பாக்கியா சொன்ன வார்த்தையால் கோபி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ஈஸ்வரி - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா போகவிடாமல் தடுத்தார்கள். உடனே ஈஸ்வரி, நாம குலதெய்வ கோவிலுக்கு போகணும். எல்லோரும் கிளம்புங்கள் என்று சொன்னதால் கோபியால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார். கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி,கோபி தான் கோயிலுக்கு போனார்கள். கோபி தன்னுடைய குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை அறிந்த ராதிகா, கோபப்பட்டு வீட்டை காலி செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
இதை அறிந்த பாக்கியா, ராதிகாவிடம் தனியாக பேச அழைத்தார். பாக்கியா- ராதிகா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா எடுத்து சொல்லியும், ராதிகா கேட்காமல் கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இதை போட்டோ எடுத்து இனியா சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார். இதை பார்த்த பாக்கியாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் ராதிகா, இனியா வைத்த ஸ்டேட்டஸை பார்த்து வேதனைப்பட்டார்.
பாக்கியலட்சுமி:
பின் ராதிகா வீட்டை காலி செய்யும் விஷயம் பாக்கியாவுக்கு தெரிய வந்தது. பின் இதை போனில் இனியாவிடம் சொன்னார் பாக்கியா. இதை இனியா, ஈஸ்வரி இடம் சொன்னார். உடனே அவர், இந்த விஷயம் கோபிக்கு தெரியக்கூடாது. ராதிகா அங்கிருந்து போகட்டும் என்றார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மா, மயூவை புது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின் அவர் அந்த வீட்டில் ரொம்ப வருத்தத்தோடு படுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாக்கியா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். பின் இருவரும் மனது விட்டு பேசி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் கோயில் ட்ரிப் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அங்கு நடந்த விஷயத்தை எல்லாம் ஈஸ்வரி, கோபி சொல்லி சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இது எல்லாம் கேட்டு பாக்கியாவிற்கு கோபம் தான் அதிகமானது. பின் பாக்கியா, கோபி இடம் தனியாக பேச அழைத்தார். அப்போது அவர், ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தான் நீங்கள் துரோகம் செய்தீர்கள். உங்களை நம்பி வந்தவர்களையும் இப்படி ஏமாற்றுவதா? என்று ரொம்ப ஆவேசமாக பேசி இருந்தார்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. பாக்கியா சொன்னதை கேட்டு கோபி ரொம்ப எமோஷனல் ஆனார். பின் கோபி, நான் ராதிகாவை பார்க்க போகிறேன் என்றவுடன் ஈஸ்வரி வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், கோபி கேட்கவில்லை. இனியா- செழியன் இருவருமே ஈஸ்வரியுடன் சேர்ந்து ராதிகாவை பார்க்க வேண்டாம் தடுத்தார்கள். உடனே பாக்கியா திட்டி விட்டு அங்கிருந்து செல்ல, கோபியும் ராதிகாவை பார்க்க போனார்.
https://www.youtube.com/watch?v=OW0mx6UWPek
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி, ராதிகா மொத்தமாகவே வீட்டை காலி செய்து கிளம்பி விட்டார் என்று வருத்தத்துடன் பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி, அவள் போய் தொலையட்டும். நீ இங்கே இரு என்றவுடன் பாக்யாவிற்கு கோபம் வந்து திட்டுகிறார். அப்போது பாக்கியா, இனியாவிற்கு திருமணமாகி அவர் கணவர் அவரை விட்டு அவர் அம்மா வீட்டிற்கு போய்விட்டால் நீங்கள் இப்படித்தான் அமைதியாக இருப்பீர்களா? என்று சொன்னவுடன் கோபிக்கு அறிவு வருகிறது. பின் அவர் ராதிகாவை தேடி போகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, எப்படி இருந்தாலும் என் மகன் என்னிடம் வந்து விடுவான் என்று சொல்லும்போது கோபி வீட்டிற்கு வெளியே வந்து நிற்கிறார். ஆனால், அவருடன் ராதிகா மயூவை அழைத்துக் கொண்டு வருகிறார். இதை பார்த்து மொத்த குடும்பமுமே ஷாக் ஆகிறது.