நிதீஷ் குடும்பத்தை வெளுத்து வாங்கிய இனியா, பாக்கியாவை தேடி வந்த பிரச்சனை - பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா- ஆகாஷ் இருவரும் பேசி இருப்பதை பார்த்த நிதிஷ் கோபப்பட்டு இனியாவிடம் சண்டை போட்டார். அப்போது நிதீஷ், பழைய காதலனுடன் சேர தான்என்னை வேண்டாம் என்று சொன்னாயா? என்று ரொம்ப மோசமாக இனியாவை பற்றி பேசினார். இதனால் ஆகாஷ் பேச வர, நிதிஷ் அடிக்கப் போனார். கடைசியில் இனியாவின் கையை பிடித்து வம்பிழுத்து கொண்டு இருந்தார் நிதீஷ். அந்த சமயம் வந்த பாக்கியா, என் மகளின் கையை விடு இல்லை என்றால் நடப்பதே வேறு என்று கொந்தளித்தார். வேறு வழியில்லாமல் நிதீஷ், இனியாவின் கையை விட்டார். மீண்டும் நிதீஷ், இனியாவை பற்றி மோசமாக பேச, கோபத்தில் பாக்கியா திட்டினார்.
அப்போது அங்கு வந்த கவுன்சிலர், நிதீஷை மிரட்டி அனுப்பி வைத்தார். பின் ஹோட்டலில் நடந்த விஷயத்தை பாக்கியா வீட்டில் சொன்னவுடன் எழில்- செழியன் இருவருமே கோபப்பட்டு நிதீஷ்வீட்டிற்கு போனார்கள். அங்கு நிதீஷ் மீண்டும் இனியாவை பற்றி ரொம்ப மோசமாக பேச, கொந்தளித்த செழியன்- எழில் இருவருமே நிதீஷை அடித்தார்கள். இதை பார்த்த நிதிஷின் அம்மா, போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். பின் போலீஸிடம் இருந்து கோபிக்கு போன் வந்தது. நிதிஷ் அம்மா புகார் கொடுத்ததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொன்னார்கள். இதைப் பற்றி கோபி, வீட்டில் செல்வதால் பாக்கியா ஷாக் ஆனார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் கமிஷனர் அலுவலகத்திற்கு வர சொன்னதால் பாக்கியா, கோபி, எழில், செழியன் நான்கு பேருமே போனார்கள். அதற்கு பின் சுதாகரும் அவருடைய மனைவியுமே கமிஷனர் ஆபீஸ்க்கு வந்திருந்தார்கள். அப்போது நிதிஷ் அம்மா, என் மகனை அடித்ததற்காக பாக்கியா குடும்பத்தின் மீது கேஸ் போட சொன்னார். உடனே பாக்கியா, என் மகளை நிதிஷ் ரொம்பவே தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அதனால் தான் கோபத்தில் அடித்திருப்பார்கள். மற்றபடி என் மகன்கள் அடிதடிக்கு போக மாட்டார்கள் என்றார். செழியன், இனிமேல் நிதீஷ் உடன் இனியா சேர்ந்து வாழ மாட்டாள் என்றார். அதற்கு திமிராக நிதிஷ் அம்மா பேசி இருந்தார். பாக்கியா, இவர்கள் எங்கள் குடும்பத்தை ஏமாற்றி கல்யாணம் செய்து விட்டார்கள் என்றார்.
நேற்று எபிசோட்:
அதற்கு சுதாகர், சொத்துக்காக இவர்கள்தான் தன் மகள் காதலித்த விஷயத்தை மறைத்து என் மகன் போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்று தெரிந்தும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று பொய் மேல் பொய் சொன்னார்கள். பின் இரண்டு தரப்பிலும் வாக்குவாதம் அதிகமானது. கடைசியில் உயர் அதிகாரி, 2 குடும்பத்தின் மீதுமே கேஸ் போட்டால் தேவையில்லாத பிரச்சினை தான். இனிமேல் நிதிஷ் இனியாவை தொந்தரவு செய்ய மாட்டான். நீங்களுமே நிதிஷ் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இரண்டு ரெண்டு குடும்பத்திடம் கையெழுத்து வாங்கி விட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த பாக்கியா போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொன்னார்கள். இதை எல்லாம் கேட்டு இனியா ரொம்பவே ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுதாகர் வீட்டிற்கு வந்த இனியா, எதற்காக என் குடும்பத்தை இன்னும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு நிதிஷ், நிதிஷனுடைய அம்மாவும் தேவையில்லாமல் இனியாவை பேசுகிறார்கள். கோபத்தில் கொந்தளித்து இனியா, இனிமேல் என்னையும், என்னுடைய குடும்பத்தை பற்றியும் ஏதாவது பேசினீர்கள் என்றால் நான் சும்மா விடமாட்டேன். கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்கிறார். அதற்கு நிதிஷ், எங்களுக்கு எப்படியும் வெளிவர தெரியும் என்று தெனாவட்டாக பேசுகிறார். அதற்கு இனியா, நான் ரிப்போர்ட்டர். அதை வைத்து உங்களுடைய குடும்பமானத்தை வாங்குகிறேன் என்றெல்லாம் சவால் விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் சுதாகருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இனியா, கோபி இடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சுதாகர், தனக்கு தெரிந்த நபரை வரவைத்து பாக்கியாவின் ஓட்டலில் ஆர்டர் எடுத்து பிரச்சனையில் சிக்க வைக்க ஐடியா கொடுக்கிறார். இதனால் அந்த நபருமே பாக்கியாவின் ஓட்டலுக்கு சென்று சமையல் ஆர்டரை கொடுக்கிறார். அதுமட்டுமில்லாமல் அட்வான்ஸ் தொகை 50,000 கொடுக்கிறார். இதையெல்லாம் அங்கிருந்த கவுன்சிலருமே பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.