இனியா செய்த வேலையால் அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா குடும்பம், நிதீஷ் நிலை என்ன? பாக்கியலட்சுமி

By subhashini · 28/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா பேட்டி கொடுத்ததை பாக்கியா வீட்டில் எல்லோருமே பார்த்து விட்டார்கள். அதற்கு இனியா, இனி சுதாகர் குடும்பத்தால் நம் வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நான் ஐஜியிடம் சுதாகர் குடும்பத்தின் மீது புகார் கொடுத்து விட்டேன் என்று சொன்னார். பின் இனியா அதை பற்றி பெரிதாக கவலைப்படாமல் கேஷுவலாக தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். பின் பாக்கியா, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் சுதாகருக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி, இனியா புகார் கொடுத்ததை சொன்னார்கள். இதனால் சுதாகர் குடும்பமே தலைமறைவாகிறது.

அதற்குப்பின் சுதாகர் குடும்பத்தை கைது செய்ய போலீஸ் வந்தார்கள். ஆனால், சுதாகர் குடும்பம் தலைமறைவானதால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த விஷயம் இனியாவிற்கு தெரிந்தது.
அதற்குப்பின் கோபி, மன நிம்மதிக்காக நாம் ஒரு ட்ரிப் போகலாம் என்று வீட்டில் பேசி இருந்தார். எல்லோருமே சம்மதித்தார்கள். அதற்குப்பின் கோபி வரும் வழியில் சுதாகர் வழிமறித்து, ஒழுங்கு மரியாதையாக இனியாவை கம்பிளைன்ட்டை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டி இருந்தார். அதற்கு கோபி முடியாது என்று சொன்னார். இதனால் கொந்தளித்த சுதார், மொத்த குடும்பத்தையும் அழித்து சமாதி கட்டி விடுவேன் என்று கோபியை கீழே தள்ளிவிட்டு சென்றார்.

பாக்கியலட்சுமி:

கோபி, சுதாகர் செய்த வேலையை பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். இதனால் கோபப்பட்ட இனியா, சுதாகருக்கு ஃபோன் செய்தார். அப்போது சுதாகர், நீ மீண்டும் நிதிஷ் உடன் வாழ வேண்டும். எங்கள் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்கு என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால், இனியா முடியாது என்று சொல்லி விட்டார். மறுநாள் காலையில் இனியா மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போனார். அந்த சமயம் பார்த்து போன் செய்த சுதாகர், தேவையில்லாமல் போலீஸ் கோர்ட் என்று இரண்டு வீடுமே அலைய வேண்டாம். உங்கள் வீட்டில் வர சொல்லு, பேசி முடிவெடுக்கலாம். உன் அம்மாவுடைய ரெண்டு ரெஸ்டாரன்டையும் தந்து விடுகிறேன்.

கடந்த வாரம் எபிசோட்:

கல்யாணத்திற்கு செலவு செய்த பணத்தையும் வட்டி முதலுமாக தருகிறேன். உனக்கு விவாகரத்தும் வாங்கி தருகிறேன். இது எல்லாம் நான் என் பையனுடைய வாழ்க்கைக்காக தான் செய்கிறேன். உன்னுடைய அம்மா ரெஸ்டாரண்டில் தான் நான் இருக்கிறேன். நீ அங்கே வந்தால் நான் எழுதி கொடுக்கிறேன் என்று சொன்னார். இதை நம்பி இனியாவுமே போனார். ஆனால், அங்கு சுதாகர் இல்லை. நிதீஷ் நிறைய போதை மருந்து சாப்பிட்டு இருந்தார். அப்போது இனியாவை பார்த்து நிதீஷ் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபத்தில் இனியா, நிதீஷை கீழே தள்ள தலையில் அடிபட்டது. இனியா எவ்வளவு எழுப்பியும் நிதீஷ் எழவில்லை. இதனால் இனியா ரொம்பவே பயந்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிதிஷ் மூச்சுப் பேச்சு இல்லாமல் இறந்த நிலையில் இருக்கிறார். இதை பார்த்து இனியா ரொம்பவே பதறிப் போகிறார். உடனே அந்த இடத்தை விட்டு வெளியே வந்த இனியா பாக்கியாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்கிறார். பின் பாக்கியா, இனியா இருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார். இதை பார்த்தவுடன் பாக்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இனியாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் வீட்டில் நடந்ததை எல்லாவற்றையும் இனியா சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே அதிர்ச்சி அடைகிறது.

சீரியல் ட்ராக்:

கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அமைதியாக இருக்கிறார். இனியா, நான் உண்மையை சொல்லி போலீசில் சரணடைகிறேன் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே அதை ஒத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் நிதிஷ் இறந்த விஷயம் அறிந்து போலீஸ், சுதாகர் எல்லோருமே அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள். போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்துகிறது. அப்போது சுதாகர், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் இனியாவும் அவருடைய குடும்பம் தான். அவர்கள் தான் இதை செய்திருக்கணும் என்று கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இந்த விஷயம் டிவியிலும் வெளியாகிறது. இதை பார்த்தவுடன் இனியா இன்னும் அதிகமாக பயப்படுகிறார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு நானே போகிறேன் என்று இனியா சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full