சுதாகர் குடும்பம் மறைத்து வைத்த ரகசியத்தை சொன்ன இனியா, பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி

By subhashini · 2/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி, பாக்கியாவிடம் தன் மாமியாரை பற்றி நலம் விசாரித்தார். இதைக் கேட்டவுடன் பாக்யாவிற்கு ஷாக். அதற்கு பின் வீட்டில் சண்டை போடும் சத்தம் கேட்பதால் இனியா உடனே கீழே வந்து பார்த்தார். அங்கு நிதிஷ் போதை பொருளை பயன்படுத்தி இருந்ததால் தடுமாறி இருந்தார். இதனால் சுதாகர், நிதிஷையும் அவருடைய அம்மாவையும் பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நிதிஷ் அம்மா, உங்களுக்கு பிறக்கவில்லை என்பதால் தானே இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். பணத்துக்காக நீங்கள் தான் எங்கள் இருவரையும் தேடி வந்தீர்கள் என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு இனியாவிற்கு அதிர்ச்சியானது.

பின் இனியா வந்திருப்பதை பார்த்தவுடன் சுதாகர் சமாளித்தார். பின் இனியா, நிதிஷை பார்க்க போனார். அப்போது கோபத்தில் நிதிஷ், இனியாவை கீழே தள்ளி விடுவதால் மண்டையில் அடிபட்டது. அந்த சமயம் பார்த்து சுதாகர் வந்து விட்டார். அவர்கள் இனியாவை வெளியே அனுப்பிவிட்டு நிதிஷை சமாதானம் செய்தார்கள். கோபத்தில் நிதிஷின் அம்மா, பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் மேல் இருந்த ஆசையால்தான் நீங்கள் இந்த திருமணத்தை செய்து வைத்தீர்கள். அதனால் தான் என் மகனுக்கு இந்த நிலைமை என்றெல்லாம் பல உண்மைகள் வெளியே வந்தது .இதைக் கேட்டு இனியா அதிர்ச்சி மேல் அதிர்ச்சியானார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் இனியா, ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். பின் தன் அப்பாவிடம் போன் செய்து ஆபீசுக்கு வரவைத்தார். இன்னொரு பக்கம் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாக்கியா கிளம்பி இருந்தார். அப்போது இனியாவிற்கு ஃபோன் செய்து பாக்கியா பேசினார். அதற்குப்பின் இனியாவை சந்திக்க வந்த கோபி, என்ன பிரச்சனை? நீ நன்றாக இருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு இனியா, நீங்கள் நினைப்பது போல் சுதாகர் குடும்பம் நல்லவர்கள் கிடையாது. அவர்கள் நிறைய பொய் சொல்லி இருக்கிறார்கள். அம்மாவின் ரெஸ்டாரண்டை வாங்குவதற்காக தான் இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.

நேற்று எபிசோட்:

நிதிஷ் இன்னும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தான் இருக்கிறார் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபிக்கு இடி மேல் இடி விழுகிறது. இன்னொரு பக்கம் போட்டிக்கு பாக்கியா சென்ற இடத்தில் சில இளைஞர்கள் போதைப் பொருளை பயன்படுத்தியதால் போலீஸ் அவர்களை கைது செய்து இருந்தார்கள். அந்த கும்பலில் நிதிஷ் இருப்பதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி ஆனார். பின் சுதாகரிடம் போன் செய்து நடந்ததை பாக்கியா சொன்னார். சுதாகருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பாக்கியா, கோபி- இனியாவிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். அதற்குப்பின் சுதாகர் வீட்டிற்க்கே பாக்கியா சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, நிதிஷ் எந்த தவறும் செய்யவில்லை தானே, அவனை ஏன் போலீஸ் பிடித்தார்கள்? என்று கேட்கிறார். அதற்கு சுதாகர், அவன் மீது எந்த தவறும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இனியாவிடம் எதுவும் சொல்லாதீர்கள் என்று ஏதேதோ சொல்லி சமாளித்து பாக்கியாவை அனுப்பி வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் இனியா- கோபி இருவரும் ஆஃபீஸில் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இனியாவின் தோழி, மீண்டும் சுதாகர் மகன் நிதிஷ் போதை பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறான். இந்த முறை அவன் வெளியே வருவது ரொம்ப கஷ்டம் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் கோபிக்கு பயங்கர ஷாக் ஆகிறது. இனியாவிற்கு எதுவுமே சொல்ல முடியவில்லை.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இனியாவிடம் பாக்கியா எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். அப்போது டிவியில் நிதிஷ் கைதான விஷயம் ஒளிபரப்பாகிறது. இனியா, எனக்கு நிதிஷ் போதை பொருள் வழக்கில் கைதான விஷயம் தெரியும். அவர் திருமணத்திற்கு முன்பே அதை பயன்படுத்தி தான் இருக்கிறார். காலேஜ் படிக்கும்போதே அவர் கைதாகி சிறைக்கு எல்லாம் சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை நான் அப்பாவிடம் சொல்லி விட்டேன். நீங்களும் பாட்டியும் கஷ்டப்படுவீர்கள் என்று தான் சொல்லவில்லை என்கிறார். இதை கேட்டவுடன் ஈஸ்வரிக்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. பாக்கியாவுமே வேதனையில் கதறி அழுகிறார். பின் கோபி, நானே என் மகளின் வாழ்க்கை கெடுத்துவிட்டேன் என்று கோபப்படுகிறார் . பாக்கியா, இனிமேல் இதை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full