நிதிஷின் சுயரூபத்தை அறிந்து அதிர்ச்சியான இனியா, பாக்கியாவிற்கு தெரிய வருமா? பாக்கியலட்சுமி

By subhashini · 24/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கவுன்சிலர், பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு நன்றியும் சொன்னார். பாக்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. திருமணம் செய்யும் விஷயமாக கோபி திட்டியதை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். வீட்டிற்கு வந்த கோபியிடமும் ஈஸ்வரி பேசாமல் கோபித்து கொண்டார். இதனால் கோபி எமோஷனாக பேச ஈஸ்வரி மனம் மாறி விட்டார். அந்த சமயம் பார்த்து இனியா வீட்டிற்கு வந்தார். இனியாவின் பிறந்தநாள் என்பதால் கோபி அவருக்கு வைர மோதிரம் கிப்ட் வாங்கி கொடுத்தார். அதேபோல் பாக்கியாவும் இனியாவை அழைத்துக் கொண்டு அவருக்கு பிடித்ததை வாங்கி தந்தார்.

வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். ஆனால், இனியா தன்னுடைய புகுந்த வீட்டில் நடப்பதை பற்றி சொல்லாமல் வேதனையை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டிருந்தார். இருந்தாலுமே பாக்கியா-கோபி இருவருமே இனியா நடவடிக்கையின் மீது சந்தேகப்பட்டார்கள். இன்னொரு பக்கம் ஹோட்டலில் கவுன்சிலர் வழக்கம் போல் சாப்பிட வந்தார். ஆனால், எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் சாப்பிட்டுவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றார். இது எல்லாம் பார்த்து பாக்கியாவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் கோபி, இனியாவை விசாரித்தார். ஆனால், இனியா ப்ரச்சனை எதுவும் இல்லை. நன்றாகத் தான் இருக்கிறேன் என்று சமாளித்தார்.

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோடில் சுதாகர் தன்னுடைய மனைவியிடம் நிதிஷின் நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நிதிஷ் அம்மா, எல்லாத்துக்கும் காரணம் இனியா தான் என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபி, இனியா இருவருமே வீட்டுக்கு வந்தார்கள். அப்போது நிதிஷ் அம்மா, நீ வீட்டுக்கு லேட்டா வந்தால் மெசேஜ் போடுவது தானே என்று சொன்னார். அதற்கு இனியா, நான் நிதிஷ்க்கு மெசேஜ் போட்டு விட்டேன். அவர்தான் எந்த பதிலும் சொல்லவில்லை என்றார். உடனே கோபி, நாளைக்கு இனியா பிறந்தநாள். அதனால் ஷாப்பிங் போயிருந்தோம் என்று சொன்னவுடன் சுதாகர், எங்களுக்கு தெரியும். இனியா பிறந்தநாளுக்காக பார்ட்டி ரெடி பண்ணி இருக்கிறோம். கண்டிப்பாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

மறுநாள் காலையில் இனியாவிற்காக ஈஸ்வரி, பாக்கியா இருவருமே கோவிலில் அர்ச்சனை செய்தார்கள். இன்னொரு பக்கம் சுதாகர், நிதிஷ், நிதிஷுடைய அம்மா மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிதிஷ் அம்மா, இனியாவை பற்றி திட்டிக் கொண்டிருந்தார். உடனே சுதாகர், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இனியாவிற்கு வாழ்த்து சொல்ல தான் வேணும். இந்த பார்ட்டியில் நீங்கள் கலந்து கொள்ள தான் வேண்டும் என்று கோபமாக சொன்னார். பின் இனியா வந்தவுடன் எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். நிதிஷிக்கு இனியாவின் மீது கோபம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியா, கவுன்சிலரை சந்தித்து அவருடைய மனைவியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா ஆபிஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடன் வேலை செய்பவர்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா, அதைப்பற்றி விசாரிக்கிறார். அப்போது ஒருவர், சுதாகர் என்ற பெரிய பிசினஸ்மேன் உடைய பையன் தான் இந்த போதை வழக்கில் சிக்கி இருந்தார். லட்சக்கணக்கில் செலவு செய்து அந்த பையனை பற்றி வெளியில் பேசவிடாமல் பண்ணி விட்டார்கள். ஆறு மாதம் சிறையில் இருந்தான் என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கேட்டு இனியா ரொம்பவே ஷாக் ஆகிறார். பின் சுதாகரை பற்றி சோசியல் மீடியாவில் பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதில் நிதீஷ் போதை வழக்கில் கைதாகி இருப்பதை பார்த்து இன்னும் அதிர்ச்சி ஆகிறார் இனியா. பின் வீட்டிற்கு வந்த இனியா, சுதாகரிடம் பேச போகிறார். ஆனால், பார்ட்டிக்கு உறவினர்கள் எல்லோரும் வந்து இருப்பதால் வேண்டாம் என்று அமைதியாக இனியா வந்து விடுகிறார். பின் இதைப்பற்றி நிதிஷிடம் இனியா பேசுகிறார். வழக்கம் போல நிதிஷ், இனியாவை தவறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். பின் பர்த்டே பார்ட்டிக்கு இனியாவின் குடும்பத்திலிருந்து எல்லோருமே வருகிறார்கள். எல்லோருமே சந்தோசமாக தன்னுடைய மகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இனியா உண்மையை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full