கோபி செய்த அட்ராசிட்டி, இனியா மீது கோபப்படும் நிதிஷ் அம்மா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா தன்னுடைய கடையில் பாடுபவர்களுக்கு 30% டிஸ்கவுண்ட் என்று போஸ்டர் ஓட்டினார். இதைப்பற்றி தன் மகளிடம் சொல்லியும் சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி- ராதிகாவை மீண்டும் சேர்த்து வைப்பதற்காக ராதிகாவிற்கு ஃபோன் செய்து பேசி இருந்தார். ராதிகா, நான் சென்னைக்கு தான் ஒரு வேலை விஷயமாக வந்திருக்கிறேன் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, நான் சந்திக்கலாமா? உன்னிடம் பேச வேண்டும் என்றார். அதற்கு ராதிகாவும் ஒற்றுக்கொண்டார். இன்னொரு பக்கம் ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலர் போஸ்டரை பார்த்து நாங்கள் நன்றாக பாடுவோம் என்று அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.
பாக்கியா கோபப்படாமல் சூப்பராக இருக்கிறதுஎன்று சொல்லி சாப்பாடு போட்டு டிஸ்கவுண்ட் செய்து மீதி பணத்தை கொடுத்தார். கவுன்சிலரால் எதுவுமே பேச முடியவில்லை, அங்கிருந்து சென்று விட்டார்.
இன்னொரு பக்கம் நிதீஷ் போதைக்கு அடிமையாகி பைத்தியம் பிடித்தவன் போல் ரூமில் பேசிக் கொண்டிருந்தார். இனியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் நிதிஷின் அம்மா, சுதாகரிடம் பழையபடி அவன் அந்த பழக்கத்திற்கு சென்று விட்டான். பயமாக இருக்கிறது என்று புலம்ப, சுதாகர் ரூமிற்கு போனார். அப்போது இனியா, அவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டார். சுதாகர், ஏதோ சொல்லி சமாளித்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, ராதிகாவை ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது ஈஸ்வரி, நீ தனியாக இருக்கிறாயா? நான் உன்னை தவறாக புரிந்து கொண்டேன். நீயும் கோபியும் சேர்ந்து வாழ விடாமல் தடுத்துவிட்டேன். கோபி தனியாக ரொம்ப கஷ்டப்படுகிறான். நீ மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழுவாயா? என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு கோபம் வந்தது. பின் ராதிகா, நான் என் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன்.
நேற்று எபிசோட்:
இனி திருமணம் நான் செய்ய போவதில்லை. தயவு செய்து இதைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்லி விடுவதால் ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு பிறகு ராதிகா, கோபிக்கு போன் செய்து வரவைத்தார். பின் ஈஸ்வரி தன்னிடம் சொன்னதை எல்லாத்தையும் கோபியிடம் சொன்னார். உடனே கோபி, ராதிகாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது ஈஸ்வரிடம் கோபி, எதற்காக ராதிகாவை சந்தித்து பேசினீர்கள். நான் உங்களிடம் திருமணம் கேட்டேனா? நீங்கள் தேவையில்லாததை செய்யாதீர்கள் என்று ஈஸ்வரிடம் கோபப்பட்டார். அந்த சமயம் பார்த்து பாக்கியா வந்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியலட்சுமி ஹோட்டலில் சாப்பிட வந்த கஸ்டமர் எல்லாம் தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடி பாடுகிறார்கள். அந்த சமயம் வந்த கோபி, நானும் பாடுவேன். அதைக் கேட்டு எனக்கும் டிஸ்கவுண்ட் செய்யுங்கள் என்று சொல்கிறார். பின் கோபி அருமையாக பாடுவதை கேட்டு பாக்கியா அசந்து போய்விட்டார். கோபி, நான் பாடுவேன் என்று உனக்கு இதுவரை தெரியாது. எப்படி இருக்கிறது என் பாட்டு என்று கேட்கிறார். நன்றாக இருக்கிறது என்று பாக்கியா சொல்கிறார். அதற்குப்பின் ராதிகாவிடம் ஈஸ்வரி பேசியதை பற்றி கோபி சொல்கிறார். அதற்கு பாக்கியா, எனக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை. அது உங்கள் விருப்பம் என்று சொல்லி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் நிதிஷ் வழக்கம் போல் டிரக்ஸ் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். நிதிஷ் நடவடிக்கைகள் சரி இல்லை. இதனால் பயந்த அவருடைய அப்பா, அம்மா இருவருமே நிதிஷை ரூமிற்கு அழைத்து போகிறார்கள். இதை பார்த்த இனியா, என்னாச்சு? இவர் ஏன் குடிக்கிறார்? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார். உடனே நிதிஷின் அம்மா, இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் நீதான் என்று வழக்கம்போல இனியாவை தான் திட்டுகிறார். பின் சுதாகர், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசுலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்று வேதனையில் இருக்கிறார். அப்போது பாக்கியாவிடம் ஈஸ்வரி, நான் ராதிகாவை பார்த்து பேசியது உனக்கு எந்த வருத்தமும் இல்லை தானே என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதில் எந்த ஒரு கருத்தும் இல்லை என்று சென்று விடுகிறார்.