்ட் செய்து விட்டார். இதை அறிந்த கோபி கோபப்பட்டு பாக்கியாவை அழிக்க இன்னும் திட்டம் போடுகிறார்.

இன்றைய எபிசோட்:

அப்போது வந்த செழியன், வேலை பற்றி கோபியிடம் கேட்க, அதற்கு அவர் பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி இருந்தார். இதை அறிந்த கோபி நண்பர், எதற்கு உன் மகனை ஏமாற்றுகிறாய்? என்று கேட்டதற்கு பாக்யாவை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் இதெல்லாம் செய்கிறேன் என்று மீண்டும் வன்மத்தை கொட்டி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் பாக்யா- ஈஸ்வரி இருவருமே நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று செழியன் வருத்தப்பட்டு பேச, பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார்.

சீரியல் ட்ராக்:

எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டு எப்படியாவது ரெஸ்டாரண்டை திறக்க வேண்டும் என்று பாக்கியா-செல்வி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் காலையில் செழியன் வேலைக்கு போவதாக சொல்லி கிளம்புகிறார். தான் ராசி இல்லாதவள் என்று நினைத்து ஈஸ்வரி ஒதுங்கி நிற்கிறார். பாக்யா, எவ்வளவோ ஆறுதல் சொல்லி ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் செழியன், எழிலை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி அழுது புலம்புகிறார். இதை பார்த்த கோபி, செழியனிடம் விசாரித்தார். பின் முதலில் உனக்கு வேலையை ரெடி பண்ணலாம். அதற்குப் பிறகு எழிலை பார்க்கலாம் என்று ஏதோ சொல்லி சமாளிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full