பம்பரமாக வேலை செய்யும் பாக்கியா, புகழ்ந்து தள்ளும் கோபி, ராதிகா நிலைமை? பாக்கியலட்சுமி

By subhashini · 21/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா முழு மனது இல்லாமல் கோபி இடம் உதவி கேட்டார். கோபியும் சரி என்றார். ஈஸ்வரி, எப்படியாவது பாக்கியா- கோபியை சேர்த்து வைக்க வேண்டும். அதற்கான வேலையை நான் செய்யப்போகிறேன் என்று சொன்னார். உடனே செழியன், எப்படி முடியும் என்று சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ஈஸ்வரி. அதற்குப்பின் இனியா தன்னுடைய டான்ஸ் காம்பிடிஷன் பற்றி கோபியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மையூ, தான் போட்டியில் வெற்றி பெற்றதை சொன்னவுடன் கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

பின் அவருக்காக பரிசு வாங்கி தருவதாக சொல்ல, மையூ ரொம்ப சந்தோஷப்பட்டார். மேலும், கோபி சென்றவுடன் ஈஸ்வரி, உன் அப்பாவிடம் கேளு. கோபி இனியாவுடைய அப்பா. உனக்கு கிடையாது என்று ரொம்ப மோசமாக மையூவை பேசி இருந்தார். இதனால் மையூ ரொம்ப எமோஷனலாக அழுதார். அங்கு வந்த ராதிகா, ஈஸ்வரி பேசியதை கேட்டு மையூவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பாக்யா, ஈஸ்வரிடம் அவர் செய்த தவறை உணர்த்தி இருந்தார். பின் ராதிகா- கோபி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாக்கியலட்சுமி:

அப்போது கோபி இனியா டான்ஸ் காம்பிடிசன் பற்றியும், பாக்கியாவின் திறமையும் பற்றி பேசி கொண்டே இருந்தார். இதனால் வெறுப்பான ராதிகா தூங்கி விட்டார். நேற்று எபிசோட்டில் மையூ, ஈஸ்வரி சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இதை அறிந்த பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இருந்தாலுமே மையூவின் மனம் மாறவில்லை. பின் இனியா, போட்டியில் வென்றதற்காக மயூவுக்கு பரிசு கொடுத்தார்.

நேற்று எபிசோட்:

பின் பாக்கியா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார். அப்போது கோபி, தன்னுடைய செப்புகளை அழைத்து வந்து பாக்கியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கோபியின் செயலை பார்த்து எல்லோருமே பாராட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ராதிகா, கோபிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது கோபி, சமையல் ஆர்டரை பற்றியும், பாக்யா செய்யும் வேலையைப் பற்றியும் ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டு ராதிகாவிற்கு வெறுப்பு தான் வந்தது. அதற்குப்பின் வீட்டில் பாக்யா, வேறு வழியில்லாமல் தான் கோபி சொன்ன ஆஃபரை ஏற்றுக்கொண்டேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கோபி, அவருடைய தவறு உணர்ந்து உதவி செய்கிறார். அது உங்களுடைய விருப்பம். ஆனால், என்னுடைய உதவியை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னவுடன் பாக்கியா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று இருவரும் பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். மறுநாள் காலையில் சமையல் ஆர்டருக்கான வேலைகள் மும்முரமாக நடக்கிறது. கோபியும் பாக்யாவிற்கு உதவியாக சமையல் செய்ய வருகிறார்.

சீரியல் ட்ராக்:

பரபரப்பாக பாக்யா வேலை செய்வதை பார்த்து கோபி ஆச்சரியப்படுகிறார். பின் இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேச அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசுகிறார். பின் திடீரென புதுசாக ஒரு டிஷ் கொடுத்ததால் பாக்கியாவும் செய்கிறார். பின் ஆர்டர் கொடுத்தவர் சமையல் நடக்கும் இடத்திற்கு வருகிறார். உடனே தான் சமைத்த உணவுகள் எல்லாம் பாக்கியா கொடுத்தார். அவரும் சாப்பிட்டு பார்த்து பாக்யாவின் சமையலை பாராட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full