ராதிகாவிடம் சண்டைக்குப் போன இனியா, பாக்கியா என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் கோபி மீது கம்பளைண்ட் கொடுத்ததால் பயங்கர கலவரமே வெடித்தது. போலீஸ் கோபியை கைது செய்து இருந்தார்கள். ஆனால், ராதிகா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். இதனால் வீட்டில் எல்லோரும் பாக்கியாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். கோபியின் சுயரூபத்தை தெரிந்தும் செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியும் பாக்கியாவை தான் திட்டி இருந்தார். ஆனால், பாக்யா தன் முடிவில் இருந்து மாறவில்லை.
தான் செய்தது சரி என்று இருக்கிறார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் செந்தில் அழைத்து வந்த வக்கீல் ஜாமினில் கோபியை வெளியே எடுக்கிறார். வீட்டில் கோபி, ஜெயிலுக்கு போனதை நினைத்து செழியன்- ஈஸ்வரி- இனியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். கேசை வாபஸ் வாங்க சொல்லி மூவருமே பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், பாக்கியா கேசை வாபஸ் வாங்க முடியாது என்று உறுதியாக இருந்தார். இதனால் எல்லோருமே பாக்கியாவை திட்டி இருந்தார்கள். ஆனால், அதை பற்றி பாக்கியா கவலைப்படவே இல்லை.
பாக்கியலட்சுமி:
இதை அடுத்து பிரஸ்ஸில் நடந்ததை பாக்கியா பேட்டி கொடுக்க, ஈஸ்வரி பயங்கரமாக கோபப்பட்டார்.
உடனே டிவியில் கோபி- பாக்யா விவகாரம் தான் வைரலாகி கொண்டிருந்தது. பின் ஜெயிலில் இருந்து வந்த கோபியிடம் ராதிகா பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார். இதனால் கோபிக்கு இன்னும் கோபம் அதிகமாகி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போய் சண்டை போட்டார். நேற்று எபிசோடில் செழியன்- இனியா இருவருமே அவருடைய அப்பாவை சமாதானம் செய்தும் அவர் கேட்கவே இல்லை.
நேற்று எபிசோட்:
பின் பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். கோபி, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட, பாக்கியாவும் உங்களை ஜெயிலுக்கு அனுப்பியே தீருவேன் என்றும் சவால் விட்டார். இதையெல்லாம் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே வேடிக்கை பார்த்து மொபைலிலும் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். இதனால் ஈஸ்வரி, மீண்டும் மீண்டும் கேஸை வாபஸ் வாங்க சொல்லியும் பாக்யா முடியாது என்றார். பின் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். ஆனால், பாக்கியா அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோசியல் மீடியா முழுவதும் பாக்கியா- கோபி சண்டை வீடியோ வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த ராதிகா ஷாக் ஆகி கோபியிடம் சண்டை போட்டார். அவரால் எதுவுமே பேச முடிய முடியவில்லை. இன்னொரு பக்கம் கல்லூரியில் அந்த வீடியோவால் இனியாவை எல்லோரும் விசாரிக்கிறார்கள். பின் இனியா இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேசி புலம்ப, அவர் ஆறுதல் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், இனியா கேட்கவே இல்லை. உடனே ஜெனி, கோபி செய்த தவறை சுட்டிக்காட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் இனியா கோபி வீட்டிற்கு போய் ராதிகாவிடம் சண்டை போட்டார். அப்போது இனியா, நீங்கள் என்னுடைய அப்பா வாழ்க்கையில் வந்த பிறகுதான் இந்த பிரச்சனை என்று சொல்ல, ராதிகாவால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் வந்த ஜெனி, இனியாவை அழைத்து போக வந்தார். ஆனால், ராதிகா அம்மா அவரையும் மோசமாக திட்ட, பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து ஜெனி பேசி இருந்தார். இதனால் ராதிகாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இத்துடன் சீரியல் முடிகிறது.