மீண்டும் பாக்கியாவை வம்பிழுக்கும் கவுன்சிலர், துணை நிற்கும் கோபி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 1/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கவுன்சிலர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவை உள்ளே அழைத்து வந்தார்கள். அப்போது பாக்கியா, அமைச்சரிடம் தன்னை பற்றிய விவரத்தை சொல்லிவிட்டு கவுன்சிலர் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விஷயத்தையெல்லாம் சொன்னார். இதைக் கேட்டவுடன் அமைச்சருக்கு பயங்கர ஷாக். பாக்கியா ஆதாரத்துடன் கவுன்சிலரின் முகத்திரையை கிழித்தார். அமைச்சர் கவுன்சிலரை திட்டி விட்டு செழியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இதனால் பாக்கியாவிற்கு சந்தோசம்.

பாக்கியா- செல்வி இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போது கவுன்சிலர் வழிமறித்து மிரட்டி இருந்தார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பாக்கியா, செழியனை பார்த்து ரொம்ப எமோஷனலாக கட்டி பிடித்து அழுதார். அதற்குப்பின் அங்கு வந்த கவுன்சிலரின் எதிரி குரூப், ஒரு பிள்ளைக்காக ஒரு தாய் எப்படியெல்லாம் போராடுவார் என்பதை உன் அம்மா நிரூபித்து விட்டார் என்றெல்லாம் பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார். இதெல்லாம் கேட்டு செழியன் தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந்தார்.

பாக்கியலட்சுமி:

அதற்குப்பின் செழியன் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். பாக்கியவை பார்த்தவுடன் ஈஸ்வரி, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, அமைச்சர் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். மறுநாள் காலையில் ஈஸ்வரி, நீ வேலைக்கு போக வேண்டாம். வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள் என்று சொல்ல, பாக்கியா முடியாது என்று கிளம்பி விட்டார். பின் பாக்கியா ஹோட்டலை திறக்க, அந்த ஓட்டலின் ஓனர், இனிமேல் நீங்கள் ஓட்டல் நடத்த வேண்டாம். தயவு செய்து கிளம்புகள் என்று சொன்னார். அதை கேட்டு பாக்கியா ஷாக் ஆனார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பாக்கியா- செல்வி இருவருமே எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த ஓனர் கேட்கவே இல்லை. கடையை மூடி விட்டார். வேதனையிலேயே வீட்டுக்கு வந்த பாக்கியா, ஈஸ்வரியிடம் மனதை விட்டு எமோஷனலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் சுதாகர், செழியனை பற்றி பேசி இருந்தார். அதற்கு இனியா, என் அண்ணன் நேற்றே வந்து விட்டான். என் அம்மா தான் அமைச்சரின் மூலம் அண்ணாவை வெளிக்கொண்டு வந்தார் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். பின் சுதாகர், அந்த ஓட்டலை நடத்த வேண்டாம். என் ஸ்டேட்டஸ் என்னாவது? என்று சொன்னவுடன் இனியா, கோவப்பட்டு என் அம்மா ஓட்டலை நடத்துவார்.

சீரியல் ட்ராக்:

உங்களால்தான் எங்க அம்மாவுடைய ரெஸ்டாரன்ட் போய்விட்டது என்று சுதாகரை எதிர்த்து பேசினார். இதனால் கோபப்பட்ட சுதாகரின் மகன் இனியாவை கண்டித்தார். மறுநாள் காலையில் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவின் வீட்டிற்கு வந்து சமையல் செய்ததற்காக பணத்தை கொடுக்க, பாக்கியா வாங்க மறுத்தார். அதற்கு அவர், நீங்கள் செய்த வேலைக்கு தான் பணம். இனிமேல் எந்த விழா என்றாலும் நீங்கள் தான் சமைக்கணும் அமைச்சர் சொல்லிவிட்டார் என்று சொன்னவுடன் பாக்கியா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலில் ஓனர் வீட்டுக்கு சென்று சென்றிருந்தார். அங்கு ஓனரின் மருமகன் 5 லட்சம் பணம் கேட்டு ப்ரச்சனை செய்ததால் பாக்கியா பணம் தந்தார். இதனால் ஓனர் மனம் மாறி பாக்கியாவை ஹோட்டல் திறக்க சொன்னார்.

https://www.youtube.com/watch?v=e74e5JB8RkI

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு கோபி வந்திருக்கிறார். அப்போது அவர், எந்த கவுன்சிலர் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வேலை செய் என்று சொல்கிறார். அப்போது கவுன்சிலர், பாக்யாவின் ஓட்டலுக்கு வருகிறார். கோபி இருப்பதை பார்த்து அவரால் எதுவும் பேச முடியவில்லை. அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ஹோட்டல் முடியும் வரை கோபி, பாக்கியா உடனே இருந்து அவருக்கு பாதுகாப்பாக வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full