சுதாகரின் சுயரூபத்தை அறிந்த இனியா, கோபி என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, சுதாகரை எதிர்த்து பேசினார். இதனால் கோபப்பட்ட சுதாகரின் மகன் இனியாவை கண்டித்தார். மறுநாள் காலையில் கவுன்சிலரின் எதிரி குரூப் பாக்கியாவின் வீட்டிற்கு வந்து சமையல் செய்ததற்காக பணத்தை கொடுக்க, பாக்கியா வாங்க மறுத்தார். அதற்கு அவர், நீங்கள் செய்த வேலைக்கு தான் பணம். இனிமேல் எந்த விழா என்றாலும் நீங்கள் தான் சமைக்கணும் அமைச்சர் சொல்லிவிட்டார் என்று சொன்னவுடன் பாக்கியா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலில் ஓனர் வீட்டுக்கு சென்று சென்றிருந்தார். அங்கு ஓனரின் மருமகன் 5 லட்சம் பணம் கேட்டு ப்ரச்சனை செய்ததால் பாக்கியா பணம் தந்தார். இதனால் ஓனர் மனம் மாறி பாக்கியாவை ஹோட்டல் திறக்க சொன்னார்.
நேற்று எபிசோட்டில் கோபி, பாக்கியா ஹோட்டலுக்கு வந்தார். பாக்கியா, என்ன விஷயம்? என்று கேட்டார். கோபி, நான் சும்மா தான் இந்த பக்கம் வந்தேன். நான் கவுன்சிலர் விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காமல் உன்னுடைய வேலையை பார் என்று சொன்னார். அதற்குப்பின் கவுன்சிலர் பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்தார். அவர் வழக்கம் போல பாக்கியாவிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த கோபி, அவரிடம் கோபப்படாமல் நாசுக்காக கிண்டல் அடித்தும், அவருடைய கேள்விகளுக்கு பதிலடியும் கொடுத்தார். பின் கவுன்சிலர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் கோபி, பாக்கியா கடை மூடும் வரை அங்கே இருந்து அவருக்கு பாதுகாப்பாக வீடு வரை வந்தார். இன்னொரு பக்கம் சுதாகரிடம் இனியா, ரெஸ்டாரன்ட் பெயர் மாற்றி விட்டீர்களா? என்று கேட்டார். சுதாகர் ஆமாம் என்று சொன்னார். பின் இனியா, நான் ரெஸ்டாரண்டை பார்த்துக்கொள்கிறேன் என்றவுடன் சுதாகருக்கு கோபம் வந்தது. வழக்கம் போல நித்திஷ் இனியாவை திட்டினார். இனியா அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நான் கொஞ்சம் நேரமாவது ரெஸ்டாரண்டுக்கு போகிறேன் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கவுன்சிலரை கட்சியில் இருந்து தூக்கி விடுகிறார்கள். இதை அறிந்த செல்வி, பாக்கியாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கோபத்தில் வந்த கவுன்சிலர் உன்னால்தான் என்னை கட்சியில் இருந்து தூக்கி விட்டார்கள். உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். நீ எப்படி நிம்மதியாக இருக்கிறாய் என பார்க்கிறேன் என்று சவால் விடுகிறார். ஆனால், பாக்கியா அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியாவின் ரெண்டு ரெஸ்டாரன்ட்டையும் சுதாகர் தான் வாங்கி இருக்கிறார் என்ற உண்மை இனியாவிற்கு தெரிந்து விடுகிறது.
உண்மை அறிந்த இனியா:
பின் இதைப்பற்றி இனியா, சுதாகரிடம் கேள்வி கேட்கிறார். உடனே சுதாகர், ஆமாம் நான்தான் வாங்கினேன். உன்னுடைய அம்மாவின் டீக்கடையையும் மூடச் சொல்லு என்று கோபமாக செல்கிறார். நிதிஷ், இனியாவை தான் திட்டுகிறார். உண்மை அறிந்த உடன் வேதனையில் இனியா, பாக்கியாவை பார்க்க வருகிறார். அப்போது இனியா, ரெஸ்டாரண்டை சுதாகர் வாங்கின விஷயத்தை பற்றி சொல்கிறார். அதற்கு பாக்கியா, எனக்கு ஏற்கனவே தெரியும். நீ அதைப் பற்றி எல்லாம் யோசிக்காதே. பெரியவர்கள் விஷயத்தில் தலையிடாதே.
சீரியல் ட்ராக்:
உன்னுடைய வாழ்க்கையை பார் என்று அறிவுரை சொல்கிறார். இருந்தாலுமே இனியா குற்ற உணர்ச்சியில் ரொம்ப வருத்தப்படுகிறார். பின் இனியா முகம் வாடி இருப்பதால் கோபி விசாரிக்கிறார். அப்போது வீட்டில் நடந்த உண்மை எல்லாம் இனியா சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கோபிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. பின் அவர், நான் உன் மாமனாரிடம் பேசுகிறேன் என்று இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். பின் சுதாகரை சந்தித்து கோபி பேசுகிறார். அப்போது கோபி, இனியாவிடம் பாக்கியா ஓட்டலை மூட சொன்னீர்களாமே? என்று கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.