ஹோட்டலை இழுத்து மூடிய ஓனர், விடாமுயற்சியில் பாக்கியா செய்த வேலை - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் அமைச்சரின் வீட்டிற்கு வெளியே பாக்யா காத்துக் கொண்டிருந்தார். கவுன்சிலரின் எதிரி குரூப், பாக்கியாவை உள்ளே அழைத்தார்கள். அப்போது அமைச்சருக்கு செய்த சமையல் சரியில்லை என்பதால் எதிரி குரூப் ரொம்பவே வேதனைப்பட்டார்கள் . உடனே பாக்கியா, நான் சமைத்து தருகிறேன் என்று சொன்னார். பின் சமையல் வேலையை பாக்கியா செய்து கொண்டு இருந்தார் . அதை பார்த்த கவுன்சிலர், பாக்கியாவிடம் சண்டை வாங்கி மிரட்டி விட்டு சொன்னார். அதற்குப்பின் ஈஸ்வரி, பாக்யாவிற்கு போன் செய்தார். பாக்கியா, நான் ஒரு ஆர்டருக்கு வந்திருக்கிறேன் என்று போனை வைத்து விட்டார். இதனால் ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார்.
ஈஸ்வரி, செழியனை வெளியில் கொண்டு வருவது பற்றி பேசி இருந்தார். கோபி, அதற்கான முயற்சிகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். உடனே ஈஸ்வரி, நீ செழியனை வெளியே எடுக்க போராடினார். ஆனால், பாக்கியா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சமையல் ஆர்டர் எடுத்து இருந்தாள். இவளை எல்லாம் என்ன சொல்வது என்று திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, சமையல் எல்லாம் செய்து முடித்து விட்டார். சாப்பாடு பரிமாறுவதற்கு ரெடியாக இருந்தார். பின் கவுன்சிலர், பாக்கியா அமைச்சரை சந்திக்க விடாமல் தடுத்தார். பின் சாப்பாட்டை சாப்பிட்ட அமைச்சர் ரொம்பவே புகழ்ந்து பாராட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
கவுன்சிலர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவை உள்ளே அழைத்து வந்தார்கள். அப்போது பாக்கியா, அமைச்சரிடம் தன்னை பற்றிய விவரத்தை சொல்லிவிட்டு கவுன்சிலர் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விஷயத்தையெல்லாம் சொன்னார். இதைக் கேட்டவுடன் அமைச்சருக்கு பயங்கர ஷாக். கவுன்சிலர், பாக்கியாவின் மீது பழி போட்டார். ஆனால், பாக்கியா ஆதாரத்துடன் கவுன்சிலரின் முகத்திரையை கிழித்தார். அமைச்சர் கவுன்சிலரை திட்டி விட்டு செழியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இதனால் பாக்கியாவிற்கு சந்தோசம்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் பாக்கியா- செல்வி இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் வழியில் கவுன்சிலர் வழிமறித்து, பாக்கியாவை மிரட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பாக்கியா, செழியனை பார்த்து ரொம்ப எமோஷனலாக கட்டி பிடித்து அழுகிறார். அதற்குப்பின் அங்கு வந்த கவுன்சிலரின் எதிரி குரூப், ஒரு பிள்ளைக்காக ஒரு தாய் எப்படியெல்லாம் போராடுவார் என்பதை உன் அம்மா நிரூபித்து விட்டார். இவர் உன் அம்மாவாக கிடைத்ததற்கு ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பாக்கியாவை புகழ்ந்து பேசுகிறார். இதெல்லாம் கேட்டு செழியன் தன் அம்மாவை நினைத்து பெருமைப்படுகிறார். பின் செழியன், தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் செழியன் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் உள்ள எல்லோரும் செழியன் வந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அதற்கு பின் வீட்டிற்கு பாக்கியா வருகிறார். பாக்கியவை பார்த்தவுடன் ஈஸ்வரி, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். பின் பாக்கியா, அமைச்சர் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். இருந்தாலும் அதை ஈஸ்வரி பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் காலையில் ஈஸ்வரி, நீ வேலைக்கு போக வேண்டாம். வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள் என்று சொல்கிறார். பாக்கியா, முடியாது என்று கிளம்பி விடுகிறார். பின் பாக்கியா ஹோட்டலை திறக்கிறார். அந்த ஓட்டலின் ஓனர், இனிமேல் நீங்கள் இங்கு ஓட்டல் நடத்த வேண்டாம். தயவு செய்து கிளம்புகள் என்று சொல்கிறார். இதை கேட்டு பாக்கியா ஷாக் ஆகிறார்.
https://youtu.be/WeF4Or_Bkvc?si=I1TMv7nHin3lOKaJ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் பாக்கியா நடத்தி வரும் புது ஓட்டலுடைய ஓனர்,
கவுன்சிலர் பிரச்சனையால் பயந்துகொண்டு ஓட்டலை திறக்க வேண்டாம். காலி செய்யுங்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு பாக்கியா ஷாக்காகிறார். மறுநாள் அந்த ஓட்டலின் ஓனர் வீட்டிற்கு பாக்கியா, செல்வி இருவரும் போகிறார்கள். அங்கு ஓட்டல் ஓனரின் மருமகன், 5 லட்சம் பணத்தை தரவில்லை என்றால் உங்கள் மகளை உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரச்சனை செய்கிறார். இதை பார்த்தவுடன் பாக்கியா, தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து பிரச்சனையை முடித்து வைக்கிறார். இதனால் மனம் மாறிய அந்த ஓட்டல் ஓனர், பாக்கியாவிற்கு மீண்டும் சாவி கொடுத்து ஹோட்டலை திறந்து விடுகிறார்.