வீட்டை விட்டு வெளியேறிய ராதிகா, கோபி என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி

By subhashini · 30/1/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா-ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா, எல்லோரும் வெளியே போகலாமா? நான் வீட்டில் எல்லோரையும் வரவைக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா ஒத்து கொண்டார். பின் இதைப் பற்றி ராதிகா, கோபியிடம் சொல்ல, அவரும் சம்மதித்து இனியா ஈஸ்வரிடம் பேச, அவர்களும் ஒத்துக்கொண்டார்கள். பின் பிக்னிக் செல்வதற்காக எல்லோருமே கிளம்பி இருந்தார்கள். அப்போது ராதிகாவை பார்த்தவுடன் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகா வந்தால் நான் வர மாட்டேன் என்றார். கோபி, எடுத்து சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. ஆனால், ராதிகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

பின் கோபி தன்னுடைய அம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போய், எனக்காக அவள் வரட்டும். ராதிகா பாவம் அம்மா. நான் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்கிறேன். டென்சன் ஆனால் எனக்கு நெஞ்சுவலி வரும் என்று ட்ராமா போட்டார். ஓரு வழியாக எல்லோருமே பிக்னிக் போனார்கள். நேற்று எபிசோட்டில் சந்தோசமாக பாக்கியா குடும்பத்தினர் பிக்னிக்கை கொண்டாடி இருந்தார்கள். ஒவ்வொரு விளையாட்டிலுமே கலந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து ராதிகா சந்தோசப்பட்டார். இதை பார்த்து பாக்கியாவுக்கு சந்தேகம் வந்தது. பின் பாக்கியா- ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாக்கியலட்சுமி :

அப்போது பாக்கியா, என்ன பிரச்சனை என்று கேட்க, ஒன்னும் இல்லை என்று ராதிகா சமாளித்தார். அதற்கு பின் பாக்கியா, இந்த டூர் பிளான் போட்டது ராதிகா தான். ஆனால், இதற்குப் பின் ஏதாவது ஒரு காரணம் இருக்கு என்று எழிலிடம் சொன்னார். நல்லபடியாக பிக்னிக்கை முடித்து எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கோபி, இந்த பிளானை போட்டது ராதிகா தான் என்று சொன்னவுடன் ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருந்தார். நேற்று எபிசோட்டில் ராதிகா, பாக்யா கொடுத்த கெடு இன்றோடு முடிந்துவிட்டது. நாளை நாம் கிளம்பலாம் என்று சொல்ல, மொத்த குடும்பமே ஷாக் ஆனது. ஈஸ்வரி- இனியா இருவருமே, எங்கள் அப்பா எங்களுடன் தான் இருப்பாரு என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே கோபி, இங்கே நாம் இருக்கலாம். நான் பாக்கியாவிடம் பேசுகிறேன் என்று சொன்னார். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு பாக்கியா, எல்லோரும் அவரவர்கள் இடத்தில் இருந்தால் தான் மரியாதை என்று சொன்னார். இதனால் ஈஸ்வரி கோபப்பட்டு பாக்யா- ராதிகாவை திட்டி இருந்தார். பின் கோபி, ராதிகாவிடம் தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது கோபி, இங்கே இருக்கலாம். என்னுடைய நிலைமையை புரிந்துக்கொள் என்று எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தார். ராதிகா, நீங்கள் வரவில்லை என்றால் நானும் மையூவும் கிளம்புவது உறுதி என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அப்பாவை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அவருக்கு பாக்யா ஆறுதல் சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, ராதிகாவிடம் பேசி புரிய வைத்தாயா? என்று கேட்க, கோபி, ராதிகாவிடம் சொன்னேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்கிறார். ஈஸ்வரி- இனியா எல்லோருமே ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள். ஈஸ்வரி சாப்பாடு எல்லாம் போட்டு தன் மகன் இடம் மனம் உருகி பேசுகிறார். பின் ராதிகா, நாங்கள் கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் கோபி துணியை பேக் செய்ய போகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே ராதிகா, நீங்கள் வரவில்லை. நானும் மையூ தான் போகிறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருங்கள் என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். கோபி, நீயும் எங்கே இருக்கிறாயா? ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னவுடன் ராதிகா, இல்லை என்னால் இங்கு இருக்க முடியாது. நான், மையூ கிளம்புகிறோம். உங்களுக்கு சந்தோஷம் எங்கேயோ அங்கே இருங்கள். நாங்கள் விரும்புகிறோம். என் முடிவில் நான் மாற மாட்டேன் என்று எல்லோரிடமும் பேசிவிட்டு கிளம்புகிறார். இதை பார்த்து பாக்கியாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. இனியாவும் தான் செய்த தவறை உணர்ந்து ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full