அமிர்தா இருக்கும் இடத்தை அறிந்த கோபி, தந்தையுடன் இணைவாராஎழில்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 14/8/2024

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, பொய் சொல்லி பார்ட்டிக்கு சென்று இருந்ததால் மிக பெரிய கலவரம் நடந்தது. கடைசியில் பாக்யா கல்லூரி முதல்வரிடம் பேசி இனியாவின் பிரச்சனையை எப்படியோ முடித்து வைத்தார். கடந்த வாரம், இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு, இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா, இனியாவை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார்.

இன்னொரு பக்கம், கோபி- ராதிகா இடையே சண்டை நடந்தது. கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். பின் கோபத்தில் வெளியே சென்ற கோபி தன்னுடைய நண்பருடன் பாரில் குடித்துக்கொண்டு வீட்டில் நடந்ததை எல்லாம் பேச அப்போது புது நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்தார். அவரிடம் கோபி, பாக்கியா ரெஸ்டாரன்ட்டை கெடுக்க திட்டம் போட்டார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

அதன் பின் எழில், மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்றிருந்தார். ஆனால், அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷப்பட்டு தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்தார். அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, பயங்கர மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விட்டார். பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி அழுத எழிலுக்கு, அமிர்தா மற்றும் பாக்கியா ஆறுதலாக பேசி இருந்தார்கள்.

சீரியல் கதை:

அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்படுகிறார்கள். நேற்று எபிசோடில், அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என்று இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து அழுது கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்து எழில், அமிர்தாவின் முகம் மாறி இருப்பதை கண்டு என்ன நடந்தது? என்று கேட்க, அமிர்தாவும் வீட்டில் நடந்தது எல்லாத்தையும் சொல்லி விடுவார். இதனால் வீட்டிற்கு வந்த எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசுகிறார்.

நேற்று எபிசோட்:

அதற்கு ஈஸ்வரி, உன் பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. ஈஸ்வரி, உன்னோட பெரியவன் சம்பாதிக்கிறான், இரண்டு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டான். நீ என்ன செய்கிறாய்? நான் இப்படிதான் பேசுவேன். நிலாவிற்கு மூணு வேளை சாப்பாடு உங்களால் போட முடியுமா? என்று சொன்னவுடன் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=uKpnb3qxCf0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இனியா வீட்டில் நடந்ததை எல்லாம் கோபியிடம் சொல்கிறார். உடனே அவர், அமிர்தாவுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன பண்ணுகிறீர்கள்? என்று கேட்டவுடன், எழில் சொல்லாதே என்று தலையை ஆட்டி காட்டுகிறார். கடைசியில் கோபி, எழில்- அமிர்தா இருக்கும் ஹோட்டலுக்கு வந்து, அவள் என்ன அம்மா? உங்களை வெளியே போக சொல்வதற்கு அவள் யார்? என்று வழக்கம் போல் பாக்கியாவை திட்டி பேசிவிட்டு, நிலாவை கொஞ்சுகிறார். இது எல்லாம் பார்த்து எழிலுக்கு கோபம் வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full