ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் பாக்கியாவை பழிவாங்க துடிக்கும் கோபி- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 21/9/2024

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்தி இறந்ததால் மொத்த குடும்பமும் வேதனையில் இருக்கிறது. ராமமூர்த்தி எழுதிய கடிதத்தை படித்து எல்லோரும் வருத்தப்பட்ட, இதையெல்லாம் வாசலில் நின்று ராமமூர்த்தி ஆத்மா பார்த்தது. இந்த வாரம் ராமமூர்த்தியின் திருவுருவப்படத்தை கடையில் திறக்கும் விழா நடைபெற்றது. ராமமூர்த்தி படத்தை ஈஸ்வரி திறந்து வைக்க, எல்லோருமே அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தி அவரை பற்றி பெருமையாக பேசிய இருந்தார்கள். கடைசியில் கோபி மைக்கை வாங்கி, தான் நல்ல அப்பா என்றும், ராமமூர்த்தியை பற்றி திட்டி மோசமாக பேச எல்லோருமே கோபப்பட்டார்கள்.

பின் பாக்கியா, நீங்கள் சரியான தந்தையாக இருந்தீர்களா? என்று கேட்டவுடன் கோபி ஆத்திரத்தில் கத்த, பாக்கியா பதில் கொடுத்தார். இந்த வாரம் எழில் புது வீட்டிற்கு பாக்கியா தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு போய் இருந்தார். அதை பார்த்து எழில்-அமிர்தா சந்தோசப்பட்டு புது வீட்டில் பால் காய்ச்சி சாமி கும்பிட்டு இருந்தார்கள். அதற்கு பின் பாக்கியா, எழில் சாதித்து வருவான். அங்கிருந்தால் தேவையில்லாத பிரச்சினை என்பதால் நான் வெளியில் போக சொன்னேன். கண்டிப்பாக ஒருநாள் என் மகன் சாதிப்பான் என்று பேசுவதை வெளியில் இருந்து எழில் கேட்டு கண் கலங்கி இருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்:

நேற்று எபிசோட்டில் எழிலை பார்க்க செழியன் புது வீட்டிற்கு சென்றிருந்தார். பின் மூவருமே உட்கார்ந்து சாப்பிடு கொண்டிருந்தார்கள். அப்போது செழியன், புது டிவி வாங்கி தந்தார். அந்த சமயம் பார்த்து கோபி, வீட்டிற்கு வந்து எழிலை நலம் விசாரித்தார். அதற்குப்பின் நிலாவிடம் கோபி பணத்தை கொடுத்து வைத்துக் கொள் என்று சொல்ல, எழில் வாங்க மறுத்தார். உடனே கோபி, இது நிலாவிற்கு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் பாக்யா வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செல்வி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பற்றி பேசும்போது இனியா, நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லோருக்கும் பெருமை சேர்க்க போகிறேன் என்று சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே கிண்டலாக பேசி இருந்தார்கள். மறுநாள் கல்லூரிக்கு இனியாவை ஈஸ்வரி அழைத்துப் போனார். அதை பார்த்த கோபி தன்னோட அம்மாவிடம் எவ்வளவோ பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், ஈஸ்வரி மனம் மாறாமல் அப்படியே இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இதனால் கோபப்பட்டு கோபி, நான் மனமுடைந்து சொல்கிறேன், உங்களை ரொம்ப வெறுக்கிறேன் என்று சொன்னவுடன், நான் வெறுப்பதற்கு கூட உன்னை ஒரு ஆளாக நினைக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி கிளம்பிகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த கோபி, தன் அம்மா சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்படுகிறார். பின் ராதிகாவிடம், இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். அவளை என்ன செய்கிறேன் என்று பார், அடையாளம் தெரியாமல் அழிக்க போகிறேன் என்றெல்லாம் வில்லனாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே ராதிகா, எல்லோரைப் பற்றியும் தெரிந்த வரை போதும். நமக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை இருக்கிறது. அது வாழலாம் என்று சொல்கிறார். ஆனால், பாக்யாவை பழிவாங்குவதைப் பற்றி தான் கோபி யோசித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் பாக்யா, பம்பரமாக சுற்றி வேலை செய்து கொண்டிருக்கிறார். இது எல்லாம் பார்த்த பழனிசாமி, நீங்கள் சமைப்பதற்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்ல, பாக்யா யோசிக்கிறார். கடைசியில் இனியா, கல்லூரியில் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நடன போட்டி நடைபெறுவதாக சொல்கிறார்கள். இனியாவை கலந்து கொள்ள கேட்க, அவர் தயங்குகிறார். ஆனால், இனியா நண்பர்கள் எல்லோருமே பெயர் கொடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full