சுதாகரை எதிர்த்து பேசும் இனியா, அடி மேல் அடி வாங்கும் பாக்கியா - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, நீ செழியனை வெளியே எடுக்க போராடினார். ஆனால், பாக்கியா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் சமையல் ஆர்டர் எடுத்து இருந்தாள். இவளை எல்லாம் என்ன சொல்வது என்று திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா, சமையல் எல்லாம் செய்து முடித்து விட்டார். சாப்பாடு பரிமாறுவதற்கு ரெடியாக இருந்தார். பின் கவுன்சிலர், பாக்கியா அமைச்சரை சந்திக்க விடாமல் தடுத்தார். பின் சாப்பாட்டை சாப்பிட்ட அமைச்சர் ரொம்பவே புகழ்ந்து பாராட்டி இருந்தார்.
கவுன்சிலர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவை உள்ளே அழைத்து வந்தார்கள். அப்போது பாக்கியா, அமைச்சரிடம் தன்னை பற்றிய விவரத்தை சொல்லிவிட்டு கவுன்சிலர் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விஷயத்தையெல்லாம் சொன்னார். இதைக் கேட்டவுடன் அமைச்சருக்கு பயங்கர ஷாக். கவுன்சிலர், பாக்கியாவின் மீது பழி போட்டார். ஆனால், பாக்கியா ஆதாரத்துடன் கவுன்சிலரின் முகத்திரையை கிழித்தார். அமைச்சர் கவுன்சிலரை திட்டி விட்டு செழியினை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இதனால் பாக்கியாவிற்கு சந்தோசம்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியா- செல்வி இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த போது கவுன்சிலர் வழிமறித்து மிரட்டி இருந்தார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பாக்கியா, செழியனை பார்த்து ரொம்ப எமோஷனலாக கட்டி பிடித்து அழுதார். அதற்குப்பின் அங்கு வந்த கவுன்சிலரின் எதிரி குரூப், ஒரு பிள்ளைக்காக ஒரு தாய் எப்படியெல்லாம் போராடுவார் என்பதை உன் அம்மா நிரூபித்து விட்டார் என்றெல்லாம் பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார். இதெல்லாம் கேட்டு செழியன் தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் செழியன் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். பாக்கியவை பார்த்தவுடன் ஈஸ்வரி, வழக்கம் போல ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, அமைச்சர் வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார். மறுநாள் காலையில் ஈஸ்வரி, நீ வேலைக்கு போக வேண்டாம். வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள் என்று சொல்ல, பாக்கியா முடியாது என்று கிளம்பி விட்டார். பின் பாக்கியா ஹோட்டலை திறக்க, அந்த ஓட்டலின் ஓனர், இனிமேல் நீங்கள் ஓட்டல் நடத்த வேண்டாம். தயவு செய்து கிளம்புகள் என்று சொன்னார். அதை கேட்டு பாக்கியா ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா- செல்வி இருவருமே எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், அந்த ஓனர் கேட்கவே இல்லை. கடையை மூடி விட்டார். வேதனையிலேயே வீட்டுக்கு வந்த பாக்கியா, ஈஸ்வரியிடம் மனதை விட்டு எமோஷனலாக பேசுகிறார். ஈஸ்வரியுமே ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் சுதாகர் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுதாகர்,
செழியனை பற்றி பேசுகிறார். உடனே இனியா, என் அண்ணன் நேற்றே வந்து விட்டான். என் அம்மா தான் அமைச்சரின் மூலம் வெளிக்கொண்டு வந்தார் என்று சொன்னவுடன் சுதாகர் சாக் ஆகிறார். பின் சுதாகர், அந்த ஓட்டலை நடத்த வேண்டாம். என் ஸ்டேட்டஸ் என்னாவது? என்று சொன்னவுடன் இனியா, கோவப்பட்டு என் அம்மா ஓட்டலை நடத்துவார்.
சீரியல் ட்ராக்:
உங்களால்தான் எங்க அம்மாவுடைய ரெஸ்டாரன்ட் போய்விட்டது என்று சுதாகரை எதிர்த்து பேசுகிறார். இதனால் கோபப்பட்ட சுதாகரின் மகன் இனியாவை தனியாக அழைத்து சென்று கண்டிக்கிறார். இனியாவால் எதுவுமே பேச முடியவில்லை. மறுநாள் காலையில் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவின் வீட்டிற்கு வந்து சமையல் செய்ததற்காக பணத்தை கொடுக்கிறார்கள். பாக்கியா வாங்க மறுக்கிறார். அதற்கு அவர், நீங்கள் செய்த வேலைக்கு தான் பணம் தருகிறோம். இனிமேல் எந்த விழா என்றாலும் நீங்கள் தான் சமைக்கணும் அமைச்சர் சொல்லிவிட்டார் என்று சொன்னவுடன் பாக்கியா சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலில் ஓனர் வீட்டுக்கு சென்று சென்றிருக்கிறார். அங்கு ஓனரின் மருமகன் 5 லட்சம் பணம் கேட்டு ப்ரச்சனை செய்ததால் பாக்கியா பணம் தருகிறார். இதனால் ஓனர் மனம் மாறி பாக்கியாவை ஹோட்டல் திறக்க சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.