ராமமூர்த்தியின் அஸ்தியை கங்கையில் கரைத்த எழில், வேதனையில் புலம்பி அழும் கோபி-பாக்கியலட்சுமி

By subhashini · 11/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கோவிலில் தடபுடலாக கொண்டாடி இருந்தார்கள். பின் ராமமூர்த்தி, மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி தூங்கி இருந்தார். மறுநாள் ஈஸ்வரி, ராமமூர்த்தியை எழுப்ப அவர் எழவே இல்லை. மொத்த குடும்பமே வந்து ராமமூர்த்தியை எழுப்பி இருந்தார்கள். பின் மருத்துவர் செக் பண்ணி, அவர் இறந்துவிட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமும் நம்பவும் முடியாமல், ஏற்று கொள்ள முடியாமல் பரிதவித்து இருந்தது. தன்னுடைய தந்தை இறந்ததை அறிந்த கோபி ரொம்ப அழுதார்.

ஒவ்வொருவருமே தாத்தாவை நினைத்து புலம்பி அழுது இருந்தார்கள். பழனிச்சாமி, இறுதி சடங்கிற்கு தேவையான வேலைகளை செய்தார். அப்போது ராதிகாவின் அம்மா வந்து ஓவராக ட்ராமா செய்தார். கடந்த வாரம், இறுதி சடங்கு செய்ய கோபி தயாராகி இருந்தார். உடனே ஈஸ்வரி, நீ செய்யக்கூடாது. என்னுடைய புருசனின் கடைசி ஆசையே அதுதான் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
உடனே கோபி, என்னுடைய அப்பாவிற்கு நான் தான் இறுதி சடங்கு செய்வேன் என்று அழுது கெஞ்சி இருந்தார். இருந்தாலுமே, ஈஸ்வரி ஏற்றுக் கொள்ளவில்லை. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரியை சமாதானம் செய்தும் அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை.

பாக்கியலட்சுமி சீரியல்:

மேலும் , இதை யார் செய்வார்கள்? என்று கேட்டதற்கு பாக்யா தான். மகள் இடத்தில் இருந்து எல்லாமே செய்வாள் என்று சொன்னவுடன் கோபி ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் பாக்கியா தன்னுடைய மாமனாருக்கு இறுதி சடங்குகளை செய்தார். இதை பார்த்து கோபி அழுது புலம்பி கத்தினார். ராமமூர்த்தி இறுதி ஊர்வலம் நடந்தது. ராமமூர்த்தியை மயான பூமிக்கு எடுத்து சென்றார்கள். பாக்கியா தான் கடைசி சடங்குகளை எல்லாம் செய்து கதறி கதறி அழுதார். கோபி ஓரமாக நின்று எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து விடுகிறது. மன வேதனையில் பாக்கியா, எழில் வீட்டிற்கு வந்தார்கள்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம், கோபி ராதிகாவிடம் புலம்பி அழ, அவர் ஆறுதல் சொல்லியும் ஏற்றுக் கொள்ளாமல் அப்பாவை நினைத்தும், இறுதி சடங்கை செய்ய முடியாததை நினைத்தும் ரொம்ப புலம்புகிறார்.
வேதனையில் ஈஸ்வரி, பாக்யாவின் மடியில் படுத்து ராமமூர்த்தியின் உடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருந்தார். பின் இனியா தன்னுடைய தாத்தாவை பற்றி பேசி அழ, எழில் சமாதானம் செய்து அனுப்பி விட்டு தனியாக நின்று வருத்தப்பட்டார். நேற்று எபிசோடில், பாக்கியா வரும்போதும் சேரில் ராமமூர்த்தி உட்கார்ந்திருப்பது போல பார்த்து கதறி அழுதார்.

நேற்று எபிசோட்:

மறுநாள் ராமமூர்த்தியின் அஸ்தியை வாங்க செழியன்,எழில் சுடுகாட்டுக்கு போனார்கள். அப்போது கோபி, ராதிகாவும் மயானத்திற்கு போனார்கள். எழில் அஸ்தியை வாங்கி வந்த பிறகு, கோபி தன்னுடைய அப்பாவின் அஸ்தியை கேட்டு வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் வீட்டில் ஜெனியை தங்களுடன் அழைத்து செல்வதற்கு அவரின் அப்பா- அம்மா பேச, எல்லோருமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஜெனி மட்டும் நான் இந்த நிலைமையில் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், ராமமூர்த்தியின் அஸ்தியை வைத்த வீட்டில் சாமி கும்பிட்டு கங்கையில் கரைக்க செழியன்-எழில் எல்லோரும் கிளம்புகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் கோபியும் தன்னுடைய அப்பாவின் அஸ்தியை கங்கையில் கரைக்க செல்கிறார். எல்லா சடங்குகளையும் எழில் செய்து முடித்துவிட்டு தாத்தாவை பற்றி நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார் அதற்கு செழியன் ஆறுதலாக, இனி எல்லோருக்காகவும் நான் இருக்கிறேன் என்று சொல்லி சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அப்பாவின் அஸ்தியை கங்கையில் கரைத்து விட்டு ராதிகாவிடம் வேதனையில் அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full