இனியா செய்த வேலையால் ஆடிப்போன ஈஸ்வரி, கோபி எடுத்த முடிவு - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, நிச்சயதார்த்தம் கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே ஈஸ்வரிக்கு எதிராக தான் பேசி இருந்தார்கள். பாக்கியா, என் மகள் விஷயத்தில் முடிவெடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவளுக்கு திருமணம் நடக்காது என்று ஆவேசமாக கத்திவிட்டு இனியாவை அழைத்து கொண்டு சென்றார். ஆனால், ஈஸ்வரி-கோபி இருவரும் மட்டும் இனியாவுக்கு திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகளை செய்தார்கள். அதற்குப்பின் ஈஸ்வரி-கோபி இருவரும் இனியாவை தனியாக அழைத்து என்னென்னவோ கதைகளை சொன்னார்கள். ஆனால், இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அதற்குப்பின் தன்னுடைய பாட்டி, அப்பா சொன்னதைப் பற்றி பாக்கியாவிடம் சொல்லி அழுதார் இனியா. உடனே பாக்கியா, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தைரியமாக இரு. உனக்கு இந்த கல்யாணம் நடக்காது என்று அவருக்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாக்கியா, செல்வியின் வீட்டிற்கு சென்றார். ஆகாஷ் ஹாஸ்பிடலில் இருந்து வந்து விட்டார். பின் பாக்கியா, செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பண உதவி கேட்டார். ஆனால், செல்வி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, கோபி இருவருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருந்தார்கள். பாக்கியா, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. எனக்கு இதில் விருப்பம் கிடையாது. இதை நான் நடக்க விட மாட்டேன் என்று ஆவேசமாக பேசி இருந்தார். கோபமாக ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு போனார். உடனே கோபி, இனியா என்னுடைய மகள். இந்த நிச்சயதார்த்தம் நடக்கும். அதை தடுக்க முடியாது என்று சொன்னார். அதற்குப்பின் ஈஸ்வரி, இனியாவை தயாராகி வர சொன்னார்.
நேற்று எபிசோட்:
இனியா யாருக்கும் தெரியாமல் போலீசுக்கு போன் செய்து தகவலை சொல்லி விட்டார். அதற்குப்பின் இனியா, எனக்காக நீங்கள் இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டது போதும். நீங்கள் எதுவும் பேசத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய அம்மா, அண்ணன்கள்,அண்ணிகளிடம் சொல்லி இருந்தார். நிச்சயதார்த்தமும் தொடங்கிவிட்டது. தட்டு மாற்றும்போது போலீஸ் வந்து, இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது என்று சொன்னவுடன் எல்லோரும் ஷாக் ஆனார்கள். ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ், இனியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமே கிடையாது. கட்டாயப்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, இது பொய்யான புகார். அவளுடைய அம்மாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் தான் அவர் இந்த மாதிரி செய்துவிட்டாள் என்றெல்லாம் சொல்கிறார். உடனே போலீஸ் விசாரனையில் இனியா, நான் தான் போன் செய்தேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நான் காதலித்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் தான் இந்த கட்டாய கல்யாணம்.
சீரியல் ட்ராக்:
என்னுடைய பாட்டியும், அப்பாவும் தான் எனக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொன்னவுடன் போலீஸ் ஈஸ்வரி, கோபியை மிரட்டி விட்டு செல்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டாருமே சென்று விடுகிறார்கள். அதற்குப்பின் இனியாவையும், பாக்கியாவையும் ஈஸ்வரி திட்டுகிறார். உடனே இனியா, இனி மேலும் நீங்கள் எனக்கு திருமண ஏற்பாடு செய்தீர்கள் என்றால் நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவேன் என்று சொல்கிறார். எதுவும் பேச முடியாமல் ஈஸ்வரி-கோபி அமைதியாகி விடுகிறார்கள். அதற்கு பின் கோபி எல்லோரையும் வரவைத்து, இனி நான் இங்கு எதற்கு இருக்கணும். நான் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.