ராதிகா எடுத்த முடிவால் மனம் உடைந்த கோபி, அடுத்து என்ன? பரப்பரப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடன போட்டியில் இனியா தோற்று விட்டார். இதற்கு காரணம் ராதிகா தான் என்று சண்டை போட்டார். கோபி, நான் உன்னை அழைத்துக் கொண்டு போயிருக்கக் கூடாது. இந்த பிரச்சனை வந்திருக்காது. எல்லோருமே சந்தோஷமாக இருப்பார்கள் என்று தன்னுடைய குடும்பத்தை மட்டும் யோசித்து பேசி இருந்தார். கொஞ்சம் கூட ஒரு ராதிகாவின் நிலைமையை அவர் யோசிக்கவில்லை. மறுநாள் காலையில் பாக்கியா-ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ராதிகா, எல்லோரும் வெளியே போகலாமா? நான் வீட்டில் எல்லோரையும் வரவைக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா ஒத்து கொண்டார்.
பின் இதைப் பற்றி ராதிகா, கோபியிடம் சொல்ல, அவரும் சம்மதித்து இனியா ஈஸ்வரிடம் பேச, அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். பின் பிக்னிக் செல்வதற்காக எல்லோருமே கிளம்பி இருந்தார்கள். அப்போது ராதிகாவை பார்த்தவுடன் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகா வந்தால் நான் வர மாட்டேன் என்றார். கோபி, எடுத்து சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. ஆனால், ராதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் கோபி தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போய், எனக்காக அவள் வரட்டும். ராதிகா பாவம் அம்மா. நான் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்கிறேன். டென்சன் ஆனால் எனக்கு நெஞ்சுவலி வரும் என்று ட்ராமா போட்டார்.
பாக்கியலட்சுமி :
ஓரு வழியாக எல்லோருமே பிக்னிக் போனார்கள். நேற்று எபிசோட்டில் சந்தோசமாக பாக்கியா குடும்பத்தினர் பிக்னிக்கை கொண்டாடி இருந்தார்கள். ஒவ்வொரு விளையாட்டிலுமே கலந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து ராதிகா சந்தோசப்பட்டார். இதை பார்த்து பாக்கியாவுக்கு சந்தேகம் வந்தது. பின் பாக்கியா- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, என்ன பிரச்சனை என்று கேட்க, ஒன்னும் இல்லை என்று ராதிகா சமாளித்தார். அதற்கு பின் பாக்கியா, இந்த டூர் பிளான் போட்டது ராதிகா தான். ஆனால், இதற்குப் பின் ஏதாவது ஒரு காரணம் இருக்கு என்று எழிலிடம் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
நல்லபடியாக பிக்னிக்கை முடித்து எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கோபி, இந்த பிளானை போட்டது ராதிகா தான் என்று சொன்னவுடன் ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருந்தார். இன்றைய எபிசோட்டில் ராதிகா, பாக்யா கொடுத்த கெடு இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நாம் கிளம்பலாம் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. ஈஸ்வரி- இனியா இருவருமே, எங்கள் அப்பா எங்களுடன் தான் இருப்பாரு என்று சொல்கிறார். உடனே கோபி, இங்கே நாம் இருக்கலாம். நான் பாக்கியாவிடம் பேசுகிறேன் என்று சொல்கிறார். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை.
சீரியல் ட்ராக்:
அதற்கு பாக்கியா, எல்லோரும் அவரவர்கள் இடத்தில் இருந்தால் தான் மரியாதை என்று சொல்கிறார். இதனால் ஈஸ்வரி கோபப்பட்டு பாக்யா- ராதிகாவை திட்டுகிறார். பின் கோபி, ராதிகாவிடம் தனியாக அழைத்து சென்று பேசுகிறார். அப்போது கோபி, இங்கே இருக்கலாம். என்னுடைய நிலைமையை புரிந்துக்கொள் என்று எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்க்கிறார். ராதிகா, நீங்கள் வரவில்லை என்றால் நானும் மையூவும் கிளம்புவது உறுதி என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அப்பாவை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு பாக்யா ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.
https://www.youtube.com/watch?v=AYvumazovvc
சீரியல் ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ராதிகாவை பார்க்க கோபி அவருடைய வீட்டிற்கு வருகிறார். அவரைப் பார்த்தவுடன் மயூ ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், ராதிகா கோபப்பட்டு, நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள்? உங்கள் குடும்பத்துடன் நீங்கள் இருங்கள். உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் நலனுக்காக தான் சொல்கிறேன் என்றார். அதற்கு கோபி, எதற்கு இப்படி சொல்கிறாய்? இந்த பிரிவு தற்காலிகமா இல்ல நிரந்தரமா? நான் உன்னை பார்க்க வரக்கூடாதா? என்றெல்லாம் ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். ராதிகா, இனி நீங்கள் என் வாழ்க்கையில் இல்லை என்று சொல்ல, வேதனையில் கோபி வெளியேறுகிறார்.