திருமணத்தை நடத்த கோபி போடும் நெஞ்சுவலி நாடகம், இனியா என்ன முடிவெடுக்கப் போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், உங்களுடைய மகளை என் மகனுக்கு கட்டி வைக்க சம்மதமா? நான் என் மகனுக்காக பெண் தேடுகிறேன். உங்களுடைய குடும்பம் நல்ல குடும்பம் என்று எல்லாம் சொல்ல, கோபி ஷாக் ஆனார் .பின் என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தார் கோபி. உடனே சுதாகர், என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு வீட்டில் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கோபி சொன்னார். உடனே சுதாகர், உங்களுடைய முடிவு சொல்லுங்கள் என்று கேட்க, கோபி சம்மதம் சொன்னார். நேற்று எபிசோட்டில் சுதாகரின் குடும்பம் ரொம்ப பிடித்து விடுவதால் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார் கோபி.
பின் வீட்டில் ஈஸ்வரி, செழியன் இடம் இதைப் பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார் கோபி. ஈஸ்வரிக்கும் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னார். பின் பாக்யாவிடம் ஈஸ்வரி, செழியன், கோபி மூவருமே இனியா திருமணத்தை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் பாக்கியாவிற்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் கோபி, பெரிய குடும்பம். நல்ல சம்மந்தம், இனியா வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்றெல்லாம் சொல்லி பேசி இருந்தார். அதற்கு பாக்கியா, இனியா இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார். அவளுடைய விருப்பம் தான் என்று சொல்ல, கோபத்தில் ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டிவிட்டு சொன்னார்.
பாக்கியலட்சுமி:
உடனே கோபியும், இந்த திருமணம் நடக்கும் என்று சவால் விட்டு சென்றார். அதற்குப்பின் கோபி, இனியாவை தனியாக சந்தித்து பேசி இருந்தார். அப்போது மாப்பிள்ளையின் போட்டோவை காண்பித்து திருமணத்தைப் பற்றி கோபி சொன்னார். உடனே இனியா, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. நான் மேற்கொண்டு படிக்கணும். என்னுடைய கேரியரில் சாதிக்கணும் என்று அங்கிருந்து சென்று விட்டார். பின் வீட்டில் தன் தந்தை சொன்னதை பற்றி பாக்கியாவிடம் சொன்னார் இனியா. அந்த சமயம் பார்த்து செழியன், உன்னால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னவுடன் இனியா ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் இனியா, கோபியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு செல்கிறார். அங்கு கோபி, எனக்கு மன அழுத்தத்தினால் நெஞ்சு வலிக்கிறது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, உன் கல்யாணத்தை நினைத்து தான் உன் அப்பா இந்த மாதிரி ஆனார் என்று சொன்னவுடன் இனியா தன் தந்தைக்காக திருமணத்திற்கு ஒத்து கொள்கிறார். இனியா தன்னைப் பெண் பார்க்கும் வரும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல, அவரால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அடுத்த நாள் சுதாகர் வீட்டில் இருந்து இனியாவை பெண் பார்க்க வருகிறார்கள். ஆனால், சுதாகர் வரவில்லை. அதற்கு பின் சுதாகர் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்தவுடன் பாக்யா, ஷாக் ஆகிறார். சுதாகரின் எண்ணத்தை பாக்கியா புரிந்து கொள்கிறார். ஆனால், வெளியில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் இனியாவையும், சுதாகரின் மகனையும் தனியாக பேச அனுப்பி வைக்கிறார்கள். அப்போது சுதாகரின் மகன் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், இனியா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அதற்கு பின் காபி ஷாப்பில் சந்திக்கலாம் என்கிறார் சுதாகர் மகன்.
https://www.youtube.com/watch?v=8SSPUyaQTQY&t=31s
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சுதாகர் இன்னும் சில தினங்களிலேயே நாட்கள் நன்றாக இருக்கிறது கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். உடனே பாக்கியா, அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டவுடன் சுதாகர் ஷாக் ஆகிறார். அதற்குப்பின் கோபி, நெஞ்சுவலி வந்துவிட்டது என்று ஹாஸ்பிடலில் இருக்கிறார். இதை செழியன் வீட்டில் எல்லோரிடமும் சொல்லி இனியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல பார்க்கிறார். அதற்கு பாக்கியா, இது உங்க அப்பாவுடைய டிராமாவாக இருக்கும், நம்பாதே என்று சொல்கிறார். பின் ஹாஸ்பிடலுக்கு சென்ற இனியாவிடம் கோபி, எனக்கு உன்னுடைய கல்யாணத்தை பார்க்கணும். அதுதான் என்னுடைய விருப்பம். தயவு செய்து திருமணத்திற்கு சம்மதம் சொல்வாயா? என்று சொன்னவுடன் இனிய அழுகிறார்.