பாக்கியா ரெஸ்டாரன்ட்டில் மறைந்த ரகசியத்தை அறிந்த இனியா, சுதாகர் சூழ்ச்சி வெளிவருமா? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் சுதாகர், இனியாவின் அம்மா, என்னுடைய சம்மந்தி கையேந்திபவன் நடத்துகிறார் என்று சொன்னால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று கேட்டார். உடனே பாக்கியா, இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று சொல்லுங்கள் என அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு வந்தார். அதற்குப்பின் சுதாகர் வீட்டில் நடந்ததைச் செழியன் ஈஸ்வரிடம் சொன்னார். பின் அவர் பாக்யாவிடம் கோபப்பட்டு சண்டை போட்டார். ஆனால், பாக்கியா அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அங்கிருந்து சென்றார்.
இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அம்மாவின் புதிய ரெஸ்டாரண்டை திறப்பது பற்றி தன்னுடைய குடும்பத்திடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் சுதாகருக்கு கோபம் அதிகமானது. ஆனால், அவரால் வெளியே ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் பாக்கியா மெஸ் திறக்கும் இடத்திற்கு அந்த ஏரியாவின் கவுன்சிலர் வந்தார். அப்போது அந்த ஓட்டலின் உரிமையாளர், இவர்கள் பணமே தரமாட்டார்கள், ஏமாற்றுவார்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று அறிவுரை சொன்னார். அடுத்த நாள் ரெஸ்டாரன்ட் புதிய மெஸ் திறப்பதற்கு பாக்கியா கிளம்ப, ஈஸ்வரி வழக்கம் போல பாக்கியாவை திட்டி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் பாக்கியா தன்னுடைய புது ஹோட்டலை திற்பதற்கான வேலைகள் செய்து கொண்டிருந்தார். அங்கு பாக்கியாவின் குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக வந்தார்கள். ஆனால், ஈஸ்வரி மட்டும் வரவில்லை. இதனால் பாக்கியா கொஞ்சம் வருத்தப்பட்டார். அதற்குப்பின் பூஜை துவங்கும் போது ஈஸ்வரி வந்து விட்டார். இதனால் பாக்கியாவுக்கு ஒரே சந்தோஷம். இருந்தாலும் ஈஸ்வரி ரொம்ப நக்கல், கிண்டலாக ஓட்டலையும் பாக்யாவையும் பேசி இருந்தார். அதற்குப்பின் பூஜையெல்லாம் முடிந்து எல்லோருமே ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது ஈஸ்வரி, இந்த இடத்தில் என்னால் இருக்க முடியவில்லை என்று கோபியை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். பின் பாக்கியா புது ஹோட்டலை பற்றி கோபி இடம் விமர்சனம் செய்து கொண்டிருந்தார். ஆனால், கோபி அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய அம்மாவின் புது ஹோட்டல் திறப்பு விழாவிற்கு கிளம்ப தயாராகி இருந்தார். அதற்கு சுதாகர், விஐபி வீட்டிற்கு போக வேண்டும். நாளைக்கு அவர்கள் யுஎஸ்ஏ செல்கிறார்கள் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை போகவிடாமல் தடுத்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, தன்னுடைய அம்மாவின் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு செல்லாததை பற்றி வருத்தத்துடன் பேசுகிறார். உடனே நிதிஸ், அப்பா சொல்வதை தான் கேட்க வேண்டும். அதுதான் எங்கள் வீட்டில் வேதவாக்கு என்பது போல பேசுவதால் இனியா அமைதியாகி விடுகிறார். பின் தன் அண்ணன் எழில் உடன் தன்னுடைய அம்மாவை பார்க்க வருகிறார் இனியா. அங்கு ஹோட்டல் சின்னதாக இருப்பதை பார்த்து இனியாபயங்கரமாக ஷாக் ஆகிறார். ஏன்? என்னானது? என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
உண்மையை சொல்லாமல் பாக்கியா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் இனியா, தன் அண்ணனிடம் சத்தியம் வாங்கி உண்மையை கேட்கிறார். வேறு வழியில்லாமல் எழில், இரண்டு ரெஸ்டாரண்டையும் இழந்த விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டவுடன் இனியா ஷாக் ஆகி தன்னுடைய அம்மாவை பார்க்க மீண்டும் வருகிறார். அப்போது இனியா, எனக்காகத்தான் ரெஸ்டாரன்ட்டை இழந்தீர்களா? அவர்கள் உங்களை மிரட்டி வாங்கினார்களா? என்றெல்லாம் கேட்டார். ஆனால், பாக்கியா உண்மையை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் வீட்டிற்கு சென்ற இனியா, சுதாகரிடம் ரெஸ்டாரண்டை பற்றி விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.