இனியாவின் காதலை கண்டுபிடிப்பாரா செல்வி? எழில் கொடுக்கும் சர்ப்ரைஸ் என்ன - விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

By subhashini · 19/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோர்ட்டில் கோபி- ராதிகா இருவருக்குமே விவாகரத்தை கொடுத்து விட்டார்கள். அதற்கு பின் கோபியிடம் ராதிகா, உங்கள் வீட்டிற்கு அழைத்து போக முடியமா? என்று கேட்க, கோபி-ராதிகா இருவரும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, இதோடு நம் உறவு முடியும் என்று நான் நினைக்கவே இல்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு கஷ்டமாக இருந்தது.

இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபி-ராதிகா இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் இனியா- ஈஸ்வரி இருவருமே பயப்பட்டார்கள்.
அப்போது ராதிகா, எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. உங்களை எல்லாம் பார்த்துவிட்டு போக தான் வந்தேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ராதிகா சொல்வதைக் கேட்டு ஈஸ்வரி கண்கலங்கி அழுதார்.

பாக்கியலட்சுமி:

மேலும், ராதிகா, எல்லோரிடமும் எமோஷனலாக மன்னிப்பு கேட்டு சந்தோஷமாக பேசி இருந்தார். பின் எல்லோரிடமும் சொல்லிவிட்டு மொத்தமாகவே கோபியின் வாழ்க்கை விட்டு ராதிகா சென்று விட்டார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் எமோஷனலாக தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு கோபி சென்றார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, தன்னுடைய புது ரெஸ்டாரண்டை திறப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

எல்லோருமே ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்காக வந்து விட்டார்கள். ஈஸ்வரி கையால் ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. இது எல்லாம் பார்த்து கோபி, ரொம்ப பெருமையாக பாக்கியாவை பற்றி பேசி இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் பாக்கியாவுக்கு வாழ்த்தும் சொல்லி பொக்கை கொடுத்தார். அதற்குப்பின் இனியா காதலிக்கும் நபர் ஆகாஷ் அங்கு வந்தார். அவர் வேறு யாருமில்லை செல்வியின் மகன் தான். வீட்டில் உள்ள எல்லோரிடமும் செல்வியின் மகன் ரொம்ப அன்பாக பேசி இருந்தார். ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.

இன்றைய எபிசோட்:

அதற்குப்பின் ஈஸ்வரி, செழியன்-அமிர்தாவை மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்தார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்தார்கள். உடனே கோபி, எதுவாக இருந்தாலும் வீட்டில் பேசிக் கொள்ளலாம் என்று அவருடைய அம்மாவை சமாதானம் செய்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி, செழியன் அவர் மாமியார் வீட்டில் இருப்பது சரி இல்லை. இங்கு வரட்டும் என்று கடுமையாக பேசுகிறார். உடனே பாக்கியா, அவனுக்கு என்ன தோணுதோ அதை செய்யட்டும். அவர்கள் விருப்பப்படி நடக்கட்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு கோபி, பாக்கியா சொல்வதுதான் சரி. அவர்கள் விருப்பம் போலவே இருக்கட்டும். நாம் எதுவும் தலையிட வேண்டாம் என்று சொல்கிறார். அதற்குப்பின் இனியா செல்வியின் மகன் ஆகாஷை சந்திக்க அவருடைய வீட்டிற்கு செல்கிறார். ஆனால், அவர் வீட்டில் யாராவது வந்து விடுவார்கள் என்று பயப்படுகிறார். அந்த சமயம் பார்த்து செல்வி வீட்டிற்கு வருகிறார். உடனே இனியா ஒளிந்து கொள்கிறார். செல்வியும் போனை எடுத்து கொண்டு கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் இனியாவுமே கிளம்பி வீட்டிற்கு வந்து விடுகிறார். கடைசியில் செழியன்-எழில் இருவருமே வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது எழில், எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full