ராதிகாவை தேடி அலையும் கோபி, பாக்கியா என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, போதை தெளிந்து தன் அம்மாவிடம் பேசினார். அப்போது ஈஸ்வரி, போனவளை நினைத்து எங்களை கஷ்டப்பட வைக்காதே. இந்த இரண்டு வருட வாழ்க்கையை மறந்து விட்டு எங்களுடன் சந்தோஷமாக இரு. உன் பிள்ளைகளை பார் என்றெல்லாம் பேசினார். கோபி எதுவும் சொல்லாமல் ராதிகாவை நினைத்து அழுதார். கோபி, வாழ்க்கையே போனது என்று பயங்கரமாக வருத்தப்பட்டு வேதனையில் இருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்பட்டு கொண்டிருந்தார்.
உடனே ராதிகா, நாம் மூவரும் தானே எப்போதும் ஒன்றாக இருந்தோம். தேவையில்லாத விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொன்னார். பின் மாடியில் கோபி, ராதிகாவின் நினைவுகளை நினைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது செழியன் தன் அப்பாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்கு கோபி, உங்க அம்மா ரொம்பவே இந்த குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் தான் பெண்கள் நிலைமையை புரிந்து கொள்வதில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அதைக் கேட்டவுடன் செழியன் அழுதார்.
பாக்கியலட்சுமி:
பின் அவர் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட்டு பேச, பாக்கியாவும் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தார். நேற்று எபிசோட்டில் மீண்டும் கோபி, ராதிகா வீட்டுக்கு சென்றார். ஆனால், அவருடைய அம்மா, ராதிகா- மயூ இருவரும் இங்கில்லை. அவர்கள் எதுவும் சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டார்கள். எனக்கு கூட தெரியாது என்று சொன்னார். ஆனால், அதை கோபி ஏற்காமல் மீண்டும் மீண்டும் ராதிகாவை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா-மயூ இருவரும் பீச்சில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா, இனி உனக்கு எந்த கஷ்டத்தையும் நான் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறேன்.
நேற்று எபிசோட் :
உனக்கு தந்தை என்று யாருமில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி பெயரில் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதை பாக்கியா வாங்கி வைத்தார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் பாக்கியா அந்த கவரை கொடுத்தார். அதை பிரித்து பார்த்தவுடன் கோபி ஷாக் ஆனார். அதில் ராதிகா, கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதைக் கேட்டவுடன் மொத்த பேரும் ஷாக் ஆகி இருந்தது. கோபிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை நினைத்து கோபி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது வந்த ஈஸ்வரி, ராதிகாவை மறந்துவிடு. உன்னுடைய குடும்பத்தை பார். அவள் உன் வாழ்க்கையில் இல்லை என்றெல்லாம் அவருடைய மனதை மாற்ற பார்க்கிறார். ஆனால், கோபி அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் கோபி, ராதிகாவை பார்க்க வீட்டிற்கு போகிறார். அந்த வீட்டையும் ராதிகா காலி செய்து விடுகிறார். அப்போது பாக்கியாவும் ராதிகாவை பார்க்க வருகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், ராதிகா போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கோபி-பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ராதிகா, வேறு ஒரு நம்பரில் இருந்து பாக்கியாவிற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது பாக்கியா, எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்க, நான் சரியாக யோசித்து தான் எடுத்தேன். யாருக்காகவும் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே கோபி போனை வாங்கி பேச, ராதிகா ஃபோனை வைத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.